Latest Updates
-
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்! -
நார்த் இந்தியன் ஸ்டைல் தக்காளி சிக்கன் கிரேவி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன் (26 April 2026 - 02 May 2026) - இந்த வாரம் இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்
2 வாரத்தில் சட்டென தொப்பையை குறைக்க இந்த எண்ணெய்யை தொப்பையில் தடவுங்க போதும்..!
நம்மில் பலர் மிக பெரிய உணவு பிரியராக இருப்பார்கள். உணவின் மீது இருந்த காதலால் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு விட்டு பிறகு உடல் எடை கூடி விட்டதே என கவலைப்படுவோரே இங்கு அதிகம். இப்படி உடல் எடை கூடிய பின் இதனை நினைத்து வருந்தி எந்த அர்த்தமும் இல்லை. இதில் பெரிதும் பாதிக்கப்படுவது நமது வயிறு தான். நாம் அளவுக்கு அதிகமாக எடை கூடி விட்டால், கூடவே பரிசாக தொப்பையும் கிடைத்து விடும்.

தொப்பையை போக்க ஏராளமான வழிமுறைகள் இருந்தாலும் அதில் சிறந்த வழி இயற்கை முறையே. எண்ணெய்யை கொண்டு கூட நம்மால் உடல் எடையை குறைக்க முடியும் என்பதே இதில் ஆச்சரியமான விஷயம். இந்த பதிவில் எப்படி ஆலிவ் எண்ணெய்யை வைத்து உடல் எடையை குறைக்க முடியும் என்பதை பற்றி நாம் முழுமையாக தெரிந்து கொள்வோம்.

உடல் எடை கூடுகிறதா..?
ஒருவரின் உடலில் LDL எனப்படும் கெட்ட கொழுப்புகள் அதிகமாகி விட்டால் உடல் எடை அபரிமிதமாக ஏறி கொண்டே போகும். எனவே, இவற்றை உடனே கரைக்க கூடிய இயற்கை வழி முறைகளை பின்பற்றினாலே நல்ல பலன் கிடைக்கும். குறிப்பாக இந்த ஆலிவ் எண்ணெய் முறை உடல் எடை மற்றும் தொப்பையை எளிதில் குறைக்க உதவும்.

ஆலிவ் இவ்வளவு நன்மையா..?
ஆலிவ் எண்ணெய்யில் பலவிதமான நன்மைகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இதில் வைட்டமின் ஈ, பாலிபீனால்ஸ், ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் போன்றவை அதிக அளவில் உள்ளது. ஜெரிமான பிரச்சினை கொண்டோருக்கு ஆலிவ் எண்ணெய் சிறந்த மருந்தாகும். மேலும், உடல் எடையை குறைக்க ஆலிவ் பயன்படுத்தினாலே போதும்.

காலை நேரம்...
காலை நேரத்தில் எழுந்தவுடனே ஆலிவ் எண்ணெய்யை இப்படி பயன்படுத்தினால் உடல் எடையை விரைவில் குறைத்து விடலாம். மேலும், கெட்ட கொழுப்புக்களையும் இந்த வைத்தியம் கரைத்து விட கூடிய தன்மை கொண்டதாம்.
தேவையானவை :-
ஆலிவ் எண்ணெய் 1 ஸ்பூன்
எலுமிச்சை 1/2
வெதுவெதுப்பான நீர் 1 கப்

செய்முறை :-
முதலில் வெது வெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றை கலந்து கொள்ளவும். பிறகு அதனுடன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கி கொண்டு காலை வேளையில் குடித்து வரவும். இவ்வாறு 2 அல்லது 3 வாரங்கள் தொடர்ந்து குடித்து வரும்போது, உடல் எடை எவ்வளவு குறைந்துள்ளது என்பதை பார்த்து கொள்ளுங்கள்.

சிறந்த டயட் பிளான்...!
நாம் சாப்பிட கூடிய காலை உணவே நம்மை அதிக சக்தி உள்ளவராக மாற்றுகிறது. குறிப்பாக காலை உணவை சரியான அளவில் எடுத்து கொண்டால், உங்களின் உடல் எடையை சீராக வைத்து கொள்ளலாம். அதற்கு தேவையானவை....
வெள்ளரிக்காய் பாதி
சிறிது உப்பு
ஆலிவ் எண்ணெய் 1 ஸ்பூன்
ஓரிகனோ சிறிது

செய்முறை :-
முதலில் வெள்ளரிக்காயை துண்டு துண்டாக நறுக்கி கொள்ள வேண்டும். அடுத்து இதன் மேல் ஆலிவ் எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இறுதியாக சிறிது ஓரிகானோ தூவி இதனை காலை உணவாக சாப்பிட்டு வந்தால் சட்டென உடல் எடையை குறைக்க முடியும்.

ஆலிவ் மசாஜ் தெரியுமா..?
மற்ற எண்ணெய்யை கொண்டு செய்யப்படும் மசாஜை விட ஆலிவ் எண்ணெய் மசாஜ் மிகவும் சிறந்தது. இதற்கு ஒரு சில முக்கிய எண்ணெய்யின் பங்கும் தேவை...
1 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்
1 ஸ்பூன் கடுகு எண்ணெய்
2 ஸ்பூன் நல்லெண்ணெய்

செய்முறை :-
மேற்சொன்ன மூன்று எண்ணெய்களையும் நன்கு கலந்து கொண்டு, சிறிது நிமிடம் மிதமான சூடு செய்யவும். பிறகு இதனை வயிற்றில் தடவி 10 நிமிடம் வரை மசாஜ் செய்யவும். இதன்பின், அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம். இவ்வாறு வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால் தொப்பையில் உள்ள கொழுப்பு குறைந்து கச்சிதமாக இருப்பீர்கள்.

புது வித முறை..!
ஆலிவ் எண்ணெய்யை இது போன்ற மசாஜ் முறையில் பயன்படுத்தினால் கொழுப்புகள் குறையும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும், இது விரைவிலே தொப்பையை குறைத்து விடும்.
தேவையானவை :-
ஆலிவ் எண்ணெய் 2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு 1ஸ்பூன்
காபி பொடி 1 ஸ்பூன்

செய்முறை :-
சிறிது நிமிடம் ஆலிவ் எண்ணெயை சூடு செய்து பிறகு, இதனுடன் காபி, எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையை வயிற்றில் தடவி 10 நிமிடம் மசாஜ் செய்யவும். 15 நிமிடம் கழித்து ஒரு குளியலை போடலாம். இவ்வாறு வாரத்திற்கு 2 முறை செய்வதால் உடல் எடை தொப்பை குறையும்.

முக்கிய குறிப்பு...
ஆலிவ் எண்ணெய்யை அளவுக்கு அதிகமாக பயன் படுத்தினால் உடல் எடை மீண்டும், உயர தொடங்குமே தவிர, குறையாது. எனவே, பதிவில் கூறிய அளவே இதனை பயன்படுத்துவது உகந்தது. மேலும், காலை வேளையில் ஆலிவ் எண்ணெய்யை சாப்பிடுவதும் சிறந்தது தான்.
இது போன்ற பயனுள்ள புதிய தகவல்களை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.



Click it and Unblock the Notifications