அல்சர் இருப்பவர்கள் சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக் கூடாத உணவுகள்!

Posted By:
Subscribe to Boldsky

தற்போதைய அவசர உலகில் வயிற்று அல்சர் பொதுவானதாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருப்பதும், பட்டினியாக இருப்பது தான். இப்படி சாப்பிடாமல் இருப்பதால், இரைப்பையில் சுரக்கப்படும் அமிலம் கொஞ்சம் கொஞ்சமாக இரைப்பை சுவற்றை அரிக்க ஆரம்பித்து, புண்ணாக்கிவிடும். இந்நிலையே அல்சர் எனப்படுகிறது.

Diet Tips For Stomach Ulcers

இந்தியாவில் மட்டுமின்றி, அமெரிக்காவிலும் அல்சரால் ஏராளமானோர் அவஸ்தைப்படுகின்றனர். இந்த அல்சர் பிரச்சனைக்கு தற்போதைய மருத்துவத்தில் மருந்துகள் இருந்தாலும், சரியான டயட்டை மேற்கொள்வதும் மிகவும் முக்கியமாகும். அல்சரை நாம் உண்ணும் குறிப்பிட்ட சில உணவுகள் மோசமாக்கும். எனவே அவற்றைத் தவிர்க்க வேண்டும்.

அதே சமயம் சில உணவுகள் வயிற்று அல்சரை சரிசெய்ய உதவும். அந்த உணவுகளை அதிகம் உட்கொள்வது, அல்சரை விரைவில் குணமாக்க உதவும். இக்கட்டுரையில் அல்சர் இருப்பவர்களுக்கான சில டயட் டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றைப் பின்பற்றினால் நிச்சயம் அல்சரில் இருந்து விடுபடுவதோடு, அல்சர் வராமலும் தடுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அல்சர் நோயாளிகளுக்கான சில சிறந்த உணவுகள்!

அல்சர் நோயாளிகளுக்கான சில சிறந்த உணவுகள்!

கிரான்பெர்ரி

கிரான்பெர்ரியில் உள்ள குறிப்பிட்ட உட்பொருட்கள், உடலில் ஹேலிகோபேக்டர் பைலோரி வளர்ச்சியைத் தடுக்கும். இதனால் தான் அல்சர் பிரச்சனைக்கு இது சிறந்த உணவுப் பொருளாக கருதப்படுகிறது. இதனை அல்சர் நோயாளிகள் அடிக்கடி சாப்பிடுவதன் மூலம், அல்சரை விரைவில் சரிசெய்யலாம்.

பூண்டு

பூண்டு

நற்தமான பூண்டுகள் உணவின் மணத்தை அதிகரிப்பதோடு, வயிற்று அல்சரையும் விரைவில் சரிசெய்ய உதவும். இதில் உள்ள சக்திவாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஃப்ளேவோனாய்டுகள், வயிற்று புண்களை சரிசெய்ய தூண்டும். அதே சமயம் பூண்டு நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும்.

ஆப்பிள்

ஆப்பிள்

ஆப்பிள்களில் உள்ள வளமான நார்ச்சத்து மற்றும் ப்ளேவோனாய்டுகள், அல்சரை விரைவில் சரிசெய்யும் செயல்முறையைத் தூண்டி, அல்சரை உண்டாக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கும். மேலும் பல்வேறு ஆய்வுகளில் ஆப்பிளை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு வயிற்று அல்சர் வருவதற்கான வாய்ப்பு, மற்றவர்களை விட குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது. ஆகவே அன்றாடம் ஆப்பிள் சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

தயிர்

தயிர்

தயிரை அன்றாட உணவில் அல்சர் நோயாளிகள் சேர்ப்பது நல்லது. இதில் உள்ள புரோபயோடிக் என்னும் நல்ல பாக்டீரியாக்கள், அல்சரை உண்டாக்கும் கெட்ட பாக்டீரியாவை எதிர்த்துப் போராடி அழித்து, அல்சர் வராமல் தடுக்கும். மேலும் தயிரை உட்கொள்வதன் மூலம், ஆன்டிபயாடிக் மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவுகளையும் குறைக்கலாம்.

க்ரீன் டீ

க்ரீன் டீ

அல்சர் நோயாளிகள் க்ரீன் டீ குடிப்பது மிகவும் நல்லது. இதற்கு க்ரீன் டீயில் உள்ள சக்தி வாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்கள் தான் காரணம். அதோடு க்ரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் அதிகம் உள்ளது. இந்த இரண்டும் வயிற்று அல்சரை உருவாக்கும் பைலோரி பாக்டீரியாவை எதிர்த்துப் போராடும்.

அல்சர் நோயாளிகள் சாப்பிடக்கூடாத உணவுகள்

அல்சர் நோயாளிகள் சாப்பிடக்கூடாத உணவுகள்

வயிற்று அல்சரை குறிப்பிட்ட உணவுகளைத் தவிர்ப்பதன் மூலம் வேகமாக சரிசெய்யலாம். எந்த மாதிரியான உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். கீழே அல்சர் நோயாளிகள் சாப்பிடக்கூடாத உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

பொதுவான உணவுகள்

பொதுவான உணவுகள்

முதலில் ஊறுகாய், காரமான உணவுகள், மது பானங்கள் போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும். முக்கியமாக காபி, டீ, சோடா பானங்களைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவற்றில் உள்ள காப்ஃபைன் அல்சரை தீவிரமாக்கிவிடும். எனவே கவனமாக இருங்கள்.

ஸ்நாக்ஸ் மற்றும் கொழுப்புக்கள்

ஸ்நாக்ஸ் மற்றும் கொழுப்புக்கள்

க்ரீமி மிட்டாய், சாக்லேட், தேங்காய், டோனட், பாஸ்ட்ரி, பிஸ்கட், கேட், அதிக கொழுப்பு நிறைந்த பட்டர் பாப்கார்ன், வறுத்த உருளைக்கிழங்கு மற்றும் சிப்ஸ் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். மேலும் அதிகம் சீசனிங் செய்யப்பட்ட சால்ட், க்ரீமி சூப் மற்றும் கிரேவி போன்ற உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.

இறைச்சி

இறைச்சி

குறிப்பிட்ட இறைச்சிப் பொருட்கள், வயிற்று அல்சருக்கு கெட்டது. உதாரணமாக, கொழுப்பு நிறைந்த இறைச்சி, ப்ரைடு பிஷ், ப்ரைடு சிக்கன், மாட்டிறைச்சி போன்றவற்றில் கொழுப்புக்கள் ஏராளமான அளவில் நிறைந்திருப்பதால், அல்சர் நோயாளிகள் இவற்றைக் கட்டாயம் தவிர்த்தாக வேண்டும்.

பால் மற்றும் பால் பொருட்கள்

பால் மற்றும் பால் பொருட்கள்

பால் மற்றும் பால் பொருட்களான சீஸ், மில்க் க்ரீம், சாக்லேட் மில்க் மற்றும் கொழுப்பு மிக்க பால் போன்றவற்றை அல்சர் நோயாளிகள் சாப்பிடவே கூடாது. இவை அல்சரை தீவிரமாக்கி, நிலைமையை மோசமாக்கிவிடும்.

பழங்கள்

பழங்கள்

பழங்கள் உடலுக்கு ஆரோக்கியமானது தான். ஆனால் குறிப்பிட்ட பழங்கள் அல்சரை தீவிரமாக்கும். எனவே அத்திப்பழம், அன்னாசிப் பழம், ஆரஞ்சு பழம், கிரேப்ஃபுரூட், எலுமிச்சை போன்றவற்றை எக்காரணம் கொண்டும் சாப்பிட்டு விடாதீர்கள்.

காய்கறிகள்

காய்கறிகள்

காய்கறிகளில் தக்காளி, முள்ளங்கி, வெள்ளரிக்காய், காலிஃபிளவர், வெங்காயம், முட்டைக்கோஸ், ப்ராக்கோலி, சோளம் போன்றவற்றை அல்சர் இருக்கும் போது சாப்பிட வேண்டாம். முக்கியமாக அல்சர் நோயாளிகள் பச்சைக் காய்கறிகளால் ஆன காய்கறி சாலட்டை சாப்பிடக்கூடாது.

பிரட் மற்றும் தானியங்கள்

பிரட் மற்றும் தானியங்கள்

அல்சர் நோயாளிகள் அரிசி, செரில்கள், பிரட் பொருட்கள் மற்றும் உலர் பழங்கள், நட்ஸ் போன்றவற்றையும் சாப்பிடக்கூடாது. இவற்றில் உள்ள கொழுப்புக்கள் அல்சர் புண்ணை பெரிதாக்கி, அல்சரை தீவிரமாக்கிவிடும்.

உப்பு

உப்பு

பல்வேறு ஆய்வுகளில் அதிகளவு உப்பு நிறைந்த உணவுகளை உட்கொண்டால், வயிற்று அல்சர் மோசமாவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதேப் போல் வயிற்று அல்சருக்கு மருந்துகளை எடுக்கும் போதும், சோடியம் நிறைந்த உப்பு உணவைத் தவிர்க்க வேண்டும். இந்த உப்பானது கார்ன்ப்ளேக்ஸ், ப்ளூ சீஸ், உப்புக்கண்டம், சால்டட் நட்ஸ், உருளைக்கிழங்கு சிப்ஸ், கேன்களில் அடைக்கப்பட்ட சூப்புகளில் அதிகம் இருக்கும். ஆகவே இவற்றை சாப்பிட வேண்டாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Diet Tips For Stomach Ulcers

There are certain foods that can aggravate the ulcer condition and so should be avoided. At the same time, there are certain foods that accelerate the healing process. Following are some very useful diet tips for stomach ulcers.