இந்த உணவுகள் உடல் எடையை வேகமாக குறைக்கத் தூண்டும் எனத் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

இன்றைய தலைமுறையினர் அதிகம் வருத்தப்படும் ஓர் விஷயம், தங்களது உடல் எடையைக் குறித்து தான். தற்போதைய உடலுழைப்பு இல்லாத மற்றும் வேலைப்பளுமிக்க வாழ்க்கை முறையாலும், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களாலும், ஏராளமான இளைஞர்கள் உடல் பருமன் பிரச்சனையால் கஷ்டப்படுகிறார்கள். உடல் பருமன் பிரச்சனையை ஒருவர் சந்திக்க ஆரம்பித்துவிட்டால், அதைத் தொடர்ந்து இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்ற பிரச்சனைகள் தானாக வந்துவிடும்.

ஒருவர் தனது உடல் எடையைக் கட்டுப்பாட்டுடனும், பருமனடைந்த உடலை ஒல்லியாக்கவும் நினைத்தால், முதலில் செய்ய வேண்டியது உண்ணும் உணவை கவனிக்க வேண்டும். அதன் பின் அன்றாடம் உடற்பயிற்சியை தவறாமல் மேற்கொள்ள வேண்டும். இந்த இரண்டையும் ஒருவர் சரியாக பின்பற்றி வந்தாலே, உடல் எடையை சரியான அளவில் பராமரிக்கலாம். உடல் எடையைக் குறைக்க எத்தனையோ வழிகள் உள்ளன. அதில் முதன்மையான ஒன்று கலோரிகளை எரிக்கும் சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டியது.

உங்களுக்கு உடல் எடையைக் குறைக்க உதவும் உணவுகள் எவையென்று தெரியாதா? அப்படியானால் இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள். இதில் உடல் எடையைக் குறைக்கத் தூண்டும் உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இவை உடல் எடையைக் குறைப்பதோடு, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தி, இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் பிரச்சனையையும் கட்டுப்பாட்டுடன் வைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பசலைக்கீரை

பசலைக்கீரை

எடையைக் குறைக்க நினைப்போர் அடிக்கடி தங்களது உணவில் பசலைக்கீரையை சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். இதில் ஏராளமான நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த கீரையை உட்கொண்டால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருப்பதோடு, உடலின் வலிமையும் மேம்படும். அதற்கு இந்த கீரையை பச்சையாக சாலட்டுகளில் சேர்த்தோ அல்லது சூப்புகளாக தயாரித்தோ உட்கொள்ளலாம்.

வெங்காயம்

வெங்காயம்

அன்றாட உணவில் சேர்த்து வரும் வெங்காயம் கூட உடல் எடையைக் குறைக்க உதவும். வெங்காயத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதோடு மட்டுமின்றி, க்யூயர்சிடின் என்னும் பொருளும் ஏராளமான அளவில் உள்ளது. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆப்பிளிலும் இருக்கும். இது உடல் எடையைக் குறைக்கும் செயல்பாட்டைத் தூண்டிவிட்டு, வேகமாக உடல் எடையைக் குறைக்கத் தூண்டும்.

ஆளி விதை

ஆளி விதை

எடையைக் குறைக்க நினைக்கும் ஆண், பெண் என இருபாலரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஓர் ஆரோக்கியமான விதை தான் ஆளி விதை. இதை உணவுகளின் மீது தூவி சாப்பிடலாம். இப்படி தூவி சாப்பிட்டால், அதில் உள்ள நார்ச்சத்து நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுப்பதோடு, அதிகளவு உணவு உட்கொள்வதையும் தடுக்கும். அதற்கு ஆளி விதையை அன்றாடம் நீங்கள் சாப்பிடும் உணவுகளின் மீது தூவி சாப்பிடலாம்.

முலாம் பழம்

முலாம் பழம்

முலாம் பழம் கோடையில் அதிகம் கிடைக்கும் பழங்களுள் ஒன்று. இது உடல் எடையையும் குறைக்க உதவி புரியும். இதில் ஏராளமான அளவில் நார்ச்சத்து உள்ளது. நார்ச்சத்து, ஒருவரது பசியைக் கட்டுப்படுத்த அவசியமான ஒன்றாகும். இத்தகைய நார்ச்சத்து முலாம் பழத்தில் இருப்பதால், எடையைக் குறைக்க நினைக்கும் ஒவ்வொருவரும், அன்றாடம் ஒரு டம்ளர் முலாம் பழ ஜூஸைக் குடிப்பது நல்லது.

ப்ளுபெர்ரி

ப்ளுபெர்ரி

உடல் எடையைக் குறைக்க உதவும் உணவுப் பொருட்கள் எவையென்று ஆன்லைனில் தேடினால், அந்த உணவுகளின் பட்டியலில் நிச்சயம் ப்ளூபெர்ரியும் இருக்கும். இந்த ப்ளூபெர்ரி பார்ப்பதற்கு கருப்பு திராட்சை போன்று இருக்கும். இதில் கொழுப்பைக் கரைக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமான அளவில் உள்ளது. பல ஆய்வுகளிலும் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே இப்பழம் கிடைத்தால் தவறாமல் வாங்கி சாப்பிடுங்கள்.

ப்ராக்கோலி

ப்ராக்கோலி

காலிஃப்ளவர் போன்று பச்சை நிறத்தில் இருக்கும் ப்ராக்கோலி, சுவையாக இருப்பதுடன், உடல் எடையையும் குறைக்க உதவும் சூப்பர் உணவுகளுள் ஒன்று. இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது தற்போது பல்வேறு சூப்பர் மார்கெட்டுக்களில் எளிதில் கிடைக்கும். ஆகவே எடையைக் குறைக்க நினைத்தால், இதை அடிக்கடி வாங்கி சமைத்து சாப்பிடுங்கள்.

லெட்யூஸ்

லெட்யூஸ்

பல்வேறு சாலட்டுக்களில் சேர்க்கப்படும் ஓர் இலைக் காய்கறி தான் லெட்யூஸ். இந்த லெட்யூஸ் இல்லாத எந்த ஒரு காய்கறி சாலட்டும் முழுமையடையாது. இந்த லெட்யூஸில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இதை உங்களது சாலட்டுடன் சேர்த்துக் கொண்டால், உடலில் உள்ள கலோரிகளை எரிக்க உதவுவதோடு, நீண்ட நேரம் பசி எடுக்காமலும் தடுக்கும்.

கேரட்

கேரட்

கேரட்டுகள் பச்சையாக சாப்பிட ஏற்ற ஓர் அற்புதமான மற்றும் சுவையான காய்கறி. இது எடையைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். இதில் கலோரிகள் மிகவும் குறைவு. எனவே இந்த கேரட்டை அன்றாடம் ஜூஸ் வடிவிலோ அல்லது பச்சையாகவோ சாப்பிட்டு வந்தால், இது வேகமாக உடல் எடையைக் குறைக்க உதவும்.

ஓட்ஸ்

ஓட்ஸ்

பழங்கள் மற்றும் காய்கறிகள் மட்டும் தான் உடல் எடையைக் குறைக்க உதவும் என்று நினைக்க வேண்டாம். முழு தானியங்களும் உடல் எடையைக் குறைக்க உதவும். அதில் ஓட்ஸ் உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். இது சிறந்த காலை உணவாக மட்டும் இல்லாமல், பசி எடுக்கும் போது சாப்பிட ஏற்ற ஸ்நாக்ஸாகவும் இருக்கும்.

வெள்ளை பீன்ஸ்

வெள்ளை பீன்ஸ்

வெள்ளை நிற பீன்ஸ் உடல் எடையைக் குறைக்கும் நன்மைகளைக் கொண்டுள்ளது உங்களுக்குத் தெரியுமா? பல ஆய்வுகளிலும் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே வெள்ளை நிற காராமணியை சூப் தயாரித்தோ, குழம்பு வைத்தோ அல்லது வேக வைத்து சாலட்டாகவோ சாப்பிடுங்கள்.

சிக்கன் நெஞ்சுக்கறி

சிக்கன் நெஞ்சுக்கறி

சிக்கனின் நெஞ்சுக்கறியில் ஏராளமான அளவில் புரோட்டீன் நிறைந்துள்ளது. ஆகவே இதை சாப்பிட்டால் பசி விரைவில் கட்டுப்படுவதோடு, நீண்ட நேரம் பசி எடுக்காமலும் இருக்கும். முக்கியமாக சிக்கனை சாப்பிடும் போது, அதன் தோலை நீக்கிவிட்டு சாப்பிட்டுங்கள். ஏனெனில் தோலில் கொழுப்புக்கள் அதிகம் உள்ளது. இது உடல் பருமனைத் தான் உண்டாக்கும்.

மாதுளை

மாதுளை

மாதுளை சுவையான மற்றும் ஏராளமான ஊட்டச்சத்துக்களைக் கொண்ட ஓர் அற்புதமான பழம். முக்கியமாக இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. உடல் எடையைக் குறைக்க நினைப்போர், இதை தினமும் சாப்பிட்டு வந்தால், உடல் எடை குறைவதைக் காணலாம். வேண்டுமானால் மாதுளையை ஜூஸ் வடிவிலும் எடுக்கலாம். மேலும் மாதுளை உடலின் ஆற்றலை அதிகரித்து, சுறுசுறுப்புடன் செயல்பட உதவும்.

ஆரஞ்சு

ஆரஞ்சு

ஆரஞ்சு புளிப்பு மற்றும் இனிப்பு கலந்த ஓர் வித்தியாசமான சுவையைக் கொண்ட பழம். நம் அனைவருக்குமே ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகம் இருப்பது தெரியும். ஆனால் இது உடல் எடையைக் குறைக்க உதவும் பழங்களுள் ஒன்று என்பது தெரியுமா? இந்த பழத்திலும் நார்ச்சத்து அதிகமாகவும், கலோரிகள் மிகவும் குறைவாகவும் உள்ளது. ஆகவே இந்த பழத்தை தினமும் ஒன்று என சாப்பிட்டு வாருங்கள்.

ஆப்பிள்

ஆப்பிள்

அனைத்து காலங்களிலும் கிடைக்கும் ஓர் அற்புதமான உணவுப் பொருள் தான் ஆப்பிள். இது எடையைக் குறைப்போருக்கு மிகச்சிறந்த ஸ்நாக்ஸாகவும் இருக்கும். மேலும் ஆப்பிளில் பெக்டின் என்னும் நார்ச்சத்துடன், பைட்டோ நியூட்ரியண்ட்டுகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. ஆகவே இதை சாப்பிட்டால் உடல் எடை குறைவதோடு, உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

வால்நட்ஸ்

வால்நட்ஸ்

வால்நட்ஸ் உடல் எடையைக் குறைக்க உதவுவதோடு மட்டுமின்றி, கொலஸ்ட்ராலைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்வதிலும் முக்கிய பங்கை வகிக்கிறது. ஊட்டச்சத்து நிபுணர்கள், தினமும் ஒரு கையளவு வால்நட்ஸை சாப்பிட பரிந்துரைக்கிறார்கள். ஆகவே இந்த வால்நட்ஸை அன்றாடம் சாலட், செரில்களில் சேர்த்தோ அல்லது டிவி பார்க்கும் போதோ, புத்தகம் படிக்கும் போதோ ஸ்நாக்ஸாக சாப்பிடுங்கள்.

அவகேடோ

அவகேடோ

அவகேடோ உடலின் எடையைக் குறைக்க உதவுவதோடு, உடலை ஆற்றலுடன் வைத்துக் கொள்ளவும் உதவும். அதோடு இது பசியைக் கட்டுப்படுத்தவும் செய்யும். ஆகவே உங்களுக்கு அடிக்கடி பசி எடுத்தால், ஒரு அவகேடோவை மில்க் ஷேக் தயாரித்து குடியுங்கள். இதனால் 2 மணிநேரத்திற்கு பசி எடுக்காமல் இருக்கும். ஒருவரது பசி கட்டுப்பட்டால், உடல் எடை அதிகரிப்பது தடுக்கப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Delicious Superfoods For Weight Loss

Want to reduce your weight? Here are some delicious superfoods for weight loss. Read on to know more...
Story first published: Thursday, March 1, 2018, 12:58 [IST]