நடிகை தீபிகா படுகோனே ஸ்லிம்மாகவும், செக்ஸியாகவும் இருப்பதன் ரகசியம் என்ன தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

பாலிவுட்டில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளுள் ஒருவர் தான் தீபிகா படுகோனே. பாலிவுட்டிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகையும் இவர் தான். இவர் தனது அற்புதமான நடிப்பாலும், அழகிய தோற்றத்தாலும் பாலிவுட்டில் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் தனது நடிப்புத் திறமையால் ஹாலிவுட்டிலும் தனது காலடியைப் பதித்துவிட்டார்.

Deepika Padukone Reveals 10 Diet And Workout Tips For Her Look In Padmavat

சமீபத்தில் பெரும் பிரச்சனைகளுக்குப் பிறகு, இவரது பத்மாவத் என்னும் திரைப்படம் வெளிவந்தது. இந்த திரைப்பட கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு தீபிகா படுகோனே, ஸ்லிம்மாகவும், கவர்ச்சிகரமானதாகவும் தனது உடலமைப்பைப் பராமரித்திருந்தார். இப்படிப்பட்ட உடலமைப்பைப் பெறுவதற்கு நிச்சயம் தீபிகா படுகோனே கடுமையான டயட் மற்றும் வாழ்க்கை முறையை மேற்கொண்டிருப்பார் என்பது நன்கு தெரியும்.

முக்கியமாக தீபிகா படுகோனே சிக்கென்று ஸ்லிம்மாக இருப்பதற்கு அவரது டயட் மட்டுமின்றி, உடற்பயிற்சிகளும் தான் முக்கியக் காரணம். இவர் கார்டியோ, பளு தூக்கும் பயிற்சி மற்றும் யோகா பயிற்சி என மூன்றிலும் தினமும் தவறாமல் ஈடுபடுவார். தீபிகா படுகோனேவற்கு பேட்மிண்டன் என்பது மிகவும் விருப்பமான விளையாட்டு. இவர் அடிக்கடி பேட்மிண்டன் விளையாடுவார்.

இங்கு பத்மாவத் திரைப்படத்திற்காக தீபிகா படுகோனே மேற்கொண்ட டயட் மற்றும் ஃபிட்னஸ் ரகசியங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
யோகா

யோகா

தீபிகா படுகோனே யோகாவின் மீது அலாதியான பிரியம் கொண்டவர் எனலாம். இவரது உடற்பயிற்சி திட்டத்தில், அனைத்து வகையான உடற்பயிற்சிகளும் இருக்கும். இவரைப் பொறுத்த வரை, யோகா ஒருவரது மனதையும் உடலையும் புத்துணர்ச்சியுடனும், தெளிவாகவும் வைத்துக் கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தீபிகா படுகோனே தினமும் சூரிய நமஸ்கார், பிராணயாமம் போன்றவற்றையும் செய்வாராம்.

நடனப் பயிற்சி

நடனப் பயிற்சி

தீபிகா படுகோனேவிற்கு நடனம் என்றால் கொள்ளைப் பிரியமாம். இவரது ஃபிட்னஸ் செயல்களில் நடனம் முக்கிய பங்கை வகிக்குமாம். எப்போதெல்லாம் இவர் ஜிம் செல்லவில்லையோ, அப்போதெல்லாம் நடன வகுப்பு செல்வாராம். இவருக்கு பல வகை நடனங்களான பரதநாட்டியம், கதக் மற்றும் ஜாஸ் போன்றவை ரொம்ப பிடிக்குமாம்.

கார்டியோ பயிற்சிகள்

கார்டியோ பயிற்சிகள்

தீபிகா ப்ரீ ஹேண்ட் வெயிட்டுகள் அதிகம் செய்வாராம். மேலும் ஸ்ட்ரெட்சிங் பயிற்சிகளை 10-20 முறை என 4-5 செட்டுகள் செய்வாராம். இவர் ரன்னிங் பயிற்சிகளை மேற்கொள்ளமாட்டாராம். இவர் பெரும்பாலும் எடை குறைவான பயிற்சிகளைத் தான் மேற்கொள்வாராம். இவர் மேற்கொள்ளும் உடற்பயிற்சிகள் சரியான உத்தியைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்துகின்றன, இதுவே அவரது உடலில் மாயங்களை ஏற்படுத்துகின்றன.

ஆரோக்கியமான காலை உணவுகள்

ஆரோக்கியமான காலை உணவுகள்

தீபிகா படுகோனே நல்ல நற்பதமான, ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்ண பரிந்துரைக்கிறார். இவரது காலை உணவானது கொழுப்பு குறைவான பால், 2 முட்டையின் வெள்ளைக்கரு அல்லது தோசை, இட்லி மற்றும் ரவை உப்புமா போன்றவற்றைக் கொண்டிருக்கும். இவர் தென்னிந்தியர் என்பதால், தென்னிந்திய உணவுகளையே உண்ண விரும்புவார்.

மிதமான இரவு உணவு

மிதமான இரவு உணவு

தீபிகா படுகோனே எப்போதுமே கார்போஹைட்ரேட் மற்றும் புரோட்டீன்கள் சரியான அளவில் இருக்குமாறான டயட்டை தான் மேற்கொள்வாராம். அதிலும் இரவில் லைட் ஃபுட் தான் சாப்பிடுவாராம். இவருக்கு சாதம் ரொம்ப பிடிக்கும், ஆனால் இரவு நேரத்தில் தொடவேமாட்டாராம். அதேப் போல் இவர் இரவு நேரத்தில் அசைவ உணவை உட்கொள்ளமாட்டாராம். முக்கியமாக இரவு நேரத்தில் இவர் சப்பாத்தி, காய்கறி சாலட், ரெய்தா போன்றவற்றை தான் சாப்பிடுவாராம்.

சீரான இடைவேளை

சீரான இடைவேளை

தீபிகா படுகோனே ஒவ்வொரு 2 மணிநேரத்திற்கும் பழங்கள் அல்லது நற்பதமான பழச்சாறுகளை உட்கொள்வாராம். மாலை வேளையில் பில்டர் காபி, நட்ஸ் மற்றும் உலர் பழங்களை சாப்பிடுவாராம். இவருக்கு அழகிய உடலமைப்புடன் இருப்பதற்கான ட்ரிக்குகள் நன்கு தெரியும் மற்றும் எப்படி சமன் செய்வது என்பதும் நன்கு தெரியும்.

பட்டினி கூடாது

பட்டினி கூடாது

தீபிகா படுகோனே, உடல் எடையைக் குறைப்பதற்கு பட்டினி இருக்க வேண்டிய அவசியமில்லை, மாறாக நல்ல ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டாலே போதும் என அறிவுறுத்துகிறார். மேலும் ஒருவர் உடல் எடையைக் குறைக்க வேண்டுமானால், அவரது உடல் வாகுக்கு ஏற்றவாறான சரியான உணவைத் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். அதற்கு சரியான உடற்பயிற்சியாளரின் அறிவுரை அவசியம் என்றும் கூறுகிறார்.

வார இறுதியில் இனிப்பு

வார இறுதியில் இனிப்பு

தீபிகா படுகோனேவிற்கு எப்போதுமே ஸ்வீட் என்றால் பிடிக்கும். சில நேரங்களில் ஸ்வீட்டுகள் நல்லது என்றும் அவர் கூறுகிறார். மேலும் இவர் எப்போதாவது ஒருமுறை சிறிதளவில் இனிப்பு எடுப்பதில் தவறு ஏதும் இல்லை என்றும் கூறுகிறார். அதோடு தீபிகாவிற்கு சாக்லேட் என்றால் பிடிக்குமாம். ஆகவே இதை வாரம் ஒருமுறையாவது சிறிது சுவைத்துவிடுவாராம்.

பில்லேட்ஸ் மற்றும் ஸ்ட்ரெட்ச்சிங்

பில்லேட்ஸ் மற்றும் ஸ்ட்ரெட்ச்சிங்

தீபிகாவின் ட்ரெயினர் யாஸ்மின் கராச்சிவாலா, இவருக்கு பில்லேட்ஸ் மற்றும் ஸ்ட்ரெட்சிங் பயிற்சிகளை சொல்லிக் கொடுத்துள்ளார். இதனை தீபிகா தினந்தோறும் தவறாமல் செய்வாராம். பில்லேட்ஸ் என்னும் பயிற்சி, எந்த ஒரு உபகரணங்களின் உதவியின்றியும் உடலின் நெகிழ்வுத்தன்மையைப் பராமரிக்க ஏற்ற பயிற்சியாகும்.

ஆப்ஸ்

ஆப்ஸ்

தீபிகா படுகோனே, தட்டையான வயிறு வேண்டுமானால் ஆப்ஸ் பயிற்சிகளை தவறாமல் மேற்கொள்ள வேண்டும் என்றும், ஜங்க் உணவுகளைத் தவிர்க்க வேண்டும் எனவும் கூறுகிறார். ஆப்ஸ் பயிற்சியை ஒருவர் தினந்தோறும் செய்து வந்தால், அதன் மூலம் வயிறு, கை, தொடை, பிட்டம் போன்ற பகுதிகளில் விரைவில் நல்ல வடிவம் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Deepika Padukone Reveals 10 Diet And Workout Tips For Her Look In Padmavat

Deepika Padukones lean legs and washboard abs is the result of a disciplined workout routine. She shares her diet and workout tips for her role in Padmavat. Read the article here to know more about her diet secrets.
Subscribe Newsletter