Latest Updates
-
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்! -
நார்த் இந்தியன் ஸ்டைல் தக்காளி சிக்கன் கிரேவி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன் (26 April 2026 - 02 May 2026) - இந்த வாரம் இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும் -
இன்றைய ராசிபலன் 26 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஜாலியான நாளாக இருக்குமாம் -
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்!
வெறும் 14 நாட்களிலே இளநீரை வைத்து தொப்பையை குறைத்து விடலாம்..! எப்படினு தெரிஞ்சிக்கோங்க...
உடல் பருமனால் ஒரு பக்கம் நாம் அவதிப்பட்டாலும், அதை விட மோசமான விளைவை இந்த தொப்பை தருகிறது. உடுத்தும் உடை முதல், உறங்கும் நேரம் வரை இந்த தொப்பை நம்மை படாதபாடு படுத்தி விடுகிறது. தொப்பையை குறைக்க வேறு வழியே இல்லையா..? என புலம்புபவர்களுக்கு ஒரு சிறந்த வழி உள்ளது.

அதவாது, வெறும் 2 வாரம் தொடர்ந்து இளநீர் குடித்து வந்தால் தொப்பை வந்த இடம் தெரியாமல் போய் விடும் என உடல் எடை குறைப்பு நிபுணர்கள் கூறுகின்றனர். இது எப்படி சாத்தியமாகும் என்பதை இனி அறிந்து கொள்வோம்.

தொப்பை பிரச்சினை..!
பலருக்கு இளம் வயதிலே இந்த தொப்பை போடும் பிரச்சினை வந்திருக்க கூடும். எங்கு சென்றாலும் நம் தொப்பை தான் கேலி கிண்டலுக்குரிய ஒன்றாக இருக்கும். இது ஆண்களுக்கு மட்டுமில்லை. பெண்களுக்கும் இதே நிலை தான். இந்த நிலை தொடர்ந்தால் நிச்சயம் மன உளைச்சலுக்கும் நாம் ஆளாக நேரிடும்.

அமிர்தமான இளநீர்..!
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த இளநீர் என்றாலே ஒரு தனி காதல் தான். மிகவும் சுவையாக இருக்க கூடிய இந்த இளநீரை எவ்வளவு வேண்டுமானாலும் குடிக்கலாம் என்ற எண்ணம் எப்போதும் நமக்கு தோன்றும். இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்களும், தாதுக்களும் உள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கு நன்கு உதவும்.

இது உண்மையா..?
வெறும் இளநீரால் தொப்பையை குறைக்க முடியுமா..? என்கிற சந்தேகம் உங்களுக்கு இருப்பது நியாயம் தான். ஆனால், இது தான் உண்மை. இளநீரால் உங்களது தொப்பையை 2 வாரத்திலே குறைக்க முடியும். இதற்கு முழு காரணம் இதில் உள்ள குறைந்த படியான கலோரிகள் தான். தினமும் இளநீர் குடித்து வந்தால் தொப்பையை காணாமல் செய்து விடலாம்.

கொலஸ்ட்ராலை குறைக்கும் நீர்..!
உடலில் அதிக அளவில் கெட்ட கொலஸ்ட்ரால் இருந்தால் அவை இதயம் சார்ந்த பிரச்சினைகளையும், உடல் நல குறைபாட்டையும் தரவல்லது. ஆனால், நீங்கள் இளநீர் குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அத்துடன் சீரான ரத்த ஓட்டத்தையும் இது தருமாம்.

செரிமான கோளாறுகளுக்கு டாட்..!
நீங்கள் தினமும் இளநீர் குடித்து வந்தால் நாட்பட்ட செரிமான கோளாறுகள் குணமாகி விடுமாம். உலக சுகாதார நிறுவனம் (WHO) இளநீர் குடித்தால் வயிற்று பிரச்சினைகள் தீர்வுக்கு வரும் என கூறியுள்ளது. மலச்சிக்கலால் இத்தனை நாட்கள் நீங்கள் அவதிப்பட்டிருந்தால் உங்களுக்கான அருமருந்து இளநீர் தான்.

ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த...
ரத்த அழுத்தம் அதிகம் கொண்டோருக்கு பல வித உடல் சார்ந்த பிரச்சினைகள் ஒன்றன் பின் ஒன்றனாக வர தொடங்கும். ஆனால், இதனை சரி செய்ய இளநீர் அற்புத மருந்தாக உதவும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும், சீரான உடல் செயல்பாட்டையும் இளநீர் தருமாம்.

வயதாவதை தடுக்கும்..!
நீங்கள் இளநீர் குடித்து வருவதால் இந்த அற்புத பலன் உங்களுக்கு கிடைக்கும். cytokinins என்கிற மூல பொருள் இயற்கையாகவே இளநீரில் உள்ளதாம். எனவே, இவை செல்கள் சிதைவடைவதை தடுத்த வயதாவதை தள்ளி போடுகிறது. மேலும், புற்றுநோய், வயது சார்ந்த நோய்களையும் இது தடுக்கிறதாம்.

நீர் தட்டுப்பாடு..!
உடலில் நீர்சத்து குறைவாக இருந்தால் உடல் எந்த வேலையையும் செய்ய முடியாத நிலைக்கு வந்து விடும். இந்த நிலை தொடர்ந்தால் மரணம் கூட ஏற்படலாம். நீர்ச்சத்தை வாரி வழங்கும் தன்மை இந்த இளநீருக்கு உள்ளது. இளநீரில் 95% சுத்தமான நீர் தான் இருக்கிறது. ஆதலாம் தினமும் 1 இளநீர் குடித்து வந்தால் நீர்சத்து குறைபாடு நீங்கி விடும்.

மகிழ்ச்சியான சூழல்
இவ்வளவு நாட்கள் தொப்பை பிரச்சினை, உடல் பருமன் ஆகியவற்றால் சோகத்தில் மூழ்கிய உங்களை இந்த இளநீர் மகிழ்வாக வைத்து கொள்ளும். இதில் உள்ள வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் மன உளைச்சலை குறைத்து சந்தோஷ மனநிலையை தரும். மேலும், மெக்னீசியம் இதில் அதிகம் நிறைந்திருப்பதால் செரோடோனின் ஹார்மோனின் உற்பத்தியை அதிகரிக்கும்.

எவ்வளவு குடிக்கலாம்..?
தினமும் 1 இளநீர் குடிப்பது தொப்பையை குறைக்க நன்கு உதவும். காலையில், மதிய நேரத்தில், உடற்பயிற்சிக்கு பின் ஆகிய தருணத்தில் இளநீர் பருகுவது சிறந்தது. இளநீரை தொடர்ந்து 14 நாட்கள் குடித்து வந்தால் தொப்பையை குறைத்து விட முடியும். மேலும், உடல் எடையால் அவதிப்படுவோருக்கு இது சிறந்த வழியாக இருக்கும்.



Click it and Unblock the Notifications