Latest Updates
-
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபி - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்
ஒருவரது உடல் எடையைக் குறைக்க உதவி புரியும் பழங்கள்!
இன்றைய உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறையாலும், ஆரோக்கியமற்ற உணவுகள் நம்மை சூழ்ந்திருப்பதாலும், பலர் உடல் பருமனால் கஷ்டப்படுகிறார்கள். தன் உயரத்திற்கு ஏற்ற உடல் எடையுடன் இல்லாதவர்கள், தங்களது அன்றாட செயல்களைக் கூட செய்ய முடியாமல் சிரமப்படுகிறார்கள். எனவே தங்களது உடல் எடையைக் குறைப்பதற்கு எந்த ஒரு கஷ்டமான முயற்சிகளை மேற்கொள்ளவும் தயங்குவதில்லை. ஆனால் உடல் எடையை சிரமப்பட்டு தான் குறைக்க வேண்டும் என்பதில்லை.
சொல்லப்போனால், உடல் எடையை ஸ்மார்ட்டான வழியில் குறைக்க முயற்சிப்பதன் மூலம், உடல் எடை குறைவதோடு, உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். உடல் எடையைக் குறைப்பதற்கு பல வழிகள் உள்ளன. அதில் சரியான பழங்களைத் தேர்ந்தெடுத்து உட்கொண்டு வருவதன் மூலம், உடல் எடையை ஆரோக்கியமான வழியில் குறைக்கலாம். பழங்களை ஜூஸ் வடிவில் எடுப்பதை விட, முழுமையாக உட்கொள்வதன் மூலம், அதில் உள்ள முழு சத்துக்களையும் பெற முடியும் மற்றும் பசியுணர்வும் கட்டுப்படுத்தப்படும்.

நீங்கள் உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளீர்களா? உங்களுக்கு எந்த பழங்களை சாப்பிட்டால், உடல் எடையைக் குறைக்கலாம் என்று தெரியாதா? அப்படியானால் இக்கட்டுரை உங்களுக்கு மிகவும் உபயோகமானதாக இருக்கும். ஏனென்றால், கீழே உடல் எடையைக் குறைக்க மிகவும் உதவியாக இருக்கும் அற்புத பழங்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து, அந்த பழங்களை உட்கொண்டு வந்தால், ஆரோக்கியம் பாதிப்படையாமல் உடல் எடையைக் குறைக்கலாம்.

ஆப்பிள்
உணவுகளின் இடைவெளியில் ஏற்படும் பசியுணர்வைக் கட்டுப்படுத்த வேண்டுமானால், ஆப்பிளை சாப்பிடுங்கள். ஆப்பிளில் நார்ச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் நீர்ச்சத்து போன்றவை அதிகளவில் உள்ளது. ஆப்பிளை சாப்பிட்டால், இது நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கும் மற்றும் அளவுக்கு அதிகமாக உணவு உண்பதையும் தடுக்கும்.

அவகேடோ
உடல் எடையைக் குறைக்க உதவும் சிறப்பான பழங்களுள் ஒன்று அவகேடோ. இந்த பழத்தில் ஒமேகா-9 கொழுப்பு அமிலங்கள் ஏராளமான அளவில் உள்ளது. இந்த பழம் கொழுப்புக்களைக் கரைக்கும் மற்றும் உடலின் மெட்டபாலிசத்தை வேகப்படுத்தி, ஆற்றலை மேம்படுத்தும். மேலும் இப்பழத்தில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளும் நிறைந்துள்ளன. ஆகவே இந்த பழத்தை தினமும் ஒன்று சாப்பிட முயற்சி செய்யுங்கள். இதனால் இது உடல் எடையை வேகமாக குறைக்க உதவும். அவகேடோ பழத்தை அப்படியே சாப்பிட முடியாது என்பதால், அதை மில்க் ஷேக் வடிவில் வேண்டுமானாலும் எடுக்கலாம்.

பெர்ரிப் பழங்கள்
பெர்ரிப் பழங்களான ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, கிரான்பெர்ரி, ராஸ்ப்பெர்ரி போன்றவற்றில் கார்போஹைட்ரேட் மிகவும் குறைவு. இப்பழங்கள் உடலில் இருந்து டாக்ஸின்களை வெளியேற்றுவதில் சிறப்பானவைகளாகும். மேலும் இவை குடலியக்கத்திற்கு மற்றும் செரிமானத்திற்கு நல்லது. ப்ளுபெர்ரிப் பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம். இப்பழம் கொழுப்புச் செல்களை எதிர்க்கும். அதிலும் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் அடிகோநெக்டின் மற்றும் லிப்தின் போன்ற ஹார்மோன்களின் உற்பத்தியை ஊக்குவித்து, கொழுப்புக்களை எரிக்க உதவுவதோடு, மெட்டபாலிசத்தையும் மேம்படுத்தும்.

வாழைப்பழம்
வாழைப்பத்தில் கரையக்கூடிய ஸ்டார்ச்சுகள் அதிகம் உள்ளது. வாழைப்பழத்தில் வைட்டமின் பி6 அதிகம் உள்ளது. இது நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுவதோடு, இதய நோய்களின் அபாயத்தையும் குறைக்கும். மேலும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டாலே வயிறு நிறைந்த உணர்வைப் பெறக்கூடும். அதிலும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்ட பின் ஒரு டம்ளர் நீரைக் குடித்தால், கண்ட உணவுகளின் மீது ஆசையே வராது. வாழைப்பழம் கொழுப்புக்களை வேகமாக கரைப்பதால், உடலுக்குத் தேவையான ஆற்றலை உடனடியாக வழங்கும்.

கிரேப்ஃபுரூட்
சமீபத்திய பல ஆய்வுகளில், கிரேப்ஃபுரூட்டை தினமும் உட்கொண்டு வந்தவர்கள், இப்பழத்தை சாப்பிடாதவர்களை விட அதிக அளவில் உடல் எடையைக் குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்த பழத்தில் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம். எனவே இதை காலை உணவின் போது எடுப்பது சிறப்பானது.

கிவி
கிவி இனிப்பு மற்றும் புளிப்பு கலந்த மிகவும் சுவையான பழம். இந்த பழத்தில் நார்ச்சத்து ஏராளமாக உள்ளதால், இது உடல் எடையைக் குறைக்க உதவி புரியும். கிவிப் பழத்தில் உள்ள கருப்பு விதைகளில் கரையாத நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இப்பழம் செரிமானத்தை சீராக்க உதவும். கிவியில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து, நீண்ட நேரம் பசி எடுக்காமல் வயிற்றை நிரப்பி வைத்திருக்கும். இதனால் எடையைக் குறைக்க நினைப்போருக்கு இது சிறந்த பழமாக கருதப்படுகிறது.

எலுமிச்சை
எடையைக் குறைப்பதற்கு எலுமிச்சை மற்றும் தேன் கலவை சிறப்பான ஒன்றாகும். எலுமிச்சை உடல் எடையைப் பராமரிக்க உதவும் பழம் மற்றும் இதில் வைட்டமின் பி, ரிபோஃப்ளேவின் மற்றும் கனிமச்சத்துக்களான மக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் நிரம்பியுள்ளது. இப்பழத்தில் வைட்டமின் சி சத்தும் அதிகம் உள்ளது. எனவே இந்த எலுமிச்சம் பழத்தை சாறு எடுத்து அதிகாலையில் வெதுவெதுப்பான நீருடன் சேர்த்து தேன் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடல் எடை வேகமாக குறைவதோடு, உடலும் சுத்தமாக இருக்கும்.

ஆரஞ்சு
ஆரஞ்சு பழத்தில் நீர்ச்சத்து அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் உள்ளது. இது உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு சிறப்பான பழம் எனலாம். இது ஒருவரது பசியுணர்வைக் கட்டுப்படுத்துவதோடு, உடல் எடையைக் குறைக்கவும் உதவும். இந்த பழத்தை அன்றாட டயட்டில் சேர்த்து வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றத்தை விரைவில் காண முடியும்.

மாதுளை
மாதுளையின் விதைகள் உடல் எடையைக் குறைக்க பெரிதுவும் உதவியாக இருக்கும். இது மிகவும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது மற்றும் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து ஏராளமாக உள்ளது. இப்பழத்தில் கலோரிகளும் குறைவு. எனவே எடையைக் குறைக்க நினைப்போர் மாதுளையை ஸ்நாக்ஸ் வேளையில் உட்கொண்டு வந்தால், எதிர்பார்த்த ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

அன்னாசி
எடையைக் குறைக்க உதவும் மற்றொரு அற்புதமான பழம் அன்னாசி. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், கனிமச்சத்துக்கள், நொதிகள் போன்றவை அதிகம் உள்ளது. இது உடலில் உள்ள கொழுப்புக்களைப் போக்கும் என்பதால், எடையைக் குறைக்க நினைப்போருக்கு சிறந்த பழமாக கருதப்படுகிறது.

பேரிக்காய்
பேரிக்காயும் உடல் எடையைக் குறைக்க உதவி புரியும். இதில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், இது நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுப்பதோடு, அளவுக்கு அதிகமாக உணவு உண்பதையும் தடுக்கும். இந்த பழத்திற்கு கொலஸ்ட்ராலைக் குறைக்கும் திறன் உள்ளது மற்றும் இது இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது. ஏனெனில் இந்த பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளது.

பீச்
பீச் பழத்தில் கலோரிகள் குறைவு மற்றும் நீர்ச்சத்து ஏராளம். இதனால் இது எடையைக் குறைக்க உதவும் சிறப்பான பழமாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த பழத்தில் பொட்டாசியம் மற்றும் வைட்டமின்கள் அதிகம். அதோடு இந்த பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வளமான அளவில் உள்ளதால், இது உடல் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்துக் கொள்ளும்.

தர்பூசணி
தர்பூசணி எடையைக் குறைக்க உதவுவதில் சிறப்பான பழம். ஏனெனில் இதில் கொழுப்புச்சத்தே இல்லை. ஒரு டம்ளர் தர்பூசணி ஜூஸ் குடித்தால், அதிகப்படியாக 50 கலோரிகள் தான் உடலுக்கு கிடைக்கும். மேலும் இப்பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி-யுடன் லைகோபைன் ஏராளமாக உள்ளது. இதனால் இது புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பதோடு, இதய நோயின் அபாயத்தையும் தடுக்கும்.



Click it and Unblock the Notifications
