For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்களே நீங்கள் எந்த வயதில் இருக்கிறீர்கள்? நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

பெண்கள் ஒரு வித்தியாசமான கடின உழைப்பாளி.அவள் தான் நம் வாழ்வை மிகவும் பயனுள்ளதாக மாற்றுகிறாள்.அவள் ஒட்டு மொத்த அன்பு,பாசம் ஆகியவற்றிற்கு மூல ஆதாரமாக உள்ளாள்

By Peveena Murugesan
|

ஒரு பெண்ணின் வாழ்க்கை முழுவதும் அவளது ஆரோக்கியம் ஒரு சவலாகவே உள்ளது.ஏனெனில் பல பெண்களுக்கு PCOD/PCOS,வெள்ளைப்படுதல்,திசுக்கட்டிகள் ஆகியவை உள்ளன.அவை அனைத்தும் உடலின் உயிர் வேதியியல் மாற்றங்கள் மூலமாக ஏற்படுகிறது. பெண்களின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்தும் மிகவும் மெதுவான மற்றும் நுட்பமான மாற்றத்தை ஏற்படுத்தும்.

Women body needs replenishment

கீழே பரிந்துரைக்கப்பட்டுள்ளவை அனைத்தும் மிகவும் எளிதான மற்றும் எளிதில் அடைய கூடியவை ஆகும்.இது பிற்காலத்தில் அவர்களின் வாழ்நாள் முழுவதும் எளிதாகத் தொடர்ந்து அவர்களுக்கு ஆரோக்கியத்தைத் தந்து மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

இந்த நோக்கத்தில் பெண்கள் 3 குழுக்களாகப் பிரிக்கப்படுகின்றனர்.அவற்றைப் பற்றி காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குழு -1 (12- 28 வயது வரை ):

குழு -1 (12- 28 வயது வரை ):

இந்த வகையில் உள்ள பெண்கள் பெரும்பாலும் முகப்பரு,ஹார்மோன் இன்பாலன்ஸ்,தவறிய மாதவிடாய்,ஒழுங்கற்ற மாதவிடாய்,ரத்த சோகை,முகத்தில் முடி மற்றும் தைராய்டு கோளாறுகள் ஆகிய பிரச்சனைகளால் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த வயதிற்குட்பட்ட பெண்கள் பெரும்பாலும் சமூக மீடியாக்களில் அதிக நேரம் செலவழிக்கின்றனர்.இதனால் தூக்கம் கெட்டு இரவில் தூங்காமல் பகலில் தூங்குகின்றனர். இதன்மூலம் உடல் எடை கூடுகிறது.

இது ஒரு ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை.இது அவர்களை அவர்களே இந்த வாழ்க்கை முறையில் சிக்கிக் கொள்கின்றனர்.

முக்கியமாக பரிந்துரைக்கப்படுபவை:

முக்கியமாக பரிந்துரைக்கப்படுபவை:

மிகவும் சத்தான உணவு,ஏரோபிக் உடற்பயிற்சி மற்றும் எளிய எடை பயிற்சி,ஆரோக்கியமான தூக்கம் மற்றும் குறிப்பிட்ட நேரத்தை வரையறுத்து அந்த நேரத்திற்குள் தினமும் உறங்குதல்.இதனை பின்பற்றுவதால் சருமம் ஒளிர்ந்து,முடியின் வளர்ச்சி மற்றும் உடலை குண்டாக்காமல் சரியான எடையுடன் வைக்கிறது.

குழு - 2 - (28-47 வயது வரை) :

குழு - 2 - (28-47 வயது வரை) :

இந்த வகை பெண்கள் மிகவும் களைப்பாக தென்படுவர்.ஏனெனில் இவர்கள் ஒரே நேரத்தில் பல்வேறு வேலையை செய்யக்கூடிய திறமை வாய்ந்தவர்கள்.இவர்கள் பெரும்பாலும் நார்த்திசுக்கட்டிகள்,வீங்கி பருத்து சுருண்ட நரம்புகள்,ஆஸ்டியோபோரோசிஸ்,மூட்டு பிரச்சனைகள் இவற்றால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த குழுவில் உள்ள பெண்கள் எப்பொழுதும் உடலில் உள்ள குறைபாடுகள் தானாக ஒரு விபத்து மூலம் குணமடையலாம் என்று நம்புகின்றனர்.இந்த வகையில் உள்ள பெண்கள் பெரும்பாலும் அதிக அளவு உணவு உண்பர்.

முக்கியமாக பரிந்துரைக்கப்படுபவை:

முக்கியமாக பரிந்துரைக்கப்படுபவை:

உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்குதல்,எதிர்ப்பு பயிற்சி,மன மற்றும் உடல் நலனை சீராக வைத்திருக்கும் பொழுதுபோக்குகளை பின்பற்ற வேண்டும்.

குழு 3 - (50 வயதிற்கு மேல் ) :

குழு 3 - (50 வயதிற்கு மேல் ) :

இந்த வகையில் உள்ள பெண்கள் ஹார்மோன்கள் பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர்.இவர்களுக்கு மாதவிடாய் நின்று விடுவதால் மன அழுத்தம்,எக்ஸ்ட்ரீம் ஆஸ்டியோபோரோசிஸ்,வெப்ப பிளாஷ்,மூட்டு வலி,இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் சர்க்கரை நோய் ஆகியவை ஏற்படுகிறது.

முக்கியமாக பரிந்துரைக்கப்படுபவை:

முக்கியமாக பரிந்துரைக்கப்படுபவை:

எடையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல்,உணவில் கார்போஹைட்ரெட் அளவைக் குறைதல்,30-45 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி(யோகா),புரதங்கள் நிறைந்த உணவு எடுத்தல் அவசியம்.ஆனால் குறைந்த கார்போஹைட்ரெட் மிகவும் அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Women body needs replenishment

Women body needs replenishment
Story first published: Wednesday, February 8, 2017, 16:15 [IST]
Desktop Bottom Promotion