நச்சுக்களை வெளியேற்றி உடல் எடையை குறைக்க இதக்குடிங்க!

Posted By:
Subscribe to Boldsky

உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் விதவிதமான டயட்களை பின்பற்றி பார்த்து சரியான பலன் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் இருப்பார்கள். உடல் எடை அதிகரிக்க முக்கிய காரணங்களில் ஒன்று, நம் உடலில் இருக்கும் நச்சுக்கள் வெளியேறாமல் இருப்பது தான்.

நச்சுக்களை வெளியேற்ற என்று நீங்கள் கொஞ்சம் மெனக்கெட்டாலே உங்களின் அதீத உடல் எடையை கனிசமாக குறைத்திட முடியும். இது மிகவும் எளிதானது தான் அதனால் நீங்கள் வீட்டிலேயே தயாரித்துக் குடிக்கலாம்.

அன்றாடம் ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அந்த தண்ணீரை நீங்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டியது அவசியம் அதே போல 'டிடாக்ஸ் வாட்டர்' தயாரித்தும் குடிக்கலாம்.

Water Recipes for efficient weight loss

இது உங்கள் உடலுக்கு நீர்ச்சத்து அளிப்பதுடன் உங்கள் உடலில் இருக்கும் நச்சுக்களையும் வெளியேற்ற உதவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆப்பிள் சிடர் வினிகர் :

ஆப்பிள் சிடர் வினிகர் :

வினிகரில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியிருக்கின்றன. இதிலிருக்கும் ubiquitous என்ற தாது நம் உடலுக்கு ஏரளமான நன்மைகள் செய்கிறது. செரிமானத்தை தூண்டுகிறது.

ஒரு கிளாஸ் தண்ணீருக்கு இரண்டு ஸ்பூன் வினிகர் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். வேண்டுமானால் இதில் கால் டீஸ்ப்பூன் தேன், பட்டைத் தூள் சேர்த்துக் கொள்ளலாம்.

சிட்ரஸ் அமிலம் :

சிட்ரஸ் அமிலம் :

இது தொப்பையை குறைக்க பயன்படுகிறது. எலுமிச்சை சாறு, ஆரஞ்சு ஜூஸ் ஆகியவை கலந்து குடிக்கலாம். அப்படியில்லை எனில் நீங்கள் குடிக்கும் தண்ணீரில் ஒரு துண்டு எலுமிச்சையை சேர்த்து ஒரு மணி நேரம் ப்ரிட்ஜில் வைத்து குடிக்கலாம். வேண்டுமானால் இதில் சில புதினா இலைகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

செலரி இலைகள் :

செலரி இலைகள் :

உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது மிகப்பெரிய வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, சிறிதளவு செலரி இலைகளை சேர்த்து குடியுங்கள்.

செலரியில் ஏராளமான விட்டமின்கள் குறிப்பாக விட்டமின் ஏ,பி,சி மற்றும் கே ஆகியவை நிறைந்திருக்கிறது.

தர்பூசணி :

தர்பூசணி :

இது குறிப்பிட்ட சீசனுக்கு மட்டுமே கிடைக்கும் என்பதால் கிடைக்கும் காலங்களில் நன்றாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு பழங்களின் முதல் சாய்ஸாக இருக்க வேண்டியது தர்பூசணி தான். இதில் கிட்டதட்ட 97 சதவீதம் தண்ணீர் மட்டுமே இருக்கிறது.

தர்பூசணி பழத்தை அப்படியே சாப்பிடலாம். அல்லது தர்பூசணியை சாறு எடுத்துக் குடியுங்கள்.

இஞ்சி :

இஞ்சி :

உடல் ஆரோக்கியம், வீட்டுக்குறிப்புகள் என்று ஆரம்பித்தாலே கண்டிப்பாக இடம் பெறும் ஒரு பொருள் இஞ்சி. இஞ்சியில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியிருக்கிறது என்பது உங்களுக்கு ஏற்கனவே தெரியும். அதனை நீங்கள் தினமும் பயன்படுத்தலாம்.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் இஞ்சியை கொதிக்க வைத்த தண்ணீரை குடியுங்கள். வேண்டுமானால் அதில் சிறிதளவு தேன் சேர்த்துக் கொள்ளலாம். இது செரிமானத்தை துரிதப்படுத்தம். அதே போல நம் உடலில் தங்கியிருக்கும் நச்சுக்களை வெளியேற்றும்.

வெள்ளரிக்காய் :

வெள்ளரிக்காய் :

இது நீர்ச்சத்துள்ள காய். அதை விட இதில் ஏராளமான மினரல்ஸ், விட்டமின்ஸ் மற்றும் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட்கள் அடங்கியிருக்கின்றன. இதனை பயன்படுத்தவதால் உங்கள் உடல் நலனுக்கு மட்டுமல்ல சருமம் மற்றும் தலைமுடி ஆரோக்கியத்திற்கும் ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன.

வெள்ளரிக்காய் சாப்பிடுங்கள், இல்லையெனில் குடிக்கும் தண்ணீரில் தோல் சீவி, பொடியாக நறுக்கிய வெள்ளரியை தண்ணீரில் சேர்த்து குடிக்கலாம்.

திராட்சை :

திராட்சை :

திராட்சையில் ஏராளமான ஃபைட்டோ கெமிக்கல்கள் அடங்கியிருக்கின்றன. இவை நம் உடலில் தங்கியிருக்கக்கூடிய கூடுதலான கொழுப்பு, தேவையற்ற கலோரிகளை எரிக்க துணை புரியும்.

திராட்சை சாறு எடுத்துக் குடிக்கலாம். இல்லையென்றால் நீங்கள் குடிக்கும் தண்ணீரில் பாதியாக நறுக்கிப் போட்ட திராட்சையை சேர்த்து குடித்து வாருங்கள்.

ஆப்பிள் :

ஆப்பிள் :

பெரும்பாலானோர் செய்யக்கூடியது அல்லது உடல் எடையை குறைக்க வேண்டும் என்று சொல்பவர்களிடத்தில் அறிவுறுத்தக்கூடிய ரெசிபி இது.ஆப்பிள் மற்றும் பட்டைத் தூள் .

இது சுவையும் கூடுதலாக இருக்கும் என்பதால் பலருக்கும் பிடித்த ரெசிபியாக இது இருக்கும்.

ஆப்பிள் பழத்தில் இருக்கும் ஃபைட்டோ நியூட்ரியன்ஸ் மற்றும் ஆண்ட்டி ஆக்ஸிடண்டஸ் புற்று நோய் வளர்ச்சியை தடுப்பது, ரத்த அழுத்தத்தை குறைப்பது, சர்க்கரை நோய் மற்றும் மாரடைப்பு ஆகியவை ஏற்படாமல் தடுக்க பெரிதும் உதவிடுகிறது.

ஆப்பிளை தோல் சீவி, விதைகளை நீக்கி சிறிய அளவில் நறுக்கிக் கொள்ளுங்கள். ஒரு சிறிய ஜாரில் தண்ணீரைச் சேர்த்து நறுக்கி வைத்திருக்கும் ஆப்பிளை சேர்த்து அத்துடன் இரண்டு பெரிய அளவிலான பட்டையை சேர்த்து மூடி வைத்திடுங்கள். வேண்டுமானால் பட்டைத் தூளையும் சேர்த்துக் கொள்ளலாம்.

மிக்ஸ்டு :

மிக்ஸ்டு :

பல பழங்கள் கலந்த கலவையாக இது தயாரிக்கப்படப்போகிறது. இதில் எலுமிச்சை, திராட்சை, வெள்ளரி ஆகியவற்றை சேர்க்கப்போகிறீர்கள். வேண்டுமானால் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்துக் கொள்ளுங்கள். அவை உங்கள் உடை எடை குறைக்க பயன்படுவது மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திற்கு ஏராளமான நன்மைகளை கொடுக்கிறது.

இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, நான்கைந்து திராட்சை பழம். சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய வெள்ளரி மூன்றையும் சேர்த்து நன்றாக கலக்குங்கள். சுமார் அரைமணிநேரம் ஊறியதும் அந்த தண்ணீரை குடிக்கலாம்.

ஆரஞ்சு :

ஆரஞ்சு :

ஆரஞ்சு பழத்தில் விட்டமின் சி நிறைந்திருக்கிறது.இதனை தொடர்ந்து குடித்து வர உங்கள் மெட்டபாலிசம் அதிகரிப்பதுடன் நச்சுக்களும் வெளியேறும். இதில் ப்ளூ பெர்ரீ சேர்க்கலாம்.

ப்ளூ பெர்ரீயில் இருக்கும் ஆண்ட்டி ஆக்ஸிடன்கள் மற்றும் நார்ச்சத்து அடிக்கடி பசியுணர்வு ஏற்படுவதை தடுக்கும்.

ஒரு கிளாஸ் தண்ணீரில் நறுக்கிய ஒரு துண்டு ஆரஞ்சுப்பழம் நான்கைந்து ப்ளூ பெர்ரீ சேர்த்து குடியுங்கள்.

 ஸ்ட்ராபெர்ரீ :

ஸ்ட்ராபெர்ரீ :

இதன் சுவை காரணமாகவோ என்னவோ இந்த ரெசிபி மட்டும் பலருக்கும் பிடித்திருக்கிறது நீங்களும் முயற்சி செய்து பாருங்கள். இது உங்கள் எடை குறைக்க மட்டுமல்ல குறைவான ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு அதனை சீராக்கவும் இன்ஸுலின் சுரப்பினை சமமாக வைத்திருக்கவும் உதவிடும்.

ஒரு கப் நிறைய தர்பூசணி பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பாதியளவு ஸ்ட்ராபெர்ரி பழங்களை எடுத்துக் கொண்டு பாதியாக நறுக்கிக் கொள்ளுங்கள். இதனை தண்ணீரில் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைத்து குடித்திடலாம்.

எலுமிச்சை, புதினா,ஸ்ட்ராபெர்ரீ :

எலுமிச்சை, புதினா,ஸ்ட்ராபெர்ரீ :

இதில் சேர்க்கப்படும் ஸ்ட்ராபெர்ரீ எலுமிச்சையின் புளிப்புச் சுவையை மட்டுப்படுத்தி புதிய கலவையான சுவையை நமக்கு கொடுக்கும். அதோடு புதினாவும் சேர்க்கப்போவதால் உங்களுக்கு வித்யாசமான சுவை கிடைத்திடும்.

இதில் எலுமிச்சை சாறு சேர்க்கலாம். அல்லது வட்ட வடிவில் நறுக்கிய எலுமிச்சையை அப்படியே போடலாம். பத்து முதல் பதினைந்து ஸ்ட்ராபெர்ரீ சிறிதளவு புதினா இலைகளை சேர்த்து குடித்திடுங்கள்.

மெட்டபாலிசம் பூஸ்டிங் டிரிங்க் :

மெட்டபாலிசம் பூஸ்டிங் டிரிங்க் :

இது சுவையானது மட்டுமல்ல இதில் சேர்க்கப்பட்டிருக்கும் பொருட்களால் உங்களுடைய மெட்டபாலிசமும் அதிகரிக்கும் இதில் எலுமிச்சை, திராட்சை, வெள்ளரி, புதினா ஆகியவற்றை சேர்க்கப்போகிறோம். இவற்றில் ஆரோக்கியமான விட்டமின்ஸ் மற்றும் ஆண்ட்டி ஆக்ஸிடண்டஸ் நமக்கு கிடைத்திடும்.

ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, நான்கைந்து திராட்சை, சிறிதளவு வெள்ளரி மற்றும் சிறிதளவு புதினா சேர்த்துக் குடிக்கலாம்.

அன்னாசிப்பழம் :

அன்னாசிப்பழம் :

அன்னாசிப்பழம் மற்றும் ஆரஞ்சுப் பழத்தில் அதிகப்படியான விட்டமின் சி இருக்கிறது இவை உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவிடும். அதே நேரத்தில் கொழுப்பை கரைக்கவும் பெரிதும் உதவுகிறது.

ஒரு கப் பொடியாக நறுக்கிய அன்னாசிப் பழங்களை ஒரு கிளாஸ் தண்ணீரில் சேர்த்து குடித்திடுங்கள். வேண்டுமானால் அதில் ஆரஞ்சுப் பழத் துண்டையும் சேர்த்துக் கொள்ளலாம்.

புதினா :

புதினா :

மிக எளிதில் தயாரிக்கக் கூடியது. தண்ணீர்ல் வெறும் புதினா இலைகளை மட்டும் சேர்த்து குடிக்கலாம். அல்லது சிறிதளவு வெள்ளரி மற்றும் புதினா என்று இரண்டையும் சேர்த்துக் குடித்திடுங்கள்.

சுவைக்காக சிலர் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்க்க விரும்பினால் தாரளமாக சேர்த்துக் குடிக்கலாம்.

கற்றாழை :

கற்றாழை :

கற்றாழை குறித்த ஏராளமான நன்மைகளைப் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். இது சருமத்தை புத்துணர்வுடன் வைத்திருக்க உதவுவதுடன், நாம் சாப்பிட்ட உணவு விரைவில் செரிக்கவும் உதவுகிறது.

ஒரு கிளாஸ் தண்ணீரில் இரண்டு ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் ஒரு ஸ்பூன் எலுமிச்சை கலந்து குடித்திடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Water Recipes for efficient weight loss

Water Recipes for efficient weight loss
Story first published: Wednesday, December 6, 2017, 10:52 [IST]
Subscribe Newsletter