Latest Updates
-
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி!
3 நாட்களில் 5 கிலோ எடையைக் குறைக்க உதவும் உருளைக்கிழங்கு டயட் பற்றி கேள்விப்பட்டதுண்டா?
இங்கு 3 நாட்களில் 5 கிலோ எடையைக் குறைக்க உதவும் உருளைக்கிழங்கு டயட் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலானோருக்கு மிகவும் பிடித்த காய்கறிகளுள் ஒன்று தான் உருளைக்கிழங்கு. இந்த உருளைக்கிழங்கை அதிகம் சாப்பிட்டால், உடல் எடை அதிகரிக்கும் என்று பலரும் அதை சாப்பிடுவதைத் தவிர்ப்பார்கள். ஆனால் உடல் எடையைக் குறைக்க உருளைக்கிழங்கு உதவும் என்பது தெரியுமா?

ஆம், உருளைக்கிழங்கு டயட்டை 3 நாட்கள் பின்பற்றி வந்தால், 5 கிலோ வரை உடல் எடையைக் குறைக்க முடியும். இக்கட்டுரையில் அந்த உருளைக்கிழங்கு டயட்டைக் குறித்து தான் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து, அந்த உருளைக்கிழங்கு டயட்டை 3 நாட்கள் பின்பற்றி, உடல் எடையைக் குறைத்து மகிழுங்கள்.

நாள் #1
காலை உணவு : உப்பில்லாத 1 வேக வைத்த உருளைக்கிழங்கு மற்றும் 1 கப் குறைவான கொழுப்புள்ள தயிர்.
மதிய உணவு : உப்பில்லாத 2 வேக வைத்த உருளைக்கிழங்கு மற்றும் 1 கப் குறைவான கொழுப்புள்ள தயிர்.
இரவு உணவு : 2 கப் கொழுப்பு குறைவான தயிர்.

நாள் #2
காலை உணவு : 1 கப் கொழுப்பு குறைவான தயிர்.
மதிய உணவு : உப்பில்லாத 2 வேக வைத்த உருளைக்கிழங்கு மற்றும் 1 கப் குறைவான கொழுப்புள்ள தயிர்.
இரவு உணவு : உப்பில்லாத 1 வேக வைத்த உருளைக்கிழங்கு மற்றும் 1 கப் குறைவான கொழுப்புள்ள தயிர்.

நாள் #3
காலை உணவு : உப்பில்லாத 1 வேக வைத்த உருளைக்கிழங்கு.
மதிய உணவு : உப்பில்லாத ஒரு வேக வைத்த உருளைக்கிழங்கு மற்றும் 1 கப் குறைவான கொழுப்புள்ள தயிர்.
இரவு உணவு : 1 கப் கொழுப்பு குறைவான தயிர்.

உருளைக்கிழங்கு
100 கிராம் உருளைக்கிழங்கில் 75 கலோரிகள் தான் உள்ளது. அதாவது இந்த கலோரியானது 1 கப் ஆரஞ்சு ஜூஸை விட குறைவானது.

கொழுப்பு குறைவான தயிர்
இந்த டயட்டில் சேர்க்கப்படும் கொழுப்பு குறைவான தயிர், செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை சீராக்குவதோடு, உடலில் உள்ள அதிகப்படியான நீரை வெளியேற்றும் மற்றும் டாக்ஸின்களையும் அகற்றும்.

குறிப்பு
எந்த ஒரு டயட்டை பின்பற்றினாலும், உடற்பயிற்சி மிகவும் அவசியம். ஆகவே தினமும் தவறாமல் உடலின் மெட்டபாலிசத்தைத் தூண்டுவதற்கு, தவறாமல் உடற்பயிற்சியை செய்து வர வேண்டும்.



Click it and Unblock the Notifications
