Latest Updates
-
தேங்காய் ரவா தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
அக்டோபர் 02 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
செவ்வாய் துலாம் ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வெள்ளை பட்டாணி இருந்தா இந்த பஞ்சாபி வடானா மசாலாவை செஞ்சு பாருங்க - சப்பாத்தி. பூரிக்கு செமையா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரங்க உலகை சுற்றும் சுதந்திரப் பறவைகளாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்க தலைமுடி எலிவால் மாதிரி மாறுதா? அப்ப அடிக்கடி இந்த கற்றாழை ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
Gandhi Jayanti 2026: மகாத்மா காந்தியை பற்றி நமக்கு தெரியுமா? ஆனால் அவர் படிப்பில் எப்படிப்பட்டவர் தெரியுமா? -
மீல் மேக்கர் பிரியாணியை இப்படி செய்யுங்க.. மட்டன் பிரியாணியே தோத்துடும்.. -
4 கத்திரிக்காய் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி மிளகு குழம்பு செய்யுங்க - டேஸ்ட் அருமையா இருக்கும்
ஒரே வாரத்தில் நான்கு கிலோ எடை குறைக்க உதவும் சூப்பர் டயட்!
கோல் ராபின்சன் எனும் ஃபிட்னஸ் கோச் அறிமுகப்படுத்தியுள்ள ஒரே வாரத்தில் நான்கு கிலோ உடல் எடை குறைக்க உதவும் டயட் பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.
உடல் எடை குறைக்க பல முறைகள், பல டயட்டுகள் கடைப்பிடிக்க படுகிறது. சிலர் உணவு முறையாலும், சிலர் உடற்பயிற்சியாலும், சிலர் யோகா, மூச்சு பயிற்சி முறைகளை பின்பற்றி கூட உடல் எடை குறைக்கின்றனர்.

எந்த ஒரு செயலிலும் உடனடி தீர்வு நிலையாக இருக்காது. உடல் எடையிலும் அப்படி தான். கோல் ராபின்சன் என்பவர் ஒரே வாரத்தில் நான்கு கிலோ வரை உடல் எடை குறைக்க ஸ்நேக் டயட் என்பதை அறிமுகப்படுத்தியுள்ளார்.
இந்த டயட் எப்படிபட்டது, இதை பற்றி உடல் பருமன் நிபுணர்கள் என்ன கூறுகின்றனர் என இங்கு காணலாம்...

கோல் ராபின்சன்!
கோல் ராபின்சன் என்பவர் தன்னை தானே ஃபாஸ்டிங் கோச் என அடையாளப்படுத்தி கொள்கிறார். தான் உருவாக்கியுள்ள புதிய டயட்டை இவர் ஸ்நேக் டயட் என கூறுகிறார்.

ஸ்நேக் டயட்!
ஸ்நேக் டயட் என்றால் என்ன? ஸ்நேக் டயட் டயட் என்பது ஒரு நாளுக்கு ஒரு முறை அல்லது ஓரிரு நாளுக்கு ஒருமுறை உணவு உட்கொள்ளும் டயட் என கோல் ராபின்சன் கூறுகிறார்.

விரதம்!
நமது ஊர்களில் மார்கழி, கார்த்திகை, புரட்டாசி என சில மாதங்களில் கடவுளுக்கு விரதம் இருக்கும் முறை போன்றது தான் கோல் ராபின்சன் கூறும் டயட். இதனால் தான் தன்னை ஃபாஸ்டிங் கோச் என கூறி கொள்கிறார் போல.

எடை குறைப்பு!
எந்த விதமான சோர்வும், பக்க விளைவுகளும் இன்றி, முதல் வாரத்தில் 8-9 பவுண்டுகள் வரை உடல் எடை குறைத்ததாக கோல் ராபின்சன் கூறுகிறார்.

மருத்துவர் குறிப்பு!
உடல் பருமன் சிறப்பு நிபுணர்கள் இது போன்ற டயட் சரியானது அல்ல என்கின்றனர். டயட் என்பது உடல் எடையை உடனே குறைப்பதாக அமைவது அல்ல. சீரான முறையில், ஆரோக்கியமான முறையில் அமைய வேண்டும். இல்லையேல் பல உடல்நல கோளாறுகளை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உண்டாகலாம் என கூறுகின்றனர்.

கவனம் தேவை!
உடல் எடை குறைக்க உதவும் பலரும் செய்யும் தவறு இதுதான். உணவில் அளவை குறைத்துக் கொள்வதால் மட்டும் உடல் பருமனை குறைக்க முடியாது. உட்கொள்ளும் உணவிற்கு இணையாக பயிற்சிகள் மேற்கொள்வதால் மட்டுமே கொழுப்பை கரைக்க முடியும்.



Click it and Unblock the Notifications
