உடல் எடையை குறைக்கும் பேலியோ டயட்டை நிறுத்திய பின் பாதிப்பு ஏற்படுமா?

By: Ambika Saravanan
Subscribe to Boldsky

பேலியோ டயட் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். நாகரீக வளர்ச்சிக்கு முன்னர் மனிதர்கள் குகைகளில் வாழ்ந்து, வேட்டையாடி அவர்களுக்கான உணவை உண்டு வந்தனர். அவர்களின் உணவு பெரும்பாலும் பச்சை காய்கறிகள், பழங்கள், மற்றும் மாமிசங்கள் ஆகியவை.

இதன் பிறகு நாகரீக மாற்றத்தால் விவசாயம் உருவானது. அதன் பின்னர் நாம் உண்ணும் உணவுகளில் பல வித மாற்றங்கள் உண்டானது.

Is Paleo Diet Really Effective ? Find Out What Happens Once You Stop This Diet

இப்போது வேகமக பரவும் பேலியோ டயட் நல்லதா கெட்டதா என ஊட்டச்சத்து நிபுணர் Dr .மஞ்சரி சந்திரா கூறுகிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேலியோ டயட் என்றால் என்ன ?

பேலியோ டயட் என்றால் என்ன ?

இந்த நாகரீக யுகத்தில் பலவேறு வகையான உணவுககளை உண்டு, உடல் பருமன் ஏற்பட்டவர்கள் தங்களை மீண்டும் பொலிவுடன் மாற்றுவதற்கு பேலியோ டயட் என்ற ஒன்றை பின்பற்றுகின்றனர்.

இந்த வகை உணவுகளில் கலோரிகளின் எண்ணிக்கைகள் கிடையாது. குகை வாழ் மனிதர்களின் உணவுகளை போல் சாப்பிடுவதுதான் இந்த டயட். பசிக்கும்போது தேவையான அளவு இந்த உணவை உண்ணலாம். இதற்கான உணவு அட்டவணை ஒன்றும் தரப்படுகிறது.

மருத்துவர்களின் கருத்து:

மருத்துவர்களின் கருத்து:

இந்த வகை டயட் மேற்கொள்வதால் உடலில் உள்ள கொழுப்புகள் கரைவது உறுதி . ஆனால் உணவு நிபுணர்களும், மருத்துவர்களும் பேலியோ டயட் எடுத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு கெடுதல் விளைவிக்கிறது என்று குறிப்பிடுகின்றனர். இதனால் வயிற்றுப்போக்கு , உடல் சோர்வு ஆகியவை ஏற்படுகிறது. தூக்கத்தின் தன்மையும் பாதிக்கப்படுகிறது என்று கூறுகின்றனர்.

உடல் எடை குறைப்பிற்கு இது ஒரு நீண்ட கால நிவாரணத்தை அல்லது நிரந்தர தீர்வை வழங்க முடியாது என்று மேக்ஸ் ஹெல்த் கேர் நிறுவனத்தில் ஊட்டச்சத்து நிபுணர் Dr .மஞ்சரி சந்திரா குறிப்பிடுகிறார். உடல் எடையில் ஒரு குறிப்பிட்ட அளவை குறைப்பதற்கான ஒரு குறுகிய கால நடவடிக்கைதான் இந்த பேலியோ டயட் என்று அவர் கூறுகிறார்.

 அதிகமான புரதம்:

அதிகமான புரதம்:

நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக இருக்க முடியாத சூழலை இந்த டயட் உருவாக்குகிறது. சில உணவுகளை முற்றிலும் தவிர்க்கும் படி இந்த டையட்டில் கூறுவதால் சில ஊட்டச்சத்துகள் உடலுக்கு முழுவதுமாக கிடைக்க முடிவதில்லை.

இதனால் உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட்டு வளர்சிதை மாற்றத்தில் சிக்கல் ஏற்படுகிறது. உடல் ஆரோக்கியம் கேள்விக்குறியாகிறது. இந்த வகை டயட்டில் புரத சத்து அதிகமாக எடுத்துக் கொள்ள படுகிறது. இதனால் சிறுநீரகத்திற்கு வேலை பளு அதிகமாகிறது.

நுண்ணூட்டச்சத்துகள் அளவு குறைதல்:

நுண்ணூட்டச்சத்துகள் அளவு குறைதல்:

பல்வேறு வகை உணவுகளை உண்ணாமல் குறிப்பிட்ட உணவுகளை மட்டும் தேர்ந்தெடுத்து உண்பதால் ஊட்டச்சத்துகள் குறைவதற்கான வாய்ப்புகள் ஏற்படுகின்றது. பேலியோ டயட்டை பின்பற்றுவதால் நீண்ட கால உறுப்புகள் சீரழிவு ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு.

குறிப்பிட்ட உணவுகளை மட்டும் உட்கொள்வதால் அதிகமான நுண் ஊட்டச்சத்துகள் கிடைக்கப்பெறாததால் இந்த வகை டயட் பல பின் விளைவுகளை ஏற்படுத்தும்.

பேலியோ டயட்டை நிறுத்துவதால் உண்டாகும் பலன்:

பேலியோ டயட்டை நிறுத்துவதால் உண்டாகும் பலன்:

பேலியோ டயட்டை பின்பற்றுபவர்கள் வாழ்நாள் முழுதும் இதனை தொடர முடியுமா என்றால் இல்லை என்று தான் கூறுவர். ஏனென்றால் எந்த ஒரு டயட்டையும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேல் நம்மால் பின்பற்ற முடியாது. உடல் எடை குறைந்தவுடன் நாம் அதனை பின்பற்றுவதை விட்டு விடுவோம்.

பேலியோ டயட்டை பின்பற்றி பின்பு அதனை நிறுத்தும்போது மீண்டும் சில நாட்களில் உடல் எடை அதிகரிக்கும் என்ற உண்மையை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். இந்த டயட் ஒரு குறுகிய கால தீர்வாக மட்டுமே இருக்க முடியும் என்று

Dr .மஞ்சரி சந்திரா கூறுகிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Is Paleo Diet Really Effective ? Find Out What Happens Once You Stop This Diet

Is Paleo Diet Really Effective ? Find Out What Happens Once You Stop This Diet
Story first published: Wednesday, September 6, 2017, 13:38 [IST]
Subscribe Newsletter