For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

4 வாரத்தில் உடல் எடையைக் குறைக்க உதவும் இந்தியன் டயட் பற்றி தெரியுமா?

இங்கு 4 வாரத்தில் உடல் எடையைக் குறைக்க உதவும் இந்தியன் டயட் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

|

இதுவரை வாய்க்கு ருசியாக சாப்பிட்டு, திடீரென்று உடல் எடையைக் குறைக்க டயட் மேற்கொள்ள கஷ்டமாக உள்ளதா? பெரும்பாலான மக்கள் டயட் என்றதும் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர். உண்மையில் டயட் என்பது உண்ணும் உணவை அளவாக உண்பது ஆகும்.

உடல் எடையைக் குறைக்கும் பல டயட்டுகளைக் குறித்துக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் எடையைக் குறைக்க உதவும் இந்தியன் டயட் திட்டம் பற்றி தெரியுமா? இக்கட்டுரையில் ஒரே மாதத்தில் உடல் எடையில் மாற்றத்தைக் காண்பிக்கும் இந்தியன் டயட் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வாரம் #1 : காலை

வாரம் #1 : காலை

அதிகாலை : விருப்பமான ஏதேனும் ஒரு பழம் + சிறிது தர்பூசணி, ஆளி, எள் விதைகள்

காலை உணவு : பன்னீர் சாண்ட்விச் உடன் புதினா சட்னி / 2 இட்லியுடன் சாம்பார் / 2 முட்டை ஆம்லெட் உடன் 2 முழு தானிய பிரட் / 2 நவதானிய காய்கறி பரோட்டா + 1 டம்ளர் விருப்பமான காய்கறி ஜூஸ்.

காலை உணவிற்கு பின் : 4 வால்நட்ஸ் மற்றும் 2 பேரிச்சம் பழம் / விருப்பமான ஏதேனும் ஒரு பழம் / இளநீர்

மதியம்

மதியம்

மதிய உணவிற்கு முன் : 1 பௌல் வினிகர் தூவிய விருப்பமான சாலட்

மதிய உணவு : 2 நவதானிய ரொட்டி / 1 பௌல் கைக்குத்தல் அரிசி சாதம் + 1 பௌல் தால் + 1 பௌல் கொழுப்பு குறைவான தயிர்

மதிய உணவிற்கு பின் : 1 டம்ளர் டீ அல்லது காபி / 1 டம்ளர் மோர்

மாலை

மாலை

ஸ்நாக்ஸ் : விருப்பமான ஏதேனும் 1 பழம் / 1 டம்ளர் வே புரோட்டீன் பானம் / 1 பௌல் முளைக்கட்டிய பயிர்

இரவு உணவு : 1 பௌல் சிக்கன் கிரேவி + 1 பௌல் சாதம் / 2 நவதானிய ரொட்டி + சாலட் + 1 பௌல் கொழுப்பு குறைவான தயிர் / 1 பௌல் வெஜிடேபிள் உப்புமா + 1 பௌல் சாம்பார் + 1 பௌல் சாலட் அல்லது சூப்

இரவு உணவிற்கு பின் (பசி எடுத்தால்) : 4-5 துண்டுகள் நட்ஸ் / 1 டம்ளர் கொழுப்பு குறைவான வெதுவெதுப்பான பால்

வாரம் #2 : காலை

வாரம் #2 : காலை

அதிகாலை : 10 மிலி அருகம்புல் ஜூஸ் + 5-6 பாதாம் மற்றும் வால்நட்ஸ்

காலை உணவு : 2 காய்கறி ஊத்தாப்பம் மற்றும் சாம்பார் / 1 பௌல் வெஜிடேபிள் உப்புமா + சட்னி / 2 ராகி தோசை மற்றும் சாம்பார் / 1 பௌல் பழம், ஆளி விதை மற்றும் ஓட்ஸ் கஞ்சி / 1 பௌல் கைக்குத்தல் அரிசி பொங்கல் + 1 பௌல் சாம்பார்

காலை உணவிற்கு பின் : 1 டம்ளர் வே புரோட்டீன் ஷேக் / இளநீர்

மதியம்

மதியம்

மதிய உணவிற்கு முன் : 1 பௌல் அதிக காய்கறி சேர்த்த மைன்ஸ்ட்ரோன் சூப்

மதிய உணவு : 2 நவதானிய ரொட்டி + 1 பௌல் வெஜிடேபிள் சப்ஜி + 1 பௌல் வேக வைத்த பருப்பு / 1 பௌல் கைக்குத்தல் அரிசி சாதம் + 1 பௌல் மிக்ஸ்டு வெஜிடேபிள் சப்ஜி + 1 வெஜிடேபிள் முட்டை ஆம்லெட்

மாலை

மாலை

ஸ்நாக்ஸ் : விருப்பமான ஏதேனும் ஒரு பழம் + 1 கப் க்ரீன் டீ

இரவு உணவு : 1 பௌல் வெஜிடேபிள் புலாவ்/பாசுமதி சிக்கன் பிரியாணி + 1 பௌல் வெஜிடேபிள் ரெய்தா +1 பௌல் வெஜிடேபிள் அல்லது சிக்கன் சாலட் / 1 பௌல் கைக்குத்தல் அரிசி சாதம் + 1 பௌல் மிக்ஸ்டு வெஜிடேபிள் சாம்பார் + 1 பௌல் அசைவ அல்லது சைவ சப்ஜி + 1 பௌல் சாலட் / 2 நவதானிய ரொட்டி + 1 பௌல் மீன் குழம்பு + 1 பௌல் தயிர்

இரவு உணவிற்குப் பின் : 1 டம்ளர் வெதுவெதுப்பான பால்

வாரம் #3 : காலை

வாரம் #3 : காலை

அதிகாலை : 10 ஸ்பைரூலினா அல்லது பச்சை இலை காய்கறி ஜூஸ் + விருப்பமான ஏதேனும் 1 பழம்

காலை உணவு : 1 பௌல் முளைக்கட்டிய காய்கறி உப்புமா / 2 ஓட்ஸ் இட்லி + சாம்பார் / 2 வெந்தய கீரை பராத்தா உடன் கொழுப்பு குறைவான தயிர் / 2 காய்கறி அடை ஊத்தாப்பம் + 1 பௌல் வெஜிடேபிள் சாம்பார்

காலை உணவிற்கு பின் : விருப்பமான ஏதேனும் 1 பழம்

மதியம்

மதியம்

மதிய உணவிற்கு முன் : 1 பௌல் முளைக்கட்டிய பயிர் சாலட்

மதிய உணவு : 2 நவதானிய ரொட்டி + 1 பௌல் சைவ அல்லது அசைவ சப்ஜி + 1 பௌல் கெட்டியான தால் / 1 பௌல் கைக்குத்தல் அரிசி சாதம் + 1 பௌல் வெஜிடேபிள் சாம்பார் + 1 பௌல் சப்ஜி + 1 பௌல் கொழுப்பு குறைவான தயிர்

மாலை

மாலை

ஸ்நாக்ஸ் : 1 கப் ஸ்பைரூலினா மற்றும் மிக்ஸ்டு வெஜிடேபிள் ஜூஸ்

இரவு உணவு : 1 பௌல் பழம் மற்றும் காய்கறி சாலட் + 2 கோதுமை ரொட்டி + 1 பௌல் அசைவ சப்ஜி / 1 பௌல் கைக்குத்தல் அரிசி சாதம் + 1 பௌல் தால் + 1 பௌல் தயிர்

இரவு உணவிற்கு பின் : 1 டம்ளர் வே புரோட்டீன் ஷேக்

வாரம் #4 : காலை

வாரம் #4 : காலை

அதிகாலை : 10 மிலி நெல்லிக்காய் ஜூஸ் + 3-4 வால்நட்ஸ் மற்றும் பாதாம்

காலை உணவு : 2 சப்பாத்தி + 1 பௌல் கொழுப்பு குறைவான தயிர் / 2 வெஜிடேபிள் ராகி பட்டூ மற்றும் வேர்க்கடலை சட்னி / 2 வெஜிடேபிள் தோசை / 2 வெஜிடேபிள் பராத்தா + 1 பௌல் வெஜிடேபிள் ரெய்தா / பன்னீர் மற்றும் வெஜிடேபிள் பாம் + 1 பௌல் தயிர்/ 2 இட்லியுடன் சாம்பார்

காலை உணவிற்கு பின் : 3-4 உலர் பழங்கள் / 1 பௌல் நற்பதமான பழங்கள்

மதியம்

மதியம்

மதிய உணவிற்கு முன் : 1 பௌல் முளைக்கட்டிய பயிர் சாலட் / 1 பௌல் க்ரில் சிக்கன் அல்லது மீன் சாலட்

மதிய உணவு : 1 பௌல் திணை மற்றும் பருப்பு கிச்சடி + 1 பௌல் வெஜிடேபிள் கடாய் / 2 நவதானிய ரொட்டி + 1 பௌல் அசைவ சப்ஜி அல்லது முட்டை சப்ஜி + 1 டம்ளர் மசாலா மோர் / 2 வெஜிடேபிள் திணை ஊத்தாப்பம் + 1 பௌல் சாம்பார்

மாலை

மாலை

ஸ்நாக்ஸ் : 1 கப் மசாலா சோளம் + 1 கப் காபி, டீ அல்லது க்ரீன் டீ / விருப்பமான 1 பழம் / 1 டம்ளர் வே புரோட்டீன் ஷேக்

இரவு உணவு : 1 பௌல் வெஜிடேபிள் மற்றும் மிக்ஸ்டு சீட்ஸ் சாலட் + 2 நவதானிய ரொட்டி + 1 அசைவ சப்ஜி அல்லது தால் / 1 பௌல் கைக்குத்தல் அரிசி சாதம் + 1 பௌல் வெஜ் சாம்பார் + 1 முட்டை புர்ஜி

இரவு உணவிற்கு பின் : 1 டம்ளர் வெதுவெதுப்பான பால்

குறிப்பு

குறிப்பு

மேலே கொடுக்கப்பட்டுள்ள டயட் திட்டம் அனைவருக்குமே பொருந்தும் என்று சொல்ல முடியாது. எனவே ஊட்டச்சத்து நிபுணரை அணுகி, அவர்களின் பரிந்துரையின் பேரில், உங்களது உடலுக்கு ஏற்ற டயட்டைக் கேட்டு பின்பற்றுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Indian Diet Plan for Weight Loss in 4 Weeks

Here is an indian diet plan for weight loss from a nutritionist. Take a look...
Story first published: Friday, December 1, 2017, 0:35 [IST]
Desktop Bottom Promotion