தொப்பையை குறைக்க நினைப்பவர்கள் உணவில் இதைக் கண்டிப்பாக சேர்த்திடுங்கள்!

Posted By:
Subscribe to Boldsky
தொப்பையை குறைக்க நினைப்பவர்கள் உணவில் இதைக் கண்டிப்பாக சேர்த்திடுங்கள்!- வீடியோ

இஷ்டப்பட்ட ஆடையை அணிய முடியவில்லையே என்ற ஏக்கம் இருந்தாலும் உயிருக்கே கேடு விளைவிக்கக்கூடியது என்ற பயம் தான் தொப்பையை எப்படியாவது குறைத்திட வேண்டும் என்று எண்ணத்தோன்றுகிறது. நம்முடைய வாழ்க்கை முறை மாற்றம், உணவுப் பழக்கம் தான் முக்கியக் காரணமாக இருக்கிறது.

இப்படியான வாழ்க்கையை நம்மிடம் யாரும் புகுத்தவில்லை நம்முடைய சோம்பேறித்தனத்தாலும் அசட்டையாலுமே நாம் இதனை பெற்றிருக்கிறோம். தோற்றிலும் சரி உங்கள் தன்னம்பிக்கையில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தக்கூடியது இதிலிருந்து மீள முடியுமா? என்று யோசிக்காதீர்கள். கண்டிப்பாக முடியும், உங்களுடைய மிகக்கடுமையான உழைப்பு இருந்தால் யாவும் சாத்தியமே.

தொப்பையை குறைக்க உணவுக்கட்டுபாடு, உடற்பயிற்சி என்று நீங்கள் தேடித்தேடி சிரத்தை எடுத்துக் கொண்டாலும் சில வீட்டு மருத்துவத்தையும் மேற்கொள்ள வேண்டியது அவசியம். குறிப்பாக அடி வயிற்றில் தங்கியிருக்கும் கொழுப்பை கரைக்க, இதனையெல்லாம் நீங்கள் பின்பற்றி வந்தால் நல்ல மாற்றத்தை காணமுடியும்.

Essential tips to reduce your belly fat.

கொழுப்பைக் கரைக்கத்தான் இதைச் சாப்பிடுகிறோமே என்று சொல்லி, வயிறு முட்ட வளைத்து கட்டினால் தொப்பை வளர்ந்து கொண்டே தான் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டண்டிலியன் இலை டீ :

டண்டிலியன் இலை டீ :

தொப்பையில் அளவுக்கு அதிகமான தண்ணீர்ச் சத்து இருக்கும். முதலில் அதனை குறைக்க வேண்டும். அதற்கு இந்த டாண்டிலியன் டீ பயன்படும். டாண்டிலியன் இலையில் டீ தயாரித்துக் குடித்தால் அது அதிகமாக சிறுநீர் கழிக்க வைத்திடும்.

இதன்மூலமாக வயிற்றுப்பகுதியில் இருக்கும் கொழுப்பு கரைவதுடன் உடலில் இருக்கும் தேவையற்ற நச்சுக்கள் வெளியேற்றப்படுகிறது.

தண்ணீர்: தினமும் குறைந்தது 78 டம்ளர் தண்ணீர் குடித்தால், உடல் வறட்சியில்லாமல் இருப்பதோடு, உடலில் தங்கியிருக்கும் நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும்.

மேலும் அவ்வப்போது சீரான இடைவெளியில் தண்ணீர் குடித்தால், உடலின் மெட்டபாலிசமானது அதிகரிக்கும். இதனால் வயிற்றைச் சுற்றி காணப்படும் பெல்லியும் குறைந்துவிடும்.

உப்பு :

உப்பு :

தவிர்க்கவும் உணவில் அதிகப்படியான உப்பு சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் உப்பை அதிகம் சேர்த்தால், உடலில் தண்ணீரானது வெளியேறாமல், அதிகமாக தங்கிவிடும். எனவே உணவில் அதிகப்படியான உப்பு சேர்ப்பதை அறவே தவிர்க்க வேண்டும்.

வேண்டுமெனில் அதற்கு பதிலாக உணவில் சுவையைக் கூட்டுவதற்கு மூலிகைகள் மற்றும் மசாலாக்கள் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

தேன்:

தேன்:

வயிற்றைச் சுற்றி தொப்பையை ஏற்படுவதற்கு, சர்க்கரையும் ஒரு காரணம். எனவே உண்ணும் உணவுப் பொருளில் சர்க்கரைக்கு பதிலாக தேனை சேர்த்துக் கொண்டால், தொப்பையை குறைவதோடு, உடல் எடையும் குறையும்.

பட்டை:

பட்டை:

தினமும் காலையில் காபி அல்லது டீ குடிக்கும் போது, அதில் சிறிது பட்டை தூளை சேர்த்து கலந்து குடித்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்கலாம். மேலும் உடல் எடையையும் ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம்.

நட்ஸ்:

நட்ஸ்:

உடல் எடையை குறைக்க வேண்டுமெனில் உடனே கொழுப்புள்ள உணவுப் பொருட்கள் அனைத்தையும் நிறுத்திவிடுவோம். உண்மையில் அது தவறான கருத்து.

ஏனெனில் உடலுக்கு ஆரோக்கியமான கொழுப்புக்கள் கிடைக்க வேண்டியது மிகவும் இன்றியமையாதது. அத்தகைய கொழுப்புக்கள் நட்ஸில் அதிகம் உள்ளது.

எனவே ஸ்நாக்ஸ் நேரத்தில் வால்நட், பாதாம், வேர்க்கடலை போன்றவற்றை சாப்பிடுவது மிகவும் நல்லது.

அவகேடோ:

அவகேடோ:

அவகேடோவிலும் உடலுக்கு வேண்டிய கொழுப்பானது அதிகம் நிறைந்துள்ளது. மேலும் இதனை சாப்பிட்டால், அதில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள், வயிற்றை நிறைத்து, அடிக்கடி பசி ஏற்படுவதை தடுக்கும்.

சிட்ரஸ் பழங்கள் :

சிட்ரஸ் பழங்கள் :

பழங்களில் சிட்ரஸ் பழங்களை அதிகம் சாப்பிட்டால், அதில் உள்ள வைட்டமின் சி, உடலில் தங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புக்களை கரைத்து வெளியேற்றிவிடும். இதனால் அழகான உடலை பெற முடியும்.

 தயிர்:

தயிர்:

தினமும் உணவில் தயிரை சேர்த்து வந்தால், அதில் உள்ள குறைவான கலோரி மற்றும் ஊட்டசசத்துக்களால், எடை குறைவதோடு, தொப்பையும் குறைய ஆரம்பிக்கும்.

 சால்மன் மீன்:

சால்மன் மீன்:

சால்மன் மீனில் ஒமேகா3 ஃபேட்டி ஆசிட் அதிகம் நிறைந்துள்ளது. இது உடலின் செயல்பாட்டிற்கு மிகவும் இன்றியமையாத ஒரு கொழுப்பாகும்.

ஆகவே இந்த மீனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், நாள் முழுவதும் வயிறு நிறைந்திருப்பதோடு, தொப்பை வராமலும் தடுக்கும்.

பெர்ரிப் பழங்கள்:

பெர்ரிப் பழங்கள்:

பெர்ரிப் பழங்கள் கொழுப்பைக் குறைக்கும் ஒரு சிறந்த உணவுப் பொருள். ஏனெனில் அதில் வைட்டமின் சி என்னும் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளதால், பெல்லியால் அவஸ்தைப்படுபவர்கள், பெர்ரிப் பழங்களை அதிகம் சாப்பிட்டால், நல்ல பலனை விரைவில் பெறலாம்.

ப்ராக்கோலி:

ப்ராக்கோலி:

ப்ராக்கோலியிலும், மன அழுத்தத்தை அதிகரிக்கும் கார்டிசோலின் அளவைக் கட்டுப்படுத்தும் வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், இதனை சாப்பிட்டால், உடலில் உள்ள கொழுப்புக்களை ஆற்றலாக மாற்றும் பொருளானது உள்ளதால், பெல்லி பிரச்சனை உள்ளவர்கள் ப்ராக்கோலியை அதிகம் சாப்பிடுவது நல்லது.

எலுமிச்சை சாறு:

எலுமிச்சை சாறு:

வயிற்றைச் சுற்றியிருக்கும் தொப்பையை குறைக்க ஒரே சிறந்த வழியென்றால், தினமும் காலையில் எலுமிச்சை ஜுஸ் போட்டு குடிப்பது தான்.

அதிலும் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி, அதில் சிறிது உப்பு மற்றும் தேன் சேர்த்து குடித்தால், நிச்சயம் தொப்பை குறையும். அதிலும் இந்த செயலை தொடர்ந்து 1 மாதம் செய்து வந்தால், இதற்கான பலன் உடனே தெரியும்.

பூண்டு:

பூண்டு:

எலுமிச்சை சாற்றினை விட இரண்டு மடங்கு அதிகமான சக்தியானது பூண்டில் உள்ளது. எனவே காலையில் 1 பல் பூண்டு சாப்பிட்டால், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்கள் கரைவதோடு, உடலில் இரத்த ஓட்டமும் சீராக இருக்கும்.

இஞ்சி:

இஞ்சி:

உணவுகளில் இஞ்சியை அதிகம் சேர்த்தால், அது தொப்பையை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் இதில் அதிகப்படியான ஆன்டிஆக்ஸிடன்ட்டுகளானது நிறைந்திருப்பதால், இன்சுலின் சுரப்பை சீராக வைத்து, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும்.

மீன் :

மீன் :

அசைவப் பிரியர்கள் ஆடு மற்றும் கோழிக்கறிகளுக்குப் பதில் மீனை அதிகம் உணவில் சேர்த்து வந்தால் கெட்ட கொழுப்புகளுக்குப் பதில் உடலுக்குத் தேவையான‌ நல்ல கொழுப்புகள் கிடைக்கும்.

அனைத்து வகையான மீன்களிலும் ஒமேக 3 என்ற கொழுப்பு அமிலங்கள் அடங்கியுள்ளன. இவை வயிற்றில் கெட்ட கொழுப்புகள் படிவதைத் தவிர்ப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

குறிப்பாக டுனா, சாலமன் மற்றும் நமது கடற்கரைப் பகுதிகளில் கிடைக்கும் மீன்களில் இந்த ஒமேக 3 என்ற கொழுப்பு அமிலம் அதிகம் உள்ளது.

ஆப்பிள் :

ஆப்பிள் :

ஆப்பிள் பழத்தில் உள்ள Antioxidants உடலில் உள்ள கெட்டக் கொழுப்பினைக் கரைப்பதில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. இவற்றில் குறைந்த அளவே கலோரிகள் இருப்பதனால் உடல் உழைப்பு அதிகம் இல்லாதவர்களுக்குச் சிறந்த பழமாகக் கருதப்படுகிறது.

குதிரைவாலி :

குதிரைவாலி :

தினமும் காலையிலோ அல்லது மதியமோ சிறுதானியங்களில் ஏதாவது ஒன்றை உண்டு வந்தால் அவற்றில் உள்ள நார்ச்சத்து கொழுப்பைக் குறைத்து தொப்பை வளர்வதைத் தடுக்கும்.

முக்கியமாகக் குதிரைவாலி மற்றும் கேழ்வரகு போன்றவை பசி ஏற்படுவதைக் கட்டுபடுத்தி மிக அதிகமான உணவு உட்செல்வதைத் தடுக்கிறது.

க்ரீன் டீ :

க்ரீன் டீ :

க்ரீன் டீயில் உள்ள ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் கொழுப்பைக் குறைக்க பயன்படுகிறது. இது கெட்டக் கொழுப்பை குறைப்பதொடு நல்ல கொழுப்பின் அளவில் மாற்றத்தை ஏற்படுத்தாது. க்ரீன் டீ மன அழுத்தத்தைக் குறைத்து உடலைச் சுறுசுறுப்படையச் செய்கிறது. மேலும் இது புத்துணர்ச்சி பான‌மாகவும் செயல்படுகிறது.

தக்காளி :

தக்காளி :

தக்காளியில் "லைக்கோபீனே" (Lycopene) என்னும் பொருள் உள்ளது. இந்த லைக்கோபீனே கெட்ட கொழுப்பின் அளவைக் (குறையடர்த்தி லிப்போ புரதக் கொழுப்பு) குறைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றது.

ஆய்வுகளின்படி சமைத்த தக்காளியில் "லைக்கோபீனே" நம் உடல் தசைகளால் அதிகளவில் உறிஞ்சப்படுகிறது. எனவே தக்காளிச் சாறு மற்றும் தக்காளியினை உணவில் அதிகம் சேர்த்து கெட்டக் கொழுப்பின் அளவைக் குறைக்க முடியும்.

தூக்கம் :

தூக்கம் :

ஒரு மனிதன் சராசரியாக ஒரு நாளைக்கு ஏழு முதல் எட்டு மணி நேரம் வரை தூங்க வேண்டும். உடல் உழைப்பைத் தவிர மூளைக்குக் கொடுக்கும் வேலைகளும் உடலுக்குச் சோர்வைத் தரும்.

அதனால் ஒரு நாளில் வேலையே செய்யாமல் சோம்பலாக இருந்தாலும் நல்ல தூக்கம் தேவை. தூக்கமே இல்லாமல் இருப்பது உடல் எடை அதிகரிப்பதை அதிகரிக்கும்.

ஆனால் சரியான நேரத்தில் தூங்கி காலையில் விரைவில் எழுந்தால் நமது உடலில் வளர்சிதைமாற்றம் (Metabolism) பாதிக்கப்படாமல் மென்மேலும் வளர்ந்து தொப்பை போடுவதைத் தடுக்கிறது.

காலை உணவு :

காலை உணவு :

உடல் எடையையும் தொப்பையையும் குறைக்க நினைப்பவர்கள் ஒரு நாளைக்கு நான்கு வேளைச் சாப்பிட வேண்டும். அதாவது உங்கள் வயிற்றினை வெறும்னே போடக் கூடாது.

எப்பொழுதெல்லாம் பசி எடுக்கிறதோ அப்பொழுதெல்லாம் தேவையான அளவு சாப்பிட வேண்டும். முக்கியமாகக் காலையில் முடிந்த அளவு எட்டு மணிக்கு முன்பே நன்றாகப் போதுமான அளவு உண்ண வேண்டும்.

விட்டமின் சி :

விட்டமின் சி :

உணவுகளில் உள்ள கொழுப்புகளை சக்தியாக மாற்றும் கார்னிடைன் என்ற சத்து சுரப்பதற்கு விட்டமின் சி கண்டிப்பாக தேவை. அதோடு மன அழுத்தம் அதிகமானல் உடலில் சுரக்கும் கார்டிசாலையும் விட்டமின் சி கட்டுப்படுத்துகிறது. இந்த கார்டிசால் தான் வயிற்றில் கொழுப்பு சேர்வதற்கு முக்கிய காரணியாக இருக்கிறது.

தொப்பை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், விட்டமின் சி அதிகமுள்ள உணவுகளை தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள்.

பழச்சாறு :

பழச்சாறு :

இயற்கையான பழச்சாறாக இருந்தாலும் குடிக்க வேண்டாம் தொப்பை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பழச்சாறு அருந்தாமல் பழங்களை அப்படியே சாப்பிடுவது தான் நல்லது.

இதில் விட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ் இருந்தாலும் அதில் அதிகப்படியாக சர்க்கரை சேர்க்கப்பட்டிருக்கும். தொடர்ந்து அதிகப்படியான ஜூஸ் குடிப்பது அது தொப்பையை அதிகரித்திடும்.

ஸ்ட்ரஸ் :

ஸ்ட்ரஸ் :

தொப்பை ஏற்படுவதற்கு மன அழுத்தம் கூட ஒரு காரணம். நாம் மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் போது அட்ரினல் சுரப்பி கோர்டிசல் அதிகமாக உற்பத்தியாகிறது.இதனை ஸ்ட்ரஸ் ஹார்மோன் என்றும் அழைக்கிறார்கள்.

ஸ்ட்ரஸ் இல்லாத வாழ்க்கை யாருக்கும் அமைவதில்லை. நாம் தான் அதனை மாற்றிக் கொள்ள வேண்டும். உங்கள் மனதை அமைதிப்படுத்தும் விஷயங்களில் கவனத்தை திசை திருப்பங்கள்.

ப்ரோட்டீன் :

ப்ரோட்டீன் :

உடல் எடை குறைக்க வேண்டும் என்று நினைக்கிறவர்கள் ப்ரோட்டீன் உணவினை எடுத்துக் கொள்ள வேண்டியது கட்டாயம். ப்ரோட்டீன் நிறைந்த உணவுகள் நிறைவன உணர்வைத் தருவதுடன் மெட்டபாலிசத்தையும் அதிகரிக்கிறது.

தினசரி நீங்கள் சாப்பிடும் உணவுகளில் ப்ரோட்டீன் சத்து நிறைந்த உணவு இருக்கிறது என்று கவனம் செலுத்துங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Essential tips to reduce your belly fat.

Essential tips to reduce your belly fat.