For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

என்ன செஞ்சாலும் தொப்பை குறையமாட்டீங்குதா? அப்ப மறக்காம இத படிங்க...

பப்பளிமாஸ் பழத்தின் நன்மைகள் குறித்தும், எடையைக் குறைக்க எப்படி தயாரித்து குடிக்க வேண்டும் என்பது குறித்தும் கொடுக்கப்பட்டுள்ளது.

|

இன்றைய தலைமுறையினர் பெரும்பாலும் அவஸ்தைப்படும் ஒர் பிரச்சனை தான் உடல் பருமன். இதைக் குறைக்க பலரும் கண்ட மருந்து மாத்திரைகளை எடுத்து வருகின்றனர். என்ன தான் கெமிக்கல் கலந்த மருந்து மாத்திரைகளால் உடல் எடை வேகமாக குறைந்தாலும், அவற்றால் கட்டாயம் பக்கவிளைவுகளை சந்திக்க வேண்டி வரும்.

ஆனால் இயற்கை நமக்கு அளித்த ஒருசில காய்கறிகள் மற்றும் பழங்களைக் கொண்டே நம் உடலில் தேங்கியுள்ள அதிகப்படியான கொழுப்புக்களைக் கரைக்கலாம். அதில் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் ஒரு அற்புத பழம் தான் கிரேப் புரூட் எனப்படும் பப்பளிமாஸ்.

இந்த பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் சக்தி வாய்ந்த ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் நிறைந்துள்ளன. அதோடு இப்பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, பி, டி, ஈ மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம், மாங்கனீசு, ஜிங்க், காப்பர் மற்றும் இரும்புச்சத்து போன்றவைகளும் வளமான அளவில் உள்ளன.

சிட்ரஸ் பழ வகையைச் சேர்ந்த இப்பழம் பார்ப்பதற்கு ஆரஞ்சு பழம் போன்றே காணப்படும். இந்த பப்பளிமாஸ் பழத்தில் நாம் நினைத்திராத அளவில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளன. இப்பழத்தை ஒருவர் கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு குடித்து வந்தால், சீக்கிரம் தொப்பை குறைந்து உடல் எடையில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

இப்போது பப்பளிமாஸ் பழத்தின் நன்மைகள் குறித்தும், தொப்பையைக் குறைக்க எப்படி ஜூஸ் தயாரித்து குடிக்க வேண்டும் என்பது குறித்தும் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புற்றுநோய்

புற்றுநோய்

பப்பளிமாஸ் பழத்தில் தொற்று கிருமிகள் மற்றும் புற்றுநோயை உண்டாக்கும் கார்சினோஜென்களை அழிக்கும் ப்ளேவோனாய்டுகள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளன. ஒருவர் தினமும் 6 அவுன்ஸ் பப்பளிமாஸ் பழ ஜூஸைக் குடித்து வர, குடல் புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.

மேலும் இப்பழத்தில் உள்ள ப்ளேவோனாய்டுகள் மற்றும் வைட்டமின் ஏ நுரையீரல் புற்றுநோய் மற்றும் வாய் புற்றுநோயில் இருந்து பாதுகாப்பு அளிக்கும். முக்கியமாக ஆண்கள் இந்த ஜூஸை அடிக்கடி குடித்தால், புரோஸ்டேட் புற்றுநோயின் தாக்கத்தை தடுக்கலாம்.

பார்வை கோளாறு

பார்வை கோளாறு

பப்பாளிமாஸ் பழத்தில் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பீட்டா கரோட்டீன் ஏராளமான அளவில் உள்ளது. எனவே பார்வை பிரச்சனை உள்ளவர்கள் இப்பழத்தை தினமும் உணவில் சேர்க்க, பார்வைக் குறைபாட்டை தடுக்கலாம்.

ஆர்த்ரிடிஸ்

ஆர்த்ரிடிஸ்

பப்பளிமாஸ் பழத்தில் உள்ள சாலிசிலிக் அமிலம், மூட்டுகளில் கால்சியம் படிவதை உடைத்து, ஆர்த்ரிடிஸ் அபாயத்தைத் தடுக்கும். மூட்டுகளில் பிரச்சனை உள்ளவர்கள் பப்பாளிமாஸ் ஜூஸ் உடன் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து குடிக்க சிறப்பான பலன் கிடைக்கும்.

தொற்றுகள்

தொற்றுகள்

பப்பளிமாஸ் பழத்தில் உள்ள ப்ளேவோனாய்டுகள் தொற்றுகிருமிகளை அழித்து, உடலை நோய் தாக்குதலின்றி ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

கொலஸ்ட்ரால் பிரச்சனைகள்

கொலஸ்ட்ரால் பிரச்சனைகள்

பப்பாளிமாஸ் பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், உடலில் உள்ள அதிகளவிலான கொலஸ்ட்ராலைக் குறைக்கும். எனவே கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள், இப்பழத்தை தங்களது அன்றாட உணவில் சிறிது சேர்த்து வர இதய நோயின் அபாயத்தைக் குறைக்கலாம்.

கல்லீரல் சுத்தம்

கல்லீரல் சுத்தம்

பப்பளிமாஸ் பழத்தில் கல்லீரலை சுத்தம் செய்யும் ஏராளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் லிமோனாய்டுகள் உள்ளன. ஆகவே கல்லீரலை சுத்தமாக வைத்துக் கொள்ள இப்பழத்தை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஈறு பிரச்சனைகள்

ஈறு பிரச்சனைகள்

தினமும் 2 பப்பளிமாஸ் பழத்தை சாப்பிட்டால் ஈறுகளில் இரத்த கசிவு ஏற்படுவது தடுக்கப்படும். மேலும் இப்பழம் பற்களைச் சுற்றி ஏற்படும் நோய்களைத் தடுக்கவும் செய்யும்.

சுவாச பிரச்சனைகள்

சுவாச பிரச்சனைகள்

சுவாச பிரச்சனை இருப்பவர்களுக்கு பப்பளிமாஸ் பழம் மிகவும் சிறந்தது. பல்வேறு ஆய்வுகளில் இப்பழத்தில் உள்ள வைட்டமின் சி சுவாச பிரச்சனைகளைக் குறைப்பதோடு, ஆஸ்துமாவையும் தடுப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

சிறுநீரக கற்கள்

சிறுநீரக கற்கள்

தினமும் ஒரு லிட்டர் பப்பளிமாஸ் ஜூஸைக் குடித்து வந்தால், சிறுநீரக கற்களின் அபாயத்தைக் குறைக்கலாம். இதற்கு அதில் உள்ள வைட்டமின் சி தான் முக்கிய காரணம். அதோடு இப்பழம் உடலில் கால்சியம் கற்கள் உருவாவதையும் தடுக்கும்.

இப்போது உடல் எடையைக் குறைக்க பப்பளிமாஸ் பழத்தைக் கொண்டு எப்படி ஜூஸ் தயாரிப்பது என்று காண்போம்.

ஜூஸ் தயாரிக்க தேவையான பொருட்கள்:

ஜூஸ் தயாரிக்க தேவையான பொருட்கள்:

பழுத்த பப்பளிமாஸ் - 1

தேன் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

செய்முறை:

பப்பளிமாஸ் பழத்தை இரண்டாக வெட்டி, அதனுள் உள்ள பழத்தை பிளெண்டரில் போட்டு, தேன் சேர்த்து மென்மையாக அரைத்துக் கொண்டால், ஜூஸ் தயார்.

குடிக்கும் முறை:

குடிக்கும் முறை:

இந்த ஜூஸை தினமும் மதிய உணவிற்கு பின் ஒரு டம்ளர் குடித்து வந்தால், அதில் உள்ள பெக்டின் உடலில் இருக்கும் அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் குறைத்து உடல் எடையைக் குறைப்பதோடு, இரத்தத்தில் உள்ள இன்சுலின் அளவைக் குறைத்து, உடலின் மெட்டபாலிசத்தை சரிசம அளவில் பராமரிக்க உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Drink This After Every Meal - You Will Lose Weight Extremely Fast

Drink This After Every Meal - You Will Lose Weight Extremely Fast.
Desktop Bottom Promotion