பாகுபலி பிரபாஸ் இவ்வளவு ஃபிட்டாக இருப்பதன் ரகசியம் என்னவென்று தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பாகுபலி 2 திரைப்படம் வெளிவந்துவிட்டது. பாகுபலியில் நடித்த பிரபாஸ் தான் அனைவராலும் ஈர்க்கப்பட்டவர். ஆரம்பத்தில் பாகுபலி கதாப்பாத்திரத்திற்கு பிரபாஸ் அவர்களிடம் 20 கிலோ எடையை அதிகரிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்பட்டார்.

20 கிலோ எடையை அதிகரிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அதிலும் பிரபாஸ், தான் நடித்த 2 கதாப்பாத்திரங்களுக்கும் நல்ல வேறுபாடுகளை காண்பித்துள்ளார். இப்போது பாகுபலி படத்திற்காக தனது உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள பிரபாஸ் மேற்கொண்ட சில ஃபிட்னஸ் ரகசியங்கள் குறித்து காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

பாகுபலி திரைப்படத்திற்காக கடந்த சில வருடங்களாக பிரபாஸ் ஒரு நாளைக்கு 3-6 மணிநேரம் உடற்பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். சில நாட்கள் கட்டுக்கோப்பான உடலைப் பெற ஒரு நாளைக்கு கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வாராம்.

#2

#2

காலையில் கார்டியோவாஸ்குலர் உடற்பயிற்சிகளான ரன்னிங், நீச்சல் போன்றவற்றை மேற்கொள்வாராம். மாலையில் அதிக பளுவைத் தூக்கும் பயிற்சியை மேற்கொள்வாராம்.

#3

#3

பிரபாஸ் பாகுபலி படத்தில் சிவுடு கதாப்பாத்திரத்திற்காக மிகவும் கவனமாக டயட் மேற்கொண்டார். இந்த கதாப்பாத்திரத்தை நடித்து கொடுக்கும் வரை கார்போஹைட்ரேட் இல்லாத உணவுகளை உட்கொண்டார். ஆம், இக்காலத்தில் அரிசியை முற்றிலும் தவிர்த்திருந்தார். மேலும் பாகுபலி கதாப்பாத்திரத்திற்காக, வெறும் கைக்குத்தல் அரிசி, ஓட்ஸ், பாஸ்தா போன்றவற்றை உட்கொண்டு வந்தார்.

#4

#4

காலையில், முட்டையின் வெள்ளைக்கருவுடன் புரோட்டீன் பவுடரை உட்கொண்டு வந்தார். அதிலும் ஒரு நாளைக்கு 40 முட்டையின் வெள்ளைக்கருவை உட்கொள்வாராம். மேலும் காலையில் 250 கிராம் சிக்கன் மற்றும் பழங்களை உட்கொள்வாராம்.

#5

#5

முக்கியமாக பிரபாஸ் ஒரு நாளைக்கு 6 வேளை உணவு உட்கொள்வாராம். அதுவும் 2 மணிநேரத்திற்கு ஒருமுறை உணவு உண்பாராம். ஒவ்வொரு வேளையும் அவரது தட்டில் பாதாம், காய்கறிகள், மீன் போன்றவை இருக்குமாம்.

#6

#6

ஒரு நாளில் மட்டும் பிரபாஸ் 2000-4000 கலோரிகள் எடுப்பாராம். அதோடு, தீவிர எடைத் தூக்கும் உடற்பயிற்சியையும் மேற்கொள்வாராம்.

 #7

#7

பாகுபலி திரைப்படத்திற்காக தன் உடலை கட்டமைப்புடன் வைத்துக் கொள்ள, பிரபாஸ் சுமார் 1.5 கோடி செலவழித்து உடற்பயிற்சி பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து பயன்படுத்தியதாக சில ஆதாரங்கள் கூறுகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Diet And Fitness Secrets Of Bahubali Prabhas!

பாகுபலி படத்திற்காக தனது உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள பிரபாஸ் மேற்கொண்ட சில ஃபிட்னஸ் ரகசியங்கள் குறித்து காண்போம்.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter