For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சாப்பிடும் நேரத்தை குறைத்துக் கொண்டால் உடல் பருமனை குறைக்கலாம்!!

உடல் பருமனை குறைக்க சாப்பிடும் நேரம் மற்றும் முறையை எப்படி கடைப்பிடிப்பது என இந்த கட்டுரையில் காணலாம்.

By Ambika Saravanan
|

பொதுவாக டயட் என்பது என்ன உணவை சாப்பிட வேண்டும் என்று கூறுவதாகும். ஆனால் இப்போது ஒரு டயட் பல இடங்களில் பரவலாக பின்பற்ற பட்டு வருகிறது, அது எப்போது சாப்பிட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. இந்த டயட்டுக்கு பெயர் இன்டெர்மிட்டேன்ட் பாஸ்டிங் (Intermittent fasting) என்னும் இடைவெளியிட்ட விரதம் என்பதாகும்.

நாம் சாப்பிடும் நேரத்தை குறைத்தாலே சில கலோரிகள் குறைய வாய்ப்பிருக்கிறது. இதனால் உடல் எடை குறைகிறது, இதய ஆரோக்கியம் மேம்படுகிறது மற்றும் இரத்த சர்க்கரை அளவு சீராகிறது. இந்த இடைவெளியிட்ட டயட்டில் பொதுவான முறை, குறிப்பிட்ட நேரத்தில் உண்ணுதல் என்பதாகும். இதனை பற்றி அறிந்து கொள்வதற்காகத்தான் இந்த பதிவு.

Benefits of Restricted diet and its procedure to follow

இடைவெளியிட்ட விரதத்தில் பொதுவாக சாப்பிடாமல் இருக்கும் நேரங்கள் 8-12 மணி நேரம் இருக்கலாம். குறிப்பிட்ட நேரத்தில் உண்ணுதல் என்பது ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் சாப்பிட்டு , சாப்பிடும் நேரத்தை குறைப்பது தான் .

அதாவது, உங்கள் நாளில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை சாப்பிடும் நேரமாக நிர்ணயித்தால், மீதி இருக்கும் 16 மணி நேரமும் விரதம் தான். இந்த நேரத்தில் வேறு எதையும் சாப்பிட கூடாது. கலோரிகள் சுத்தமாக அதிகரிக்கக்கூடாது. இந்த அட்டவணையை தினமும் பின்பற்ற வேண்டும்.

ஒரு சிலர், காலையில் எழுந்தது முதல் இரவு படுக்க போகும் வரை எதாவது சாப்பிட்டுக்கொண்டே இருப்பர் . அவர்கள் இந்த முறையை பின்பற்றும்போது குறைந்த அளவு சாப்பிட தொடங்குவர். இதன்மூலம் கலோரிகளும் குறைகிறது. 10 மணி நேரம் எதையும் உண்ணாமல் இருக்கும் பெரியவர்களுக்கு 20% வரை கலோரிகள் குறைய வாய்ப்பிருக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.

ஒருவரின் உண்ணும் காலம் 4 மணி நேரமாக இருக்கும் போது ஒரு நாளைக்கு 650 கலோரிகள் தான் கிடைக்கிறது என்று மற்றொரு ஆய்வு கூறுகிறது. குறைந்த நேரம் சாப்பிடும்போது, அதிக கலோரி உள்ள உணவுகளை உண்ணுவதால் எந்த ஒரு மாற்றமும் ஏற்படுவது இல்லை.

சராசரி எடை மற்றும் அதிக எடை கொண்டவர்கள், உண்ணும் நேரத்தை 7-12 மணி நேரமாக குறைக்கும்போது , 2-4 வாரத்தில் அவர்களின் எடை குறைப்பு 5% வரை இருக்கிறது. எப்படி இருந்தாலும் உணவு உண்ணும் நேரத்தில் குறைந்த கலோரி உணவுகள் உண்ணுவது தான் எடையை குறைக்க உதவவும்.

இதய ஆரோக்கியத்தை பாதிக்கும் பல விஷயங்களில் கொலஸ்ட்ராலும் ஒன்று. கெட்ட கொலஸ்ட்ரால் இதய நோய் பாதிப்பை உண்டாக்கும் , நல்ல கொலஸ்ட்ரால் இதய நோய் பாதிப்பை குறைக்கும்.

குறிப்பிட்ட நேரத்தில் உண்ணுதல் என்ற முறையில் 8 மணி நேர உணவு நேரத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை 10% வரை ஆண் மற்றும் பெண் இருவருக்கும் குறைக்கிறது என்று கூறப்படுகிறது.

குறிப்பிட்ட நேரத்தில் உண்ணுதல் என்பதை எளிய முறையில் பின்பற்றலாம்.

பொதுவாக நீங்கள் தினசரி உண்ணும் நேரத்தை கணக்கில் கொள்ளுங்கள். உதாரணத்திற்கு உங்கள் காலை உணவு காலை 8 மணிக்கு தொடங்குகிறது என்று வைத்து கொள்வோம். இரவு உணவு இரவு 9 மணிக்கு முடிகிறது என்று வைத்து கொள்வோம். இப்போது உங்கள் உணவு நேர கணக்கு 13 மணி நேரம். நீங்கள் 13 மணி நேரத்தை விட குறைவான நேரத்தை இப்போது திட்டமிட வேண்டும். அதாவது உங்கள் உண்ணும் நேரம் 8-9 மணி நேரமாக மாற்ற பட வேண்டும். இப்படி உண்ணும் நேரத்தை குறைக்கும்போது இயல்பாகவே சில உணவுகளை நீங்க தவிர்க்க நேரிடும்.

பொதுவாக 6-10 மணி நேரத்தை அனைவரும் பின்பற்றுவர். இந்த முறையை பின்பற்றுவோர், குறைந்த கார்போ உணவுகளும், அதிக புரத உணவுகளும் எடுத்துக் கொள்வர்.

இந்த உணவு முறையோடு உடற்பயிற்சியும் சேரும்போது நல்ல பலனை எதிர்பார்க்கலாம். இந்த உணவு முறையோடு பயிற்சிகள் சேரும் போது எந்த எதிர்மறை விளைவுகளும் ஏற்படுவதில்லை. மாறாக உடல் வலிமை அதிகரிக்கிறது.

குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் உண்ணுவதால் நம்மால் அதிகமான உணவை எடுத்து கொள்ள முடியாது. இதனை அனைவராலும் முயற்சித்து பார்க்க முடியாது. டையட்டில் ஆர்வம் உள்ளவர்கள் முயற்சித்து பார்த்து நல்ல பலன்களை அடையலாம்.

English summary

Benefits of Restricted diet and its procedure to follow

Benefits of Restricted diet and its procedure to follow
Story first published: Wednesday, September 27, 2017, 16:23 [IST]
Desktop Bottom Promotion