உடல் எடையை குறைக்க ஒரு எளிமையான வழி இதுதான்!!

Written By:
Subscribe to Boldsky

நாள்தோறும் நாம் ஃபிட்னெஸ்ஆக இருப்பதால் மூட்டு வலி, முதுகுவலி ஆகியவற்றை வராமல் தடுக்க நாம் நமது உடல் நலத்தை பராமரிப்பது முக்கியம்.

உடற்ப்யிற்சியும் ஆரோக்கிய உணவுகளும் எவ்வளவு முக்கியமோ அதே அளவு நோய்களை வராமல் கத்திட சில விஷயங்கள் நீங்கள் செய்ய வேண்டும்.

சில வகை உணவுகள் உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குகின்றன. கல்லீரலை பாதுகாக்கின்றன. இளமையான சருமத்தை தருகின்றன. இதற்கு மேல் ஃபிட்னெஸ் தருவதற்கு வேறு என்ன நாம் எதிர்பார்க்கப் போகிறோம். அப்படியான சில டிப்ஸ்களை இப்போது பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 ஜீரண சக்தி :

ஜீரண சக்தி :

நாம் சாப்பிடும் உணவுகளால் வாய்வு, அஜீரணம், அல்லது உப்புசம் போன்ற பாதிப்புகள் வரலாம். ஆகவே தினந்தோறும் எலுமிச்சை சாறில் இஞ்சியை தட்டி போட்டு சிறிது உப்பை கலந்து குடித்தால் எந்தவிதமான ஜீரண சம்பந்த நோய்கள் தீரும்.

 நோய் எதிர்ப்பு மண்டலம்:

நோய் எதிர்ப்பு மண்டலம்:

மசாலா பொருட்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகின்றன.சீரகம் மற்றும் மஞ்சள் நச்சுக்களை வெளியேற்றும். சோம்பு மிளகு நோய் எதிர்ப்பு சக்தை அதிகரிக்கச் செய்யும். விஷம் முறிக்கும். வெந்தயம் குளிர்ச்சி தரும். ரத்தத்தை சுத்தப்படுத்தும்.

வலுவான கூந்தல் கிடைக்க :

வலுவான கூந்தல் கிடைக்க :

கூந்தல் அழகு மட்டுமல்ல ஆரோக்கியமும் சம்பந்தப்பட்டது. இரும்புச் சத்து குறைப்பாட்டால் முதலில் கண்கூடாக தெரிவது கூந்தலில்தான். ஆகவே தினமும் கருவேப்பிலை மற்றும் வெந்தயம் பயன்படுத்துவதால் கூந்தல் உதிர்வு பிரச்சனை உண்டாகாது.

அதோடு தேங்காய் எண்ணெய் மற்றும் நெல்லிக்காயை கூந்தலுக்கு பயன்படுத்தினால் ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சி கிடைப்பது உறுதி.

இளமையான சருமம் :

இளமையான சருமம் :

சந்தனம் போல் சருமத்திற்கு பலன் தரும் ஃப்ரெண்ட்லியான சாதனம் அரிது. சந்தனக் கட்டையால் ரோஸ் வாட்டர் கொண்டு நனைத்து அரைத்து அதனுடன் சிறிது மஞ்சள் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவுங்கள்.

இவ்வாறு செய்தால் எப்போது இளமையான சருமம் கிடைக்கும். அதோடு கேரட், பீட்ரூட் மற்றும் மாதுளை ஜூஸ் குடிப்பதால் சருமம் மினுமினுப்பு பெறும்.

 உடல் எடை குறைய :

உடல் எடை குறைய :

உங்கள் எடை குறைய வேண்டுமானால் உங்கள் ஜீரண சக்தியை நீங்கள் துரிதப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்யும் போது கொழுப்பு உணவுகள் வேகமாக கரையப்பட்டு சக்திக்குள்ளாகும். இதனால் கொழுப்பு உடலில் சேமிக்காமல் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கும்.

அதற்கு மிக எளிய வழி இளஞ்சூட்டில் நீர் குடிப்பது. இதனால் உடலின் வெப்ப நிலை உயரும். ஆகவே ஜீரண நோதிகள் வேகமாக வேலை செய்து உணவௌ சக்தியாக மாற்ற உதவும், இதனால் உங்கள் உடல் எடையை கட்டுகோப்பாக வைத்திருக்க முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

5 Ayurvedhic secretes for great health, fitness and your beauty

5 Ayurvedhic secretes for great health, fitness and your beauty
Story first published: Saturday, March 4, 2017, 9:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter