For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடல் எடையை குறைக்கும் சலபாசனாவை கற்றுக் கொள்ளுங்கள்- தினம் ஒரு யோகா

|

உடல் எடை கூடிவிட்டால் குறைப்பது எவ்வளவு கடினமென பருமனாய் இருப்பவர்களுக்குதான் தெரியும். உடல் பருமனால் , மூட்டு வலி, இடுப்பு வலி, முதுகுத்தண்டு பாதிப்பு, சர்க்கரை வியாதி, இதய நோய்கள் என பலப் பல பிரச்சனைகளை உருவாக்கிவிடும்.

உடல் எடை குறைக்க வேண்டும் என்று எவ்வளவோ உணவுக் கட்டுப்பாடு, ஜிம் உடற்பயிற்சி இவை எதுவுமே கை கூடவில்லையென்றால் வருத்தப் படவேண்டாம்.

salabhasana to reduce body weight

கொழுப்பை கரைக்க யோகாவில் எவ்வளவோ ஆசனங்கள் உண்டு. அதில் ஒன்றுதான் சலபாசனா. உடல் எடையை குறைக்க இந்த ஆசனம் மிகச் சிறந்த ஆசனம் என யோகா பயிற்சியாளர்கள் கூறுகிறார்கள். சலபாசனாவை எப்படி செய்யலாம் என பார்க்கலாம் வாருங்கள்.

செய்முறை :

முதலில் தரை விரிப்பில் குப்புற கால் நீட்டிப் படுத்துக் கொள்ளுங்கள். கைகளை பக்கவாட்டில் வைத்துக் கொள்ளவும். தலையை நேராக வைத்துக் கொள்ளுங்கள். நாடி தரையில் பதிய வேண்டும்.

ஆழ்ந்து மூச்சை விட்டு, மெதுவாக தலையை உயர்த்துங்கள்.
மார்புப் பகுதிவரை வரை மேலே தூக்குங்கள். பின்னர் கால்களையும் தொடைப்பகுதியையும் அவ்வாறே தூக்கவேண்டும்.

இடுப்பு மட்டுமே தரையில் இருக்க வேண்டும். படகுபோல தோற்றம் இருக்கும். கைகளையும் பின்னாடி கொண்டு செல்லுங்கள். சில நொடிகளில் இந்த நிலையில் ஆழமாக மூச்சை இழுத்துவிட்டபடி இருங்கள். பின்னர் மெதுவாய் தளர்ந்து, இயல்பு நிலைக்கு வர வேண்டும். இதுபோல் 8-10 முறை செய்யலாம்.

பலன்கள் :

உடல் எடை குறையும். தசைகள் வலுப் பெறும், ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். அடிவயிற்றில் கொழுப்புகளை கரைக்கும். அங்குள்ள உறுப்புக்களை நன்றாக இயங்க வைக்கும். மன அழுத்தத்தை குறைக்கும். முதுவலி நீங்கும்.

குறிப்பு :

கழுத்து, முதுகுத் தண்டில் அடிப்பட்டவர்கள் இந்த ஆசனத்தை செய்வது தவிர்க்கவும்.

English summary

salabhasana to reduce body weight

salabhasana to reduce body weight
Story first published: Thursday, July 7, 2016, 13:04 [IST]
Desktop Bottom Promotion