உடல் எடையை குறைக்கும் ஈஸியான ஓட்ஸ் கஞ்சி!

Written By: Hemalatha
Subscribe to Boldsky

உடல் எடையை உங்களுக்கு குறைக்கனும்னு ஆசையா இருக்கு. ஆனால் உடற்பயிற்சி செய்யவோ, ஜிம் போகவோ நேரம் இல்ல. யோகாவும் பண்ணமுடியாத அளவுக்கு சோம்பேறித்தனம்.

எதுவுமே செய்ய மாட்டோம் ஆனால் உடல் எடையை மட்டும் குறைக்கனும்னு ஆசை. இது எண்ணம் தப்புதான். ஆனாலும் உங்களை காப்பாற்ற ஒரு உணவு இருக்கிறது. அது என்ன தெரியுமா? ஓட்ஸ்.

Oats porridge to reduce body weight

ஓட்ஸில் வயிற்றில் இருக்கும் கொழுப்பினை குறைக்கிறது. ஒரே ஒரு மாதம் தினமும் ஓட்ஸை காலை சிற்றுண்டியாக எடுத்துக் கொள்ளுங்கள்.நீங்களா இது என எல்லாரும் கேக்கும் அளவுக்கு ஸ்லிம் ஆவீர்கள். இது பசியை அதிக நேரம் தாங்கச் செய்யும். அதே சமயம் உடல் எடையை கூட்டாது.

ஓட்ஸ் செய்வது மிக எளிது. காலையில் உங்கள் வீட்டில் சமைப்பவர்களுக்கு வேலை பளு குறைக்கலாம். மகிழ்ச்சியாக செய்து தருவார்கள். ஆனால் உடலுக்கு பல மடங்கு நன்மைகள் தருகிறது என அறிவீர்களா?

Oats porridge to reduce body weight

ஓட்ஸ் கஞ்சி உங்களுக்கு விருப்பமான எந்த வகையிலும் தயாரிக்கலாம். வெறும் நீரிலோ, அல்லது பாலிலோ தயாரிக்கலாம். உங்களுக்கு பழங்கள் கஞ்சியில் சேர்த்து சாப்பிட விருப்பம் இருந்தால், பாலில் கஞ்சி செய்வது தவிருங்கள்.

அதற்கு பதிலாக நீரில் கலந்து கஞ்சியை செய்யலாம். திராட்சை முந்திரி ஆகியவற்றை பாலில் கஞ்சி செய்யும் போது சேர்த்தால் இன்னும் சுவையாக இருக்கும்.

கடைகளில் ஓட்ஸ் பாக்கெட்டை வாங்கும்போது அதன் கவரினை சரிபார்க்கவும். பாக்கெட்டின் மேலே ஏதேனும் ஃப்ளேவர் மற்றும் ஏதாவது செயற்கை சேர்க்கைகள் இருந்தால் வாங்காதீர்கள்.

இப்போது கஞ்சி எப்படி செய்வது என பார்க்கலாம் :

Oats porridge to reduce body weight

தேவையானவை :

ஓட்ஸ் தானியம் - ஒரு கப்

நீர் - 2 கப்

பால் - 1 கப்

முதலில் பாலினை கொதிக்க வைத்து, நீரினை ஒரு கப் ஊற்றுங்கள். அதில் ஓட்ஸினை சேர்த்து நன்றாக கலக்குங்கள். கெட்டியாக இருந்தால் மேலும் கஞ்சிக்கு தேவையான நீரை ஊற்றுங்கள்.உங்களுக்கு எவ்வளவு இனிப்பு தேவையோ, அந்த அளவு சர்க்கரை சேர்த்து, ஓட்ஸ் வெந்ததும் இறக்கிவைத்துவிடுங்கள்.

விருப்பமிருந்தால் தேன் சேர்க்கலாம். ஓட்ஸ் கஞ்சி முழுவதும் ஆறியவுடன்தான் தேன் சேர்க்க வேண்டும். சூடாக இருக்கும் போது சேர்த்தால் உடலுக்கு விஷத்தன்மையை தேன் தரும்.

Oats porridge to reduce body weight

அடுப்பிலிருந்து இறக்கியதும் முந்திரி திராட்சை ஆகியவற்றால் அலங்கரித்து பரிமாறிலாம்.

இது உடலுக்கு தேவையான அனைத்து விட்டமின் மற்றும் மினரல்களை நமக்கு தருகிறது. கால்சியம் நிறைந்தது.

English summary

Oats porridge to reduce body weight

Oats porridge to reduce body weight
Please Wait while comments are loading...
Subscribe Newsletter