ஆண்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய சிக்ஸ் பேக் பற்றிய சில கட்டுக்கதைகள்!

Posted By:
Subscribe to Boldsky

ஒவ்வொரு ஆணுக்கும் சிக்ஸ் பேக் வைக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். அதற்காக பல முயற்சிகளையும் மேற்கொண்டிருப்பார்கள். ஆனால் சிக்ஸ் பேக் குறித்த சில கட்டுக்கதைகள் ஏராளமாக உள்ளன.

ரித்திக் ரோஷன் தன் தொப்பையைக் குறைத்து எப்படி சிக்ஸ் பேக் வைத்தார் தெரியுமா?

பொதுவாக உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க முயற்சிக்கும் போது, முதலில் உடலின் மற்ற பகுதிகளில் உள்ள கொழுப்புக்கள் கரைந்து, இறுதியில் தான் வயிற்றில் உள்ள கொழுப்புக்கள் கரையும். அதனால் தான் தொப்பையைக் குறைப்பது என்பது கடினமான ஒன்றாக உள்ளது.

எப்போதும் ஃபிட்டாக இருப்பதற்கு அமீர் கான் பின்பற்றும் டயட் இது தாங்க...!

தொப்பையை நீங்கள் குறைக்கும் வரை உங்களது சிக்ஸ் பேக் தெரியாது. எனவே சிக்ஸ் பேக் வைக்க சரியான டயட், உடற்பயிற்சி மற்றும் சரியான அணுகுமுறை போன்றவை சிக்ஸ் பேக் வைக்க முக்கியமானது.

சிக்ஸ் பேக் வைப்பதற்கு நடிகர் சூர்யா மேற்கொண்ட டயட் இதுதாங்க...

இங்கு சிக்ஸ் பேக் குறித்த சில கட்டுக்கதைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கட்டுக்கதை #1

கட்டுக்கதை #1

பலரும் ஜிம்மில் கடுமையான உடற்பயிற்சிகளை செய்யும் போது, எந்த உணவுகளை வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் அது தவறு. அதிலும் சிக்ஸ் பேக் வைக்க நினைத்தால், சரியான டயட்டை தினமும் பின்பற்ற வேண்டும்.

கட்டுக்கதை #2

கட்டுக்கதை #2

ஒரு குறிப்பிட்ட உணவுகளை உட்கொண்டால், வயிற்றில் உள்ள கொழுப்புக்கள் கரையும் என்று சொல்வது கட்டுக்கதை. சரியான டயட்டுடன், உடற்பயிற்சிகளையும் தினமும் மேற்கொண்டு வந்தால் மட்டுமே, கொழுப்புக்களைக் கரைக்க முடியுமே தவிர, வெறும் கொழுப்புக்களைக் கரைக்கும் உணவுகளை உட்கொண்டால் மட்டும் பலனைப் பெற முடியாது.

கட்டுக்கதை #3

கட்டுக்கதை #3

ஏழே நாட்களில் சிக்ஸ் பேக்கைப் பெற முடியும் என்று சொல்வது முற்றிலும் தவறானது. உங்களது ஆப்ஸை வடிவமைப்பது என்பது மிகவும் சவாலான ஒன்று. எனவே சிக்ஸ் பேக் வைக்க கட்டாயம் பல மாதங்கள் அல்லது ஒரு வருடம் கூட ஆகும்.

கட்டுக்கதை #4

கட்டுக்கதை #4

தினமும் க்ரஞ்சஸ் செய்தால் மட்டும் சிக்ஸ் பேக்கைப் பெற முடியாது. கலோரிகளை எரிக்கவும், கொழுப்புக்களைக் கரைக்கவும் அதற்கேற்ற தனித்தனி உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். க்ரஞ்சஸ் என்பது உடற்பயிற்சியை ஆரம்பிக்கு முன் செய்யக்கூடிய ஓர் நல்ல உடற்பயிற்சி.

கட்டுக்கதை #5

கட்டுக்கதை #5

பெண்களால் சீக்கிரம் சிக்ஸ் பேக் வைக்க முடியும் என்ற கருத்து மக்களிடையே உள்ளது. ஆனால் ஃபிட்னஸ் நிபுணர்கள் பெண்களை விட ஆண்களால் தான் வேகமாக சிக்ஸ் பேக் வைக்க முடியும் என்கின்றனர். ஏனெனில் ஆண்களை விட, பெண்களின் உடலில் கொழுப்புக்கள் சற்று அதிகமாகவும், வேகமாகவும் தேங்கும். எனவே பெண்களால் உடலில் தேங்கிய கொழுப்புக்களை கரைப்பது என்பது கடினமான ஒன்று.

கட்டுக்கதை #6

கட்டுக்கதை #6

சிக்ஸ் பேக் வைக்க கார்டியோ பயிற்சிகள் மிகவும் சிறந்தது என்ற கருத்தும் மக்களிடையே உள்ளது. ஆனால் சிக்ஸ் பேக்கை வேகமாக பெற வேண்டுமானால், கார்டியோவுடன் ரெசிஸ்டன்ஸ் பயிற்சியும் அவசியமானது.

கட்டுக்கதை #7

கட்டுக்கதை #7

சிக்ஸ் பேக் ஆப்ஸ் நிரந்தரமானது என்பது முற்றிலும் பொய். நீங்கள் சற்று எடை அதிகரித்தால், உங்கள் சிக்ஸ் பேக் ஆப்ஸ் மறைந்துவிடும். முக்கியமாக சிக்ஸ் பேக் ஆப்ஸை பராமரிப்பது என்பது எளிதான காரியமல்ல.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Myths About Six Pack Abs

Both men and women are crazy about owning a set of six pack abs. But there are so many myths circulating around. Let us bust them first.
Subscribe Newsletter