தினமும் டயட்டில் அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டிய சாறுகள் எவையென தெரியுமா?

Written By: Hemalatha V
Subscribe to Boldsky

ஜூஸ் குடிப்பது எல்லாருக்குமே பிடித்தமானது. குடிப்பதும் எளிது, சத்துக்களும் நிறைய கிடைக்கும். அப்படி பழச்சாறுகளை குடிப்பதனால் எளிதில் நீர்ச்சத்துக்கள் கிடைக்கும். எளிதில் ஜீரணமாகிவிடும். தேவைப்படும் மினரல்கள் உடலுக்கு கிடைக்கும்.

சில பழங்களை, காய்களை அப்படியே சாப்பிட்டால் நல்லது. ஆரஞ்சு, திராட்சை போன்றவற்றை ஜூஸ் போட்டு குடிப்பதனால் நார்சத்துக்களை இழக்க நேரிடும். அவற்றை அப்படியே சாப்பிடுவது நல்லது.

Health benefits of these juices

சிலவகைகளில் ஜூஸ் போட்டு குடிப்பதனால் சத்துக்களும் கிடைக்கும். ஜீரணமும் ஆகும். அவ்வகையான உடலுக்கு நன்மைகளைத் தரும் ஜூஸ் பற்றி பார்க்கலாம். அவ்ற்றை தினமும் டயட்டில் சேர்த்துக் கொண்டால், இளமையாகவும் ஆரோக்கியமாகவும் வாழலாம்.

நெல்லிக்காய் ஜூஸ் :

நெல்லிக்காய் துவர்ப்பு சுவை கொண்டது. நாம் நெல்லிக்காயில் துவையல், ஊறுகாய் போன்றவற்றை செய்து சாப்பிடுவோம். உப்பு மிளகாய்பொடியுடன், தொட்டுக் கொண்டு சாப்பிடுவதும் விருப்பமானதாக இருக்கும். இருப்பினும் அதன் துவர்ப்பு சுவை எல்லார்க்கும் அவை பிடிப்பதில்லை. நெல்லிக்காய் சாறு குடிப்பதால் அதன் துவர்ப்பு சுவையை மட்டுப்படுத்த முடியும்.

Health benefits of these juices

சத்துக்கள் :

இதில் விட்டமின் சி, அதிகம் உள்ளது. ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. கொழுப்பு அளவை குறைக்கிறது. இரத்த சோகையை குணப்படுத்துகிறது. கண்பார்வையை அதிகரிக்கச் செய்கிறது.

ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. மலச்சிக்கலை சரிப்படுத்தும். இதில் நிறைய ஆன்டி ஆக்சிடென்ட் உள்ளது. சுருக்கங்களை போக்கும். சருமத்தை அழகாக வைத்திருக்கும்.

பாவக்காய் ஜூஸ் :

பாவக்காய் கசப்புத் தன்மை கொண்டது. பெரும்பாலும் கேரளாவில் முக்கிய காயாக இருக்கிறது. அதிலும் பாவக்காய் ஜூஸை அவர்கள் அன்றாடம் மதிய வேளைகளில் சேர்த்துக் கொள்கிறார்கள். கசப்புத் தன்மை இருந்தாலும் அதனை ஜூஸாக குடிக்கும்போது கசப்புத் தன்மை மட்டுப்படும்.

Health benefits of these juices

நன்மைகள் :

பாவக்காய் இதயத்திற்கு நல்லது. கொழுப்பினை குறைக்கும். சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு, சர்க்கரையின் அளவை ரத்தத்தில் குறைக்கும். சிறுநீரகத்தில் ஏற்படும் கற்களை கரைக்கும். கேன்சர் செல்கள் உருவாவதை தடுக்கிறது என ஆய்வுகள் கூருகின்றன.

சோற்றுக் கற்றாழை ஜூஸ் :

இது மிகச் சிறந்த பானம் என்ரால் மிகையாகாது. ஜீரண உறுப்புகளில் உண்டாகும் பிரச்சனைகளை குணப்படுத்து. அல்சர், அசிடிட்டி போன்றவற்றை குணப்படுத்தும்.

உடலிலும் சருமத்திலும் உண்டாகும் பாதிப்புகளை சரி செய்யும். இவற்றிலுள்ள விட்டமின் பி,சி, ஈ மற்றும் ஃபோலேட் உடலில் உண்டாகும் காயம் மற்றும் பாதிப்புகளை ரிப்பேர் செய்யும். சருமத்தை இளமையாக வைத்திருக்கும்.

Health benefits of these juices

சுரைக்காய் ஜூஸ் :

சுரைக்காயில் அதிகமாய் நீர்சத்தும், நார்சத்தும் கொண்டுள்ளது. உடல் எடையை கணிசமாக குறைக்கும். நச்சுக்களை வெளியேற்றி விடும். வெள்ளரிக்காயின் சுவை போலவே கொண்டுள்ளதால் இதனை ஜூஸாக்கி குடிக்கும்போது, சுவை நிறைந்ததாக இருக்கும்.

Health benefits of these juices

இது ஹார்மோன் சம நிலையில்லாமல் இருந்தால், அதனை குணப்படுத்தும். கர்ப்பப்பையை பலப்படுத்துகின்றது. சிறுநீர் தொற்றுக்களுக்கு சிறந்த மருந்து இந்த ஜூஸ். மலச்சிக்கலை தீர்க்கும்.

English summary

Health benefits of these juices

Health benefits of these juices
Story first published: Tuesday, June 28, 2016, 9:45 [IST]