ஜிம் செல்வதற்கு முன்னாடி என்ன செய்ய வேண்டும் ?

Written By: Hemalatha V
Subscribe to Boldsky

நமது உடல்தான் கோவில். உடற்பயிற்சிகள்தான் பிராத்தனைகள். உடற்பயிற்சிகள் எவ்வளவு செய்கிறோமோ அவ்வளவு பிரதி பலன் கிடைக்கும். ஃபிட்னெஸ் ஆக இருக்க விரும்புவர்கள் ஜிம் செல்வார்கள். அல்லது போதிய உபகரணங்கள் கொண்டு உடற்பயிற்சி செய்வார்கள்.

இது நல்லது என்றாலும் சில முக்கிய விஷயங்கள் என்னவென்றால், நீங்கள் பயிற்சியை ஆரம்பிப்பதற்கு முன் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பது மிக முக்கியம்.

Food to eat and avoid to work out

சிலர் எப்போதும் போல் நன்றாக சாப்பிட்டுவிட்டு செல்வார்கள் அல்லது ஒன்றுமே சாப்பிடாமல் வெறும் வயிற்றுடன் பயிற்சிகள் செய்வார்கள். இந்த இரண்டுமே தவறு. எப்படி சாப்பிட வேண்டும் எவ்வாறு பயிற்சிகள் செய்ய வேண்டுமென அனுபவம் வாய்ந்த வல்லுநர்கள் கூறுகிறார்கள் கேளுங்கள் :

ஃபிட்னெஸாக இருப்பதற்கு :

உடற்பயிற்சி செய்வதற்கு போதுமான சக்தி தேவை. வெறும் வயிற்றில் செய்ய்தால் நீங்கள் நினைத்தபடி ஃபிட்னெஸ் கொண்டு வரமுடியாமல் போய்விடும்.

அதேபோல் வயிறு முட்ட சாப்பிட்டு செல்வதும் மிக தவறு. ஏனெனில் சாப்பிட்ட உணவு ஜீரணம் ஆக குறைந்தது 3 மணி நேரம் ஆகும். ஆனால் அதற்குள் பயிற்சிகள் செய்தால், ஜீரணமும் சரிவர நடக்காது. போதிய அளவு சக்தியும் கிடக்காது. விரும்பியபடி கட்டுகோப்பான உடலும் வராது.

Food to eat and avoid to work out

எந்த விதமான பயிற்சிகள் :

நீங்கள் என்னவிதமான பயிற்சிகள் செய்கிறீர்களோ அதற்கேற்ப உணவை உட்கொண்டு செல்வது அவசியம். உதாரணத்திற்கு கொழுப்பு குறைய நீங்கள் பயிற்சிகள் செய்கறீர்களென்றால், வாழைப்பழம், குறைவான கொழுப்பு உள்ள யோகார்ட் ஆகியவற்றை சாப்பிட்டு செல்லலாம்.

நீங்கள் தசைகள் இறுக பயிற்சிகள் செய்கிறீர்களென்றால் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளான ஓட்ஸ், சப்பாத்தி, பிரட் ஆகியவற்றை சாப்பிட்டு செல்லுங்கள்.

என்ன விதமான உணவுகள் :

வாழைப்பழம் :

வாழைப்பழத்தில் எளிமையாக ஜீரணமடையக் கூடிய சத்துக்கள் , குறைந்த அளவு கார்போஹைட்ரேட், பொட்டாசியன் நிறைந்த உணவு. இது உடற்பயிற்சியின்போது இழக்கும் நீர் மற்றும் மற்ற தாது சத்துக்களை ஈடு செய்யும்.

நட்ஸ் :

நட்ஸ் மற்றும் பருப்பு வகைகள் நிறந்த எனர்ஜியை தரும். பாதாம், பிஸ்தா, வால்நட், ஆகியவை ஒமே 3 கொழுப்பு அமித்தை கொண்டுள்ளன. வேகமாக உங்கள் பயிற்சிக்கு துணைபுரியும்.

யோகார்ட், ஸ்ட்ராபெர்ரி, நட்ஸ் போன்றவைகளை கலந்து சாப்பிட்டு செல்வதால் நீங்கள் விரும்பும் வகையில் சீக்கிரம் ஃபிட்னெஸ் கிடைக்கும். சீஸ் சாப்பிடுவதும் நல்லது. எனர்ஜியை தரும்.

முட்டை பிரட் வகைகள் :

முட்டை மற்றும் பிரட்டை சாப்பிடுவதால் எல்லா சத்துக்களும் சம அளவு கிடைக்கும். எளிதில் ஜீரணமும் ஆகிவிடும்.

Food to eat and avoid to work out

காய்கறி சாலட் :

முட்டை கோஸ், கேரட், ஆகியவற்றை கலந்து சாலட் செய்து சாப்பிடலாம். அதோடு பாலில் ஓட்ஸ், பழங்கள் கலந்து சாப்பிடுவதும் சிறந்த முறையில் பலன் தரும்.

Food to eat and avoid to work out

ஆண்களுக்கு வேறு, பெண்களுக்கு வேறு :

இதில் டயட் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபடுகிறது. பெண்களுக்கு அதிகமாக கால்சியம் மற்றும் இரும்பு சத்து தேவைப்படுகிறது. ஆகவே ஜிம்மிற்கு செல்லும் முன், இவை அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டுவிட்டு செல்ல வேண்டும்.

Food to eat and avoid to work out

நீர் அல்லது பழச் சாறு :

நீர் அல்லது பழச் சாறு அளவோடு குடிக்கலாம். இவை நீரிழப்பை தடுக்கும். அதிகமாக குடித்தால் பயிற்சிகள் செய்வது கடினமாகிவிடும்.

Food to eat and avoid to work out

உணவுகள் தவிர்க்க வேண்டியவை :

அதிக சோடியம் நிறைந்த வறுத்த கடலைகள் அல்லது வேறு வித நட்ஸ் வகைகள், ஆளி விதை, எண்ணெயில் பொறித்த உணவுகள், சர்க்கரை அதிகம் உள்ள உணவுகள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.

English summary

Food to eat and avoid to work out

Food to eat and avoid to work out
Story first published: Friday, July 22, 2016, 16:25 [IST]
Subscribe Newsletter