தொப்பையின் கொழுப்பை கரைக்க இந்த மீன் டயட்டை முயற்சி பண்ணுங்க..

Posted By:
Subscribe to Boldsky

உடல் எடையை குறைக்க எத்தனையோ டயட் முறைகள் இருக்கின்றன. இவை அனைத்தும் உணவு கட்டுப்பாட்டின் மூலமாக தான் மேற்கொள்ளப்படுகிறது. டயட் என்றாலே நமக்கு பிடிக்காத உணவை உட்கொள்வதாக தான் இருக்கும். ஆனால், மீன் உண்ண பிடிக்காது என சொல்வோர் யாராவது இருக்க முடியுமா என்ன?

உங்களுக்கு மத்தி மீன் பிடிக்குமா??? அப்ப இனிமேல் கொஞ்சம் அதிகமாவே சாப்பிடுங்க!!!!

சமீபத்தில் ஜப்பான் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வொன்றில் மீன் டயட் மேற்கொள்வதால் உடலில் இருக்கும் கொழுப்பு சேமிப்பு செல்களை, கொழுப்பை எரிக்கும் / கரைக்கும் செல்களாக மாற்றி உடலில் சேரும் அதிகமான கொழுப்பை கரைக்கவும், மேலும் அதிகமாக கொழுப்பு சேராமல் தடுக்கவும் முடிகிறது என கண்டறியப்பட்டுள்ளது.

வாரம் ஒருமுறை நெத்திலி மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கரையும் கொழுப்பு

கரையும் கொழுப்பு

சமீபத்தில் ஆராய்ச்சி ஒன்று மேற்கொண்ட ஆய்வாளர்கள், மீன் / மீன் எண்ணெய் சேர்க்கைகள் உடலில் கொழுப்பை சேமிக்கும் செல்களை கொழுப்பை கரைக்கும் செல்லாக மாற்றுகிறது. இதனால், நடுவயதில் உடல் எடையை குறைக்க இது உதவுகிறது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கியோட்டோ பல்கலைக்கழகம்

கியோட்டோ பல்கலைக்கழகம்

ஜப்பானில் உள்ள கியோட்டோ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தான் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. மீன் எண்ணெய் செரிமானம், நரம்பு மண்டலம் மற்றும் வளர்ச்சிதை மாற்றங்கள் போன்றவற்றை ஊக்குவிக்கிறது.

கொழுப்பு செல் வகைகள்

கொழுப்பு செல் வகைகள்

கொழுப்பு செல்களில் வெள்ளை, பழுப்பு மற்றும் வெளிர் பழுப்பு என மூன்று வகைகள் இருக்கின்றன.

கொழுப்பு செல் வகைகள்

கொழுப்பு செல் வகைகள்

"வெள்ளை" உடலுக்கு சக்தியை உண்டாக்கி தருகிறது, "பழுப்பு" வளர்ச்சிதை கொழுப்பு மூலம் உடலின் வெப்பத்தை கட்டுப்படுத்த செய்கிறது. "வெளிர்நிற பழுப்பு" கொழுப்பு செல்கள் குழந்தைகளிடம் தான் அதிகம் இருக்கின்றன. மூத்தோர் மத்தியில் குறைவாக தான் இருக்கும்.

வெளிர்நிற பழுப்பு கொழுப்பு செல்கள்

வெளிர்நிற பழுப்பு கொழுப்பு செல்கள்

மூன்றாவது வகையான வெளிர்நிற பழுப்பு கொழுப்பு செல்கள் மனிதர்கள் மற்றும் எலிகளிடம் மட்டும் தான் காணப்படுகிறது. நடுவயதில் தான் இந்த வெளிர்நிற கொழுப்பு செல்கள் குறைய தொடங்குகிறது.

வெளிர்நிற பழுப்பு கொழுப்பு செல்கள்

வெளிர்நிற பழுப்பு கொழுப்பு செல்கள்

இது வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிப்பதால். இதன் மூலம் உடல் எடையை குறைக்க முடியும் என ஆய்வாளர்கள் நம்பினார்கள். இது குறைய தொடங்குவதால் தான் நடுவயதில் அதிகம் உடல் எடை அதிகரிக்க காரணமாக இருக்கிறது எனவும் கருதினர்.

உணவுகள்

உணவுகள்

எனவே, எந்த உணவுகளை டயட்டில் சேர்த்துக் கொள்வதால் இந்த வெளிர்நிற பழுப்பு கொழுப்பு செல்களை உடலில் அதிகரிக்க செய்ய முடியும் என ஆய்வை மேற்கொண்டனர். இந்த ஆய்வில் எலிகளை உட்படுத்தினர்.

மீன் எண்ணெய் சேர்க்கைகள்

மீன் எண்ணெய் சேர்க்கைகள்

மீன் எண்ணெய் சேர்க்கைகள் கொடுக்கப்பட்ட எலிகளிடம் 5 - 10% எடை குறைந்தும், மேலும் 15-52% குறைவாக உடலில் கொழுப்பு சேரத் தொடங்கியதையும் கண்டறிந்தனர்.

எடை குறைப்பு

எடை குறைப்பு

மீன் மற்றும் மீன் எண்ணெய் சேர்க்கைகள் உடலில் கொழுப்பு சேமிக்கும் செல்களை, கொழுப்பை கரைக்கும் செல்களாக மாற்றி உடல் எடையை குறைக்கவும், உடலில் அதிகளவு கொழுப்பு சேராமல் தடுக்கவும் உதவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Fish Diet For Lose Your Extra Weight

Seafood lovers, this "fishy" way of losing weight is going to make you fall in love with it hook, line and sinker.
Story first published: Tuesday, February 9, 2016, 10:25 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter