For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நரம்புகளை பலப்படுத்தும் அர்த்த பின்சா மயுராசனா - தினம் ஒரு யோகா

|

நரம்புகள் நமது உடலில் தலை முதல் கால் வரை மொத்த இயக்கங்களுக்கு தேவையான தகவல்களை பரிமாறுகின்றன.

நரம்புகளில் சிறிய பிரச்சனைகள் ஏற்பட்டாலும், அவை உடலை பாதிக்கும். நரம்பு மண்டலத்தில் உண்டாகும் பாதிப்பினால், நடுக்கம், பதட்டம், மன நிலை பாதிப்பு, மற்றும் அல்சீமர், பார்கின்ஸன் போன்று நரம்பு மண்டலத்தை பாதிக்கும் நோய்களும் உண்டு.

Ardha Pincha Mayurasana to stimulate Nervous system

திடீரென நரம்பில் புடைப்பு, வீக்கம், வலி, தூக்கம் பாதிப்பு ஆகியவை ஏற்பட்டால் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளாக இருக்கும்,. உடனடியாக மருத்துவரை ஆலோசிக்க வேண்டும்.

நமது உடலில் பல உறுப்புகளை பராமரிக்க தகுந்த உடற்பயிற்சிகள் உள்ளது. ஆனால் நரம்புகளை பலமாக வைத்திருக்க தனியாக உடற்பயிற்சிகள் இல்லை. ஆனால் யோகாவில் ஆசனங்கள் உள்ளன.

அவை நரம்புகளில் உண்டாகும் இறுக்கங்களை தளர்க்கும். நரம்புகளுக்கு போதிய ரத்த ஓட்டத்தை அளித்திடும். நரம்புகளை பலப்படுத்திவிடும்.

அர்த்த பின்சா மயுராசனா :

அர்த்த என்றால் சமஸ்கிருதத்தில் பாதி என்று பொருள். பின்சா என்றால் இறக்கை, மயூர் என்றால் மயில். இந்த ஆசனம் நரம்புகளை தூண்டி, நன்றாக செயல்பட வைக்கும். இதனால் எப்போதும் புத்துணர்வாக காண்பீர்கள். சோம்பல் விலகும்.

செய்முறை :

தடாசனாவில் நில்லுங்கள். பின்னர் மெதுவாக முட்டி போட்டு அமர வேண்டும். ஆழ்ந்து மூச்சை விட்டு. மெதுவாக படுப்பது போல் குனிந்து முழங்கைகளை தரையில் ஊன்றுங்கள்.

உள்ளங்கைகளை தரையில் பதிக்க வேண்டும். கால்களை நீட்டிக் கொள்ளுங்கள். பின் மெதுவாக இடுப்பை உயர்த்துங்கள். முகத்தையும் கழுத்தையும் தொங்க விட வேண்டும். பார்ப்பதற்கு ஒரு மலைப் போல வளைவான தோற்றத்தில் உடல் இருக்க வேண்டும். மெதுவாக மூச்சை இழுத்து விடுங்கள்.

இந்த நிலையில் சில நிமிடங்கள் இருந்துவிட்டு பின்னர் எழுந்து இயல்பு நிலைக்கு வரவேண்டும். பின்னர் திரும்பவும் செய்யலாம். இது போல் மூன்று முறை செய்யலாம்.

பலன்கள் :

தோள்களுக்கு பலம் தரும். ஜீரண சக்தியை அதிகரிக்கும். ஆஸ்துமாவை கட்டுபடுத்தும். நரம்புகளுக்கு பலமளிக்கும். தலைவலி, இடுப்புவலியை குறைக்கும்.

English summary

Ardha Pincha Mayurasana to stimulate Nervous system

Ardha Pincha Mayurasana to stimulate Nervous system
Desktop Bottom Promotion