For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முதன்முறையாக 10 பேக் வைத்து அசர வைத்த நடிகர் ஷாருக்கானின் டயட் ரகசியங்கள்!!!

By Maha
|

பாலிவுட் சூப்பர் ஸ்டாரான நடிகர் ஷாருக்கான் 49 வயதாகியும், இன்னும் இளமையோடும், துடிப்போடும் இருப்பதற்கு அவரது உணவுப் பழக்கம் மற்றும் பழக்கவழக்கங்கள் தான் காரணம். நடிகர் ஷாருக்கான் மிகவும் எளிமையானவர் மற்றும் ரஜினியைப் போன்று பல்வேறு ரசிகர், ரசிகைகளைக் கொண்டவர்.

நடிகர் சூர்யாவின் ஃபிட்னஸ் ரகசியம்!

இவரை தற்போது பார்த்தால் கூட அவருக்கு 49 வயது என்று கூறினால் கூட நம்பமுடியாத அளவில் இருப்பார். அந்த அளவில் அவர் தனது உடலை ஃபிட்டாக பராமரித்து வருகிறார். மேலும் 50 வயதை நெங்கும் ஷாருக்கான் தான் முதன்முதலில் 10 பேக் வைத்தவர் என்பது தெரியுமா? சரி, இப்போது ஷாருக்கான் இன்னும் ஃபிட்டாகவும், இளமையாகவும் காட்சியளிப்பதன் பின்னணியில் உள்ள காரணத்தைப் பார்ப்போம்.

பாலிவுட் நடிகர்களின் கட்டுமஸ்தான உடலமைப்பிற்கான இரகசியங்கள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புரோட்டீன் உணவுகள்

புரோட்டீன் உணவுகள்

ஷாருக்கான் பெரும்பாலும் தனது உணவில் புரோட்டீன உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்வாராம். அதிலும் புரோட்டீன் அதிகம் நிறைந்த உணவுப் பொருட்களான கொழுப்பில்லா பால், தோல் நீக்கப்பட்ட சிக்கன், முட்டை வெள்ளைக்கரு, பருப்பு வகைகள் போன்றவற்றை தான் அதிகம் சாப்பிடுவாராம். மேலும் தினமும் உடற்பயிற்சிக்கு பின் புரோட்டீன் பானங்களை குடிப்பாராம்.

சர்க்கரை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள்

சர்க்கரை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள்

உடலை கட்டுக்கோப்புடன் வைக்க மேற்கொள்ளும் டயட்டில் சுத்திகரிக்கப்பட்ட தானியங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களான அனைத்து வகையான பிரட் மற்றும் மைதாவை தவிர்ப்பாராம். மேலும் சாதத்தை தவிர்ப்பாராம். சர்க்கரை கலந்த உணவுப் பொருட்களை தொடவேமாட்டாராம். நார்ச்சத்து வேண்டும் என்பதற்காக வேண்டுமானால், முழு தானிய பிரட்டை டோஸ்ட் செய்து முட்டையுடன் சாப்பிடுவார் அல்லது சிக்கன் சாண்விட்ச் செய்து சாப்பிடுவாராம்.

பச்சை இலைக் காய்கறிகள்

பச்சை இலைக் காய்கறிகள்

ஷாருக்கான் காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வாராம். அதில் கீரைகள், உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணி, சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிற காய்கறிகளான கேரட், தக்காளி, பீட்ரூட், முள்ளங்கி போன்றவற்றை தான் அதிகமாக சாப்பிடுவாராம்.

பழங்கள்

பழங்கள்

பழங்களில் சிம்பிள் கார்போஹைட்ரேட்டுகள் இருப்பதோடு, உடலுக்கு வேண்டிய சத்துக்களான நார்ச்சத்துக்கள், வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் போன்றவை இருப்பதால், இவற்றை அதிகம் உட்கொண்டு வந்தால், உடலை ஃபிட்டாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள முடிகிறது என்றும் சொல்கிறார் ஷாருக்கான்.

தண்ணீர்

தண்ணீர்

முக்கியமாக ஷாருக்கான் தினமும் 3 லிட்டர் தண்ணீரை தவறாமல் குடித்துவிடுவாராம். இதனால் அவரது உடலுறுப்புகள் தங்கு தடையின்றி சீராகவும், ஆரோக்கியமாகவும் இயங்குவதாக சொல்கிறார்.

குறிப்பு

குறிப்பு

மேலே சொன்னவை உங்களுக்கு சாதாரணமாக தோன்றலாம். ஆனால் உண்மையில் ஷாருக்கான் இவற்றை தவறாமல் பின்பற்றி வருவதால் தான், அவர் ஃபிட்டாக இருப்பதோடு, அவரால் 10 பேக் எல்லாம் வைக்க முடிந்தது. மேலும் இவரது இளமைத் தோற்றத்திற்கு காரணமும் இதுவே.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Shah Rukh Khan's 5-step Diet Secrets Revealed

Shah Rukh Khan, the Badshah of Bollywood is very cautious about his body and that's exactly the reason why the 49-year old actor believes in mindful eating. Khan strictly follows a low carbohydrates and high protein diet. Here is a sneak peek into his food plan.
Desktop Bottom Promotion