தொப்பை ரொம்ப அசிங்கமா தொங்குதா? இந்த 7 ஜூஸ் குடிங்க!!!

Posted By:
Subscribe to Boldsky

உடல் எடையைக் குறைக்க உடற்பயிற்சி என்பது அத்தியாவசியம். வாக்கிங், ஜாக்கிங் செல்வதே போதுமானது. அதற்கும் மேல் நீங்கள் கட்டுடல் மேனியாக திகழ விரும்பினால் ஜிம்மிற்கு செல்வது உகந்தது. அதிகமான உடல் பருமனுடன் இருப்பவர்கள், வெறும் உடற்பயிற்சி மட்டுமின்றி சீரான முறையில் டயட்டை மேற்கொள்ள வேண்டியதும் அவசியம்.

உடல் எடை குறைக்க விரும்புவோருக்கான மாற்று உணவுகள்!!!

டயட் என்பது வேறு, பட்டினிக் கிடப்பது என்பது வேறு. சிலர் மிகவும் குறைவான அளவு உணவு உட்கொள்வதை தான் டயட் என்று தவறாக புரிந்து வைத்துள்ளனர். உடலில் சேர்ந்திருக்கும் அதிகப்படியான கொழுப்பை கரைக்க சில சிறப்பு ஜூஸ் இருக்கின்றன. இதில் சிலவன நாம் பொதுவாக காண்பது மற்றும் சிலவன ஆயுர்வேத மருத்துவத்தில் கூறப்பட்டிருப்பது...

உடல் எடையை குறைக்க உணவுகளை இப்படி தான் சமைத்து சாப்பிட வேண்டும்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நெல்லிக்காய் ஜூஸ்

நெல்லிக்காய் ஜூஸ்

தினமும் காலை நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலை குறைக்கலாம். இதுவொரு வகையான ஆயுர்வேத மருத்துவம் ஆகும். நெல்லிக்காய் ஜூஸ் பருகிவிட்டு வாக்கிங் செல்வது, அல்லது வாக்கிங் செய்த பிறகு நெல்லிக்காய் ஜூஸ் பருகுவது நல்ல மாற்றத்தை காண உதவும்.

மசாலா பால்

மசாலா பால்

பாலுடன் மஞ்சள் சேர்த்து பருகுவது தான் மசாலா பால். மஞ்சளின் மருத்துவ குணங்கள், உடலில் இருக்கும் கொழுப்பை கரைக்க உதவுகிறதாம். மூட்டு வலி, தசை பிடிப்பு, நோய் எதிர்ப்பு மண்டலம் மற்றும் கபம் போன்றவற்றுக்கும் இது நல்ல தீர்வளிக்கிறது. இதுவும் ஒருவகையான ஆயிர்வேத மருத்துவம் தான்.

சர்க்கரை இன்றி கிரீன் டீ

சர்க்கரை இன்றி கிரீன் டீ

தினமும் கிரீன் டீ பருகுவதால் உங்கள் உடலில் வளர்சிதை மாற்றம் வேகமடைகிறது என்று நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் உடலில் இருக்கும் நச்சுக்களை அழிக்கவும் உதவுகிறது. சர்க்கரையை தவிர்க்க வேண்டியது அவசியம். வேண்டுமானால் மாற்றாக சிறிதளவு தேனை சேர்த்துக் கொள்ளுங்கள்.

காய்கறி ஜூஸ்

காய்கறி ஜூஸ்

காய்கறி ஜூஸ் பருகுவதால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்க இது உதவுகிறது. மற்றும் உடலுக்கு தேவையான சக்தியும், ஊட்டச்சத்துகளும் கிடைக்கின்றன. இதனால், உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பை தவிர்க்க முடியும்.

ப்ளேக் காபி

ப்ளேக் காபி

உடல் எடையை குறைக்க மற்றுமொரு சிறந்த பானமாக திகழ்கிறது ப்ளேக் காபி. இதுவும் அதிகப்படியான பசியை கட்டுப்படுத்துகிறது. மற்றும் கிரீன் டீயை போலவே, வளர்சிதை மாற்றத்தை வேகப்படுத்தி உடல் எடையை குறைக்க உதவுகிறது.

கொழுப்பு நீக்கப்பட்ட பால்

கொழுப்பு நீக்கப்பட்ட பால்

பால் ஒவ்வொரு மனிதனுக்கும் ஓர் அத்தியாவசிய உணவாக இருக்கிறது. பாலில் இருந்து கிடைக்கும் ஊட்டச்சத்துக்கள் உடல் வலிமையையும், எலும்பின் வலுவையும் அதிகரிக்க உதவுகிறது. ஆனால், உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் கொழுப்பு நீக்கப்பட்ட பால் குடிப்பது தான் நல்லது. ஏனெனில், இதில் இருக்கும் கொழுப்பு உங்கள் உடல்பருமனை அதிகரிக்க செய்கிறது.

இஞ்சி டீ

இஞ்சி டீ

நமது உடலில் இருக்கும் வாதம், பித்தம் போன்ற பிரச்சனைகளுக்கு இது நல்ல தீர்வளிக்கிறது. மேலும், குடலியக்கம் மற்றும் செரிமான செயல் திறனை ஊக்குவித்து உடல் எடையை குறைக்க நல்ல முறையில் பயனளிக்கிறது இஞ்சி டீ.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Drinks That Shrink Your Belly

Do you know about the drinks that shrink your belly? read here.
Story first published: Thursday, October 15, 2015, 11:11 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter