தினமும் ரன்னிங் போகும் போது நாம் செய்யும் 7 தவறுகள்!!!

By: Ashok CR
Subscribe to Boldsky

மிகுந்த ஆவலுடன் இதனை படிக்கிறீர்களா? அப்படியானால் எப்போதும் போய் வரும் ஜிம்மிற்கு பதிலாக திறந்தவெளி பூங்காவில் ஓட நீங்கள் முடிவு எடுத்திருக்கிறீர்கள் என அர்த்தமாகும். ஒரே மாதிரியான உடற்பயிற்சியை அன்றாடம் செய்து வருவதால் அலுப்புத் தட்டி விடுவது இயற்கை தான்.

ஓடுவது என்பது மிகச்சிறந்த உடற்பயிற்சி வகையாகும். அதை வீட்டிற்குள் த்ரெட்மில்லிலும் செய்யலாம் அல்லது வீட்டிற்கு வெளியிலும் கூட ஓடலாம். ஆனால் சில பொதுவான தவறுகளை தவிர்ப்பது நல்லது. அதைப் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வலியுடன் ஓடுவது

வலியுடன் ஓடுவது

தீவிர வலியுடன் ஓடுவதால் யாரும் உங்களுக்கு ஒன்றும் வீரதீர செயலுக்கான விருதை வழங்கப்போவதில்லை. வீரதீர செயல்களை செய்யலாம், ஆனால் அது எப்போது என உங்களுக்கு தெரிய வேண்டும். வலி மற்றும் காயத்திற்கான அறிகுறி ஏதேனும் தென்பட்டால் முதலில் உங்கள் உடல் சொல்வதை கேளுங்கள். ஓடுவதை உடனே நிறுத்தி விடுங்கள். தசை வலி என்பது பொதுவான ஒன்று தான். ஆனால் அது நீங்கள் சரியான பாதையை நோக்கி செல்கிறீர்கள் என்பதை குறிக்கும் இது. அதனால் அதற்கும் மற்ற தீவிர வலிக்கும் உள்ள வித்தியாசத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

தவறான ஷூக்கள் அணிதல்

தவறான ஷூக்கள் அணிதல்

கடையிலேயே மிகவும் அழகாக தெரியும் ஷூவை வாங்குவதில் நம்மில் பலருக்கும் நாட்டம் இருக்கும். ஆனால் ஓடுவதற்கு ஷூவில் முதலீடு செய்வதற்கு முன்பு சில ஆராய்ச்சிகளில் ஈடுபடுங்கள். உழைப்பு, ஷூவின் தரம், சொகுசு போன்றவற்றை பாருங்கள். பாதங்கள் வைக்கும் இடத்தில் கூடுதல் பேட் இருக்கும் ஷூக்களை வாங்குங்கள். ஒவ்வொரு முறை தரையில் காலை ஊன்றும் போதும் இது உங்கள் பாதத்திற்கு குஷன் போல் செயல்படும்.

குனிவது அல்லது நீட்சியடையச் செய்வது

குனிவது அல்லது நீட்சியடையச் செய்வது

நம்முடைய தோரணையில் தான் இடர்பாடுகளே அடங்கியுள்ளது. மிக தூரமாக முன் பக்கமாக குனிந்தால், சமநிலையை உண்டாக்க உங்கள் உடல் தானாக நீட்சியடையும். இயற்கையாகவே அதனால் நீங்கள் முன் பக்கமாக அதிகமாக குனிய வேண்டி வரும். இதனால் முதுகு வலி ஏற்பட தொடங்கும். அதனால் ஓடும் போது உடலை நேர் நிலையில் வைத்து ஓடுவது அத்தியாவசியமாகும். அதற்காக ஆரம்பத்தில் உங்கள் வேகத்தை குறைத்தாலும் கூட பரவாயில்லை.

வார்ம்-அப் செய்வதை தவிர்ப்பது

வார்ம்-அப் செய்வதை தவிர்ப்பது

புதிதாக ஓடத் தொடங்கியவர்கள் செய்யும் பொதுவான தவறு ஒன்று உள்ளது. அது என்னவென்று தெரியுமா? வார்ம் அப் எதுவும் செய்யாமல் நேரடியாக களத்தில் குதித்து ஓடத் துவங்குவது. இது மிகவும் ஆபத்தானது. இதனால் தசை வலி, மூட்டுக்களில் பிடிப்பு போன்றவைகள் ஏற்படும். இதனால் பாதிக்கப்பட போவது உங்களது உடற்பயிற்சி தான். இப்படி வார்ம் அப் செய்வதைப் பற்றி எந்த ஒரு சூழ்நிலையிலும் குறைத்து மதிப்பிடாதீர்கள். முடிந்த வரை வார்ம் அப்பில் ஈடுபடுங்கள்.

குதிகாலை முதலில் ஊன்றுதல்

குதிகாலை முதலில் ஊன்றுதல்

வார்ம் அப் செய்ய தொடங்கிய பின், நீங்கள் மற்றொரு பொதுவான பிரச்சனையையும் கவனிக்கலாம். ஓடுபவர்கள் அனைவரும் சந்திக்கும் பிரச்சனையே இது. ஓடும் போது நீளமான எட்டு எடுத்து வைக்கும் போது, நீங்கள் முதலில் உங்கள் குதிகாலை தான் தரையில் ஊன்றுவீர்கள். நீளமாக எட்டு வைத்து ஓடினால் ஆற்றல் திறனும் அதிகமாக பயன்படுத்தப்படும் என்ற எண்ணத்தில் பலர் அப்படி செய்வார்கள். இருப்பினும் அது உண்மையில்லை. இப்படி செய்வதால் உங்கள் ஆற்றல் திறன் வீணாகும். மேலும் காயம் ஏற்படுவதற்கான இடர்பாடுகளும் அதிகம். அதனால் காலை ஊன்றும் போது நாடு பாதத்தை முதலில் ஊன்றுங்கள்.

உங்கள் கைகளை அதிகமாக ஆட்டுதல்

உங்கள் கைகளை அதிகமாக ஆட்டுதல்

த்ரெட்மில் அல்லது வீட்டிற்கு வெளியே ஓடுபவர்கள் சிலர் உணர்ச்சி வேகத்தில் தங்கள் கைகளை மிகவும் வேகமாக சுழற்றுவார்கள். இது கண்டிப்பாக எந்த ஒரு பயனையும் அளிக்க போவதில்லை. காரணம் உங்கள் ஆற்றல் திறன்கள் கைகளில் அதிகமாக பயன்படுத்தப்படும். மாறாக, கைகளை இடுப்பு அளவில் வைத்திடுங்கள். எப்போதும் கைகளை லூசாக வைத்துக் கொள்ளுங்கள் தேவையில்லாத இறுக்கத்தை கொடுக்காதீர்கள்.

அளவுக்கு அதிகமாக ஈடுபடுதல்

அளவுக்கு அதிகமாக ஈடுபடுதல்

புதிதாக ஓடத் தொடங்கினால் ஆர்வக் கோளாறினால் தொடர்ச்சியாக செய்ய முற்படுவீர்கள். அதற்கு என்னென்ன தேவையோ அனைத்தையும் தயார் செய்து நீங்களும் தயாராகி விடுவீர்கள். இருப்பினும் வெகு விரைவில் அளவுக்கு அதிகமாக ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். அன்றாடம் பயிற்சியில் ஈடுபட உங்கள் வலிமை மற்றும் சுறுசுறுப்பை பாதுகாப்பது மிகவும் முக்கியமாகும். உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் மட்டுமே ஓட வேண்டும். எப்போதுமே ஜாக்கிங் செய்வதில் இருந்து தொடங்குவது நல்லது. பின் ஒரு இடைவேளை எடுத்துக் கொண்டு, ஓட்டத்தை துரிதப்படுத்துங்கள். மெதுவாக நீங்கள் ஓடும் தூரத்தை அதிகரியுங்கள். இதனால் வலியில் இருந்து தப்பிக்கலாம்.

இந்த அடிப்படைகளை பின்பற்றினால் காயங்கள் ஏற்படும் இடர்பாடு மிகவும் குறைவு. இதனால் உங்களுக்கு பிடித்த பயிற்சியில் தொடர்ந்து ஈடுபடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

7 Mistakes You Are Making While Running

Running is a great form of exercise, and whether you do it indoors (i.e. on a treadmill) or whether you gallivant in open air, it's important to avoid making certain common mistakes.
Subscribe Newsletter