For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடலை கட்டமைப்புடன் வைப்பதில் ஆண்கள் செய்யும் 14 தவறுகள்!!!

By Ashok CR
|

உடலை கட்டமைப்புடன் வைக்க முயலும் போது கண்டிப்பாக தவறுகளில் ஈடுபடக்கூடாது. நல்ல கட்டமைப்புடன் இருக்கும் ஒரே காரணத்திற்காக தான் உடற்பயிற்சிகள் செய்யப்படுகிறது. ஆனால் உடலை அப்படி கட்டமைப்புடன் வைப்பதில் ஈடுபடும் போது பல ஆண்கள் சில தவறுகளில் ஈடுபடுகின்றனர். இந்த பொதுவான தவறுகளை சுலபமாக தவிர்க்கலாம்.

ஜிம்களில் ஈடுபடும் சில பயிற்சிகள் பிரத்யோகமாக ஆண்களுக்காகவே உள்ளது. உதாரணத்திற்கு, ஜிம்மில் உள்ள எடை பயிற்சி பிரிவுக்கு சென்றால் அங்கே ஆண்களை மட்டுமே அதிகமாக காணலாம். உடல் கட்டமைப்பில் ஆண்கள் செய்யும் பொதுவான தவறுகள் எடை பயிற்சியுடன் தான் பெரும்பாலும் தொடர்பில் உள்ளது.

இதுப்போன்று வேறு: நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் பக்க விளைவுகள்!!!

இவ்வகை கட்டமைப்பு தவறுகள் ஏற்பட காரணமாக அமைவது அளவுக்கு அதிகமாக தன் தோற்றத்தின் மீது காட்டப்படும் ஈடுபாடு. பல ஆண்கள் கண்ணாடி முன் அழகாக தெரிவதற்காக தான் உடற்பயிற்சியில் ஈடுபடுகின்றனர். அதனால் அழகாக தெரிவதற்கு தேவைப்படும் தசைகளை மேம்படுத்த, அதற்கான பயிற்சிகளில் மட்டுமே அவர்கள் ஈடுபடுவார்கள். ஆனால் உடல் கட்டமைப்பு என்பது அதையெல்லாம் தாண்டிய புனிதமான ஒரு செயல்முறையாகும். அதனால் இதில் சில தவறுகளை இழைக்கும் போது, உடல் கட்டமைப்பு என்பது ஒரு செயல்முறை என்பதை நாம் மறந்து விடுகிறோம்.

அவசியம் படிக்க வேண்டியவை: உடற்பயிற்சி செய்தவுடன் சாப்பிட வேண்டிய முக்கியமான 10 உணவுகள்!!!

பல ஆண்களும் தன் கெண்டை தசைகளை வளர்க்க கடினமான பயிற்சிகளில் ஈடுபடுவர். சில சமயம் தாங்கள் தூக்க வேண்டிய எடையின் அளவிற்கு மேலாகவும் தூக்க முற்படுவார்கள். இன்னும் சில சமயம் தவறான வகை எடையை தூக்க முற்படுவார்கள் அல்லது தங்களின் தேவைக்கேற்ப தவறாக பொருத்தப்பட்ட எடைகளை தூக்குவார்கள். சில நேரம், சரியான பயிற்சியாளர் மூலம் பயிற்சியில் ஈடுபடாததால் கூட இந்த தவறுகள் ஏற்படலாம். கடைசியாக உங்கள் வயதை மீறிய பயிற்சிகளில் ஈடுபட்டாலும் தவறுகள் நேரிடலாம்.

சரி, இப்போது தவிர்க்கப்பட வேண்டிய அப்படிப்பட்ட சில தவறுகளைப் பற்றி பார்க்கலாமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குளிர்ந்த தசைகளுக்கான பயிற்சி

குளிர்ந்த தசைகளுக்கான பயிற்சி

தசைகளுக்கு முதலில் ஒரு வார்ம் அப் கொடுப்பது மிகவும் முக்கியமானது. அதனால் ஜிம் சென்ற உடனேயே வார்ம் அப்பில் ஈடுபடாமல் நேரடியாக பயிற்சியை தொடங்காதீர்கள். இவ்வகை பயிற்சி தவறுகளில் கண்டிப்பாக ஈடுபடக் கூடாது.

மிக வேகமாக ஸ்ட்ரெச் செய்தல்

மிக வேகமாக ஸ்ட்ரெச் செய்தல்

வார்ம் அப் செய்வதை போலவே தசைகளை ஸ்ட்ரெச் செய்வதும் முக்கியமானதே. ஆனால் இரண்டையும் போட்டு குழப்பி கொள்ளாதீர்கள். வார்ம் அப் என்றால் உங்கள் தசைகளில் இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துவது. ஆனால் ஸ்ட்ரெச் செய்வது என்றால் தசைகளை தளர்த்துவது. ஸ்ட்ரெச் செய்யும் போது மெதுவாக செய்ய வேண்டும். காரணம், வேகமாக செய்யும் போது விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

இருதய சம்பந்த பயிற்சிகள் செய்யாமல் தப்பிப்பது

இருதய சம்பந்த பயிற்சிகள் செய்யாமல் தப்பிப்பது

இருதய உடற்பயிற்சிகள் பெண்கள் மற்றும் தடியாக உள்ள ஆண்களுக்கான உடற்பயிற்சிகள் என்றே பல ஆண்களும் நினைக்கின்றனர். அதனால் அவ்வகை பயிற்சியில் ஈடுபடாமல், அந்த நேரத்தையும் பளு தூக்கும் பயிற்சியிலேயே செலவிடுவார்கள். இருதய பயிற்சிகளை தவிர்க்காதீர்கள். அது தான் உங்கள் கலோரிகளை எரிக்க உதவும். கட்டமைப்புடன் இருப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது.

மனதை செலுத்தாத பயிற்சி

மனதை செலுத்தாத பயிற்சி

பலர் நாள் கணக்கான பயிற்சியில் ஈடுபட்டு வந்தாலும், அவர்களின் வயிற்று பகுதியின் கொழுப்பு குறைவதே இல்லை. காரணம் உடற்பயிற்சியின் போது வயிற்றை கொண்டு எழுந்திருக்காமல், தங்களின் தோலை கொண்டு எழுந்திருப்பார்கள். மனதை சரிவர செலுத்தாமல் உடற்பயிற்சி செய்வதற்கு இது ஒரு எடுத்துகாட்டாகும்.

கண்ணாடிக்காக உடற்பயிற்சி

கண்ணாடிக்காக உடற்பயிற்சி

பல ஆண்கள் தங்களின் வயிறு மற்றும் இருதலைத் தசைக்காக (பைசெப்ஸ்) மட்டுமே பயிற்சி செய்யும் போது தவறுகளை புரிவார்கள். இந்த பயிற்சிகளை மட்டும் செய்யும் போது, அவர்கள் அகன்று நல்ல வடிவத்துடன் தெரிவார்கள். ஆனால் ஒளிந்திருக்கும் ஹாம்ஸ்ட்ரிங்ஸிற்கு கூட பயிற்சிகள் தேவை.

போதிய அளவிலான நீரை பருகுவதில்லை

போதிய அளவிலான நீரை பருகுவதில்லை

நீங்கள் போதிய அளவிலான நீரை பருகவில்லை என்றால், அதிக காயங்களுக்கு நீங்கள் ஆளாகும் அபாயம் அதிகமாக உள்ளது. நீங்கள் உடற்பயிற்சியில் ஈடுபடும் போது, உங்கள் தசைகள் வறட்சியாகும். அதனால் உடற்பயிற்சியில் ஈடுபடும் போது, போதிய அளவிலான நீரை பருகிக் கொண்டே இருக்க வேண்டும்.

நட்சத்திரங்களை உதாரணமாக பின்பற்றுதல்

நட்சத்திரங்களை உதாரணமாக பின்பற்றுதல்

பல ஆண்கள், ரித்திக் ரோஷன், சில்வெஸ்டர் ஸ்டாலன் அல்லது அர்னால்ட் என தங்களுக்கு பிடித்த நட்சத்திரங்களை பின்பற்றி, அவர்களை போல் உடற்பயிற்சியில் ஈடுபடுவார்கள். உதாரணத்திற்கு, பெஞ்ச் உடற்பயிற்சிகள் தான் அர்னால்ட்டின் விருப்பமான பயிற்சிகள். அதற்காக நீங்களும் அதை அப்படியே பின்பற்ற முடியாதல்லவா? உங்கள் உடலின் திறனை பொறுத்தே பயிற்சிகளை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். அதனால் அவர்களை அப்படியே பின்பற்ற நினைப்பது எப்போதும் சாத்தியமாகாது.

அளவுக்கு அதிகமான பளு தூக்குதல்

அளவுக்கு அதிகமான பளு தூக்குதல்

மனிதர்களாகிய நாம் மட்டும் தான் நம்மை பெரிய வீரனாக காட்டிக் கொள்ள நம் சக்தியை மீறிய அளவிலான பளுவை தூக்க முற்படுவோம். உங்களின் உள்ளுணர்வை இவ்விடத்தில் கண்டிப்பாக நீங்கள் அடக்க வேண்டும். அளவுக்கு அதிகமான பளுவை தூக்குவதற்கு பதில், பளு தூக்கும் பயிற்சியின் ஒவ்வொரு நொடியையும் ஒருமுகப்படுத்துங்கள். கண்டிப்பாக உங்கள் உடல் கட்டமைப்பு மேம்படும்.

பழைய பயிற்சிகளையே தொடர்வது

பழைய பயிற்சிகளையே தொடர்வது

ஒரு மாதமாக செய்து வரும் பயிற்சிகளை தொடரும் போது, உங்கள் உடல் ஒரே மாதிரியான பயிற்சிக்கு மட்டுமே வளையும். நீங்கள் சீராக செய்யும் எந்த ஒரு பயிற்சிக்கும் உங்கள் உடல் ஒத்துழைக்க வேண்டும். அதனால் உங்கள் உடற்பயிற்சி வகைகளை மாற்றிக்கொண்டே இருங்கள்.

வேக வேகமாக பயிற்சிகளை மேற்கொள்ளுதல்

வேக வேகமாக பயிற்சிகளை மேற்கொள்ளுதல்

உடற்பயிற்சிகளை வேக வேகமாக முடிக்க வேண்டும் என்று நீங்கள் செயல்பட்டால், நீங்கள் எதிர்பார்த்த பலனை பெற முடியாது. ஒரே பயிற்சியை வேகமாக செய்யும் போது, உங்கள் இருதய துடிப்பு அதிகரித்து, உங்கள் இருதயத்தின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தும்.

தவறான கருவிகளை பயன்படுத்துதல்

தவறான கருவிகளை பயன்படுத்துதல்

ஜிம் கருவிகளை உங்கள் தேவைக்கேற்ப ஒவ்வொரு முறையும் திருத்தி கொள்ள வேண்டும். ஏற்கனவே யாரோ ஒருவரால் திருத்தி வைக்கப்பட்ட கருவிகளை அப்படியே ஒரு போதும் பயன்படுத்தாதீர்கள்.

உங்கள் வயதை மறத்தல்

உங்கள் வயதை மறத்தல்

நீங்கள் 35 வயது உடையவராக இருந்த போது, 500 பேருக்கு சமமான கட்டமைப்பில் இருந்திருக்கலாம். ஆனால் உங்களுக்கு 40 வயது ஆகி விட்டதென்றால், உங்களது வேகத்தை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். உங்கள் வயதை மறந்து மிகவும் கடினமான பயிற்சிகளில் ஈடுபடாதீர்கள்.

வார இறுதி போர் வீரர்கள்

வார இறுதி போர் வீரர்கள்

வார நாட்களில் உடற்பயிற்சியில் ஈடுபட முடியாததால், அதனை ஈடு செய்ய எவரொருவர் வார இறுதியில் சேர்த்து வைத்து பாடுபடுகிறாரோ அவரே வார இறுதி போர் வீரர். இது ஒரு ஆபத்தான பழக்கமாகும். உடற்பயிற்சியில் முக்கியமான ஒன்று - அதனை சீராக செய்ய வேண்டும்.

சற்று ஓய்வு கொள்வதை தவிர்த்தல்

சற்று ஓய்வு கொள்வதை தவிர்த்தல்

உடற்பயிற்சியை தொடங்குவதற்கு முன் எப்படி வார்ம் அப் செய்வது அவசியமோ, அதே போல் பயிற்சிக்கு பின், சற்று ஓய்வு எடுப்பதும் முக்கியம். உங்கள் உடலை சாந்தப்படுத்த வேண்டும். இல்லையென்றால் உங்கள் தசைகள் இளைப்பாறாமல் வறண்டு போகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

14 Fitness Mistakes Most Guys Make

Fitness mistakes are something that you just cannot afford to make. The sole purpose of doing exercises is to stay fit. But there are some fitness mistakes that most guys make. These common fitness mistakes can be easily avoided.
 
Desktop Bottom Promotion