Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
சும்மா கச்சிதமான உடல் வேண்டுமா? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க...
பிகினி உடல் என்றால் கடற்கரை சம்பந்தப்பட்ட ஒன்றாகும். உல்லாச பயணம் செல்லும் போது, பிகினி ஆடை அணிய ஆசையாக உள்ளதா? அப்படியானால் இந்த கட்டுரை உங்களுக்கு உபயோகமாக இருக்கும். பிகினி அணிய வேண்டும் என்று பல பெண்கள் ஆசைப் படுவதுண்டு. ஆனால் ஆசை மட்டும் இருந்தால் போதுமா? முதலில் நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்; பிகினி ஆடையை அணிவது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல, அது உங்கள் உடலில் நுழையாதா என்ன? விஷயம் என்னவென்றால் பிகினி ஆடை உங்கள் உடலுக்கு பொருந்த வேண்டும். பிகினி அணிந்த அனைவரும் நயன்தாரா ஆகி விட முடியுமா? முடியாதல்லவா? ஆம், அதற்கென ஒரு உடற்கட்டு இருந்தால் தான் அந்த ஆடை உங்களுக்கு பொருந்தும்.
உங்கள் உடலுக்கு பிகினி கச்சிதமாக பொருந்துவதற்கு, ஆரோக்கியம் கெட்டு போகாமல் தேவையற்ற டயட் மற்றும் விரதம் ஏதும் இல்லாமல் அதற்கு வழி வகுக்கலாம். ஆகவே நல்ல விளைவுகளை பெற ஆரோக்கியமான வாழ்வு முறையை இன்றே பின்பற்ற தொடங்குங்கள். அப்படி ஆரோக்கியமான உடல் கட்டமைப்பை பெற நாங்கள் கூறும் உடற்பயிற்சிகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
வெறும் டயட்டை மட்டும் பின்பற்றினால், பிகினிக்கு தேவையான உடல் கிடைத்துவிடாது. அழகிய உடல் கட்டமைப்பைப் பெற தேவையான உடற்பயிற்சியில் ஈடுபட்டு, வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும். அதற்கு இதோ சில டிப்ஸ்...

வலு சேர்க்கும் உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள்
பிகினி அணிவதற்கான உடலமைப்பைப் பெறுவதற்கு நீண்ட நேரம் உடற்பயிற்சியில் ஈடுபட்டால் மட்டும் போதாது. இப்படி வியர்வை சிந்தினால், நீங்கள் எதிர்பார்த்த பலன் கண்டிப்பாக உங்களுக்கு கிடைக்க போவதில்லை. மாறாக வெறுப்பு தான் வந்து சேரும்.ஆகவே இதய சம்பந்தப்பட்ட கார்டியோ பயிற்சி சிறிதளவும், வலு சேர்க்கும் பயிற்சியிலும் தொடக்கத்தில் ஈடுபடுங்கள். இவ்வகை வலு சேர்க்கும் உடற்பயிற்சிகளை வாரம் இரண்டு முறையாவது செய்ய வேண்டும். மேலும் கவனமானது தனிப்பட்ட தசைகளின் மீது மட்டுமல்லாமல் முழு உடலிலும் இருக்க வேண்டும்.

மளிகை வாங்கும் போது சில பயிற்சிகள்
ஜிம் செல்வதற்கு நேரம் இல்லையா? அப்படியானால் புத்திசாலித்தனமாக அன்றாடம் மளிகை அல்லது காய்கறி வாங்கும் போது உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். கைகளை வலுப்படுத்த பொருட்கள் அடங்கிய கூடையை கையில் தூக்கிச் செல்லுங்கள். அதனை ஒரு கையிலிருந்து மற்றோரு கைக்கு மாற்றுங்கள். மேலும் கூடையை தூக்கி கொண்டு மார்கெட் முழுவதும் நடை கொடுப்பதும் நல்ல உடற்பயிற்சியாக அமையும்.

உங்கள் தேவையை கண்டுபிடியுங்கள்
எந்த ஒரு உடற்பயிற்சி திட்டத்தை தொடங்கும் முன்னும், உங்களை நீங்களே சில கேள்விகளை கேட்டுக் கொள்ளுங்கள். நான் சரியான கட்டமைப்புடன் இருக்கிறேனா? நான் உடல் எடையை குறைக்க வேண்டுமா? எவ்வளவு எடையை குறைக்க வேண்டும்? எந்த தசையின் மேல் கவனம் செலுத்த வேண்டும்? இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் கிடைத்தால் உங்கள் பிகினி டயட் மற்றும் உடற்பயிற்சிகளுக்கு திட்டமிட சுலபமாக இருக்கும்.

முடிந்த வரை உடலை வளைத்து செல்லுலைட்டை நீக்கவும்
செல்லுலைட் என்பது மற்றொரு கொழுப்பின் சேமிப்பாகும். முக்கியமாக இடுப்பு பகுதியில் தேங்கியிருக்கும் அதனை முழுவதுமாக நீக்க வேண்டும். அதற்கு உடலை முடிந்த வரை நன்றாக வளைத்திட வேண்டும். இப்படி செய்வதால் தசைகளின் நீளம் மாறும். மேலும் கொழுப்பு ஒரு இடத்தில் தேங்குவதற்கு பதில் அனைத்து திசுக்களிலும் பரவுவதால் கொழுப்பு அறைகளின் அளவும் மாறும்.
ஆகவே தசைகளை நீளமாக்குவதை தினமும் 2-3 நிமிடம் வரையாவது செய்யுங்கள். அதனுடன் சேர்த்து ஆழமாக மூச்சும் விட வேண்டும். இதற்கு மேல் உங்களால் முடியாது என்று எண்ணும் வரைக்கு உடலை வளைத்திடுங்கள். இது உங்கள் நெகிழ்வு தன்மையை மற்றும் தசைகளின் நீளத்தை அதிகரித்து செல்லுலைட்டை நீக்கும்.

ஆரோக்கியமாக உண்ணுங்கள்
தினமும் இரண்டு மணிநேரம் ஜிம்மில் நேரத்தை செலவு செய்து விட்டு, வெளியில் வந்ததும் ஜங்க் உணவுகளை எடுத்துக் கொண்டால், பின் உடற்பயிற்சி செய்தும் பலன் காட்டவில்லையே என்று புலம்பக்கூடாது. உடற்பயிற்சி மட்டும் பத்தாது. கட்டமைப்பான உடல் வேண்டுமென்றால் அதற்கு உணவும் முக்கியமான அங்கமாக விளங்குகிறது. கண்ட நேரத்தில் உண்ணுவது, ஒழுங்கான உணவை உண்ணாமல் இருப்பது, அதிகமாக ஜங்க் உணவுகளை உண்ணுவது போன்ற பழக்கங்களை முதலில் நிறுத்துங்கள். பிகினி உடல் வேண்டுமானால், உடற்பயிற்சியுடன் சேர்த்து ஆரோக்கியமான உணவுகளையும் உண்ண வேண்டும்.

தொடைகளுக்கு...
அழகான கால்கள் மற்றும் தொடைகள் இல்லாமல், பிகினி உடல் முழுமை அடைய போவதில்லை. தொடைகளை கட்டுக்கோப்பாக வைக்க சில இடுப்பு பயிற்சியில் ஈடுபடுங்கள். மேலும் காலை அமுக்குவதிலும், வளைப்பதிலும் ஈடுபடுங்கள். ஜிம்மிற்கு செல்ல நேரம் இல்லையென்றால் ஓடலாம் அல்லது நீச்சல் செய்யலாம்.

பில்லேட்ஸ்
ஒல்லியான கச்சிதமான உடல் அமைப்பு வேண்டுமானால் பில்லேட்ஸ் செய்து பாருங்கள். பில்லேட்ஸ் என்பது ஒரு வகை உடற்பயிற்சி ஆகும். அது தசைகளுக்கு திடத்தை அளிப்பதோடு மட்டுமல்லாமல், நெகிழ்வு தன்மையையும் அளிக்கும்.
அதிலும் இந்த பயிற்சி வயிறு, கீழ் முதுகு, தொடை மற்றும் முக்கியமான தசைகள் உள்ள இடங்கள் ஆகிய பகுதிகளை குறியாக கொண்டுள்ளது. இவ்வகை உடற்பயிற்சியை லேசாக ஆரம்பித்து, பின் கடுமையாக செய்யலாம். மேலும் இதனை பக்குவமாக செய்தால், காயம் ஏற்படாமல் தடுக்கலாம்.

படிக்கட்டுக்களை பயன்படுத்துங்கள்
லிப்ட்டை தவிர்த்து இனி படிக்கட்டுக்களை பயன்படுத்துங்கள். ஒவ்வொரு படியில் ஏறும் போதும், வயிறும் உடலின் பின் பகுதியும் செயல்பட வேண்டும். அப்போது தான் க்லூட் தசைகள் செயலாற்றும். மேலும் தோள்பட்டைகள் மீது கவனம் செலுத்துங்கள். அவைகள் இடுப்புக்கு அருகில் நேராக இருக்க வேண்டும்; அதனை கண்ட படி ஆட்ட கூடாது. சுலபமான இந்த பயிற்சியை எங்கு வேண்டுமானாலும் செய்யலாம்.

அதிகளவில் தண்ணீர் குடியுங்கள்
தினமும் காலை ஒரு டம்பளர் தண்ணீராவது குடிக்க தவறாதீர்கள். இது உடம்பில் உள்ள அனைத்து உயிரணுக்களுக்கும் ஆக்சிஜன் மற்றும் தண்ணீரை அளித்து அவைகளுக்கு புத்துணர்ச்சியை தரும். ஒருவேளை இது அலுப்புத் தட்டுகிறது என்றால் தண்ணீருடன் சிறிதளவு எலுமிச்சை சாற்றையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இது சோர்வை நீக்கவும் உதவி புரியும்.

உப்பை குறைக்கவும்
சோடியம் உட்கொள்ளுதலை குறைத்துக் கொள்ளுங்கள். எந்த உணவிற்கும் கூடுதலாக உப்பை சேர்க்காதீர்கள்.

வயிறு சம்பந்தப்பட்ட உடற்பயிற்சி
தினசரி உடற்பயிற்சி முடிந்ததும் வயிறு சம்பந்தப்பட்ட பயிற்சியை செய்யுங்கள். குறிப்பாக இதனை உடற்பயிற்சியை தொடங்கும் முன்னோ அல்லது நடுவிலோ செய்யக்கூடாது.

அளவாக பலமுறை சாப்பிடுங்கள்
தினமும் குறைந்த அளவில் உணவை 5-6 முறை உண்ணுங்கள். இது உங்கள் கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தும்.

காலை உணவை தவிர்க்காதீர்கள்
காலை எழுந்த ஒரு மணி நேரத்திற்குள் காலை உணவை உண்ணுங்கள். இது பிகினி உடலுக்கு தேவையான முக்கியமான ஒன்றாகும்.



Click it and Unblock the Notifications











