For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இளம் வயதில் வழுக்கையா? புரஸ்டேட் புற்றுநோய் வருமாம்!

By Mayura Akilan
|

Study suggests link between early hair loss and prostate cancer risk
மரபியல் காரணங்களினால் மட்டுமல்லாது மாறிவரும் உணவுப்பழக்கம் பணிச்சூழலினால் ஏற்படும் மன அழுத்தம் போன்றவைகளினால் இருபது வயதிலேயே ஆண்களுக்கு முடி கொட்டி வழுக்கை விழுகிறது. இளவயதில் ஏற்படும் வழுக்கை ஆண்களுக்கு புரஸ்டேட் புற்றுநோயை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறிந்துள்ளனர் ஆய்வாளர்கள்.

பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் புரஸ்டேட் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வரும் 388 ஆண்களிடமும், புற்றுநோய் இல்லாத 281 ஆண்களிடமும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் குறைந்த வயதில் வழுக்கை விழுந்த ஆண்களுக்குத்தான் புற்றுநோய் பாதிப்பு இருந்தது தெரியவந்தது.

டெஸ்ட்டோட்ரோன் சுரப்பி குறைவதாலேயே புரஸ்டேட் புற்றுநோய் ஏற்படுகிறது. இதனால் ஆண்கள் குறைந்த வயதிலேயே முதுமை தோற்றத்திற்குத் தள்ளப்படுகின்றனர் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

அதற்காக வழுக்கை விழுந்த எல்லோருக்குமே இந்த புற்றுநோய் தாக்குவதில்லை அவர்களின் வாழ்க்கை முறை, குடும்பசூழல், மரபியல்ரீதியான காரணங்கள் போன்றவையும் புற்றுநோயை உண்டாக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

வழுக்கை மற்றும் புற்று நோய் ஆகிய இரண்டிலும் ஆண்களைப் பொறுத்தமட்டில் ஹார்மோன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. 30 அல்லது 40 வயதாகும் போது வழுக்கை விழுவது எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் இந்த ஆய்வின் முடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புற்று நோய் ஏற்படுவதைத் தடுக்கும் ஒரு வழிமுறையாக வழுக்கையை எதிர்த்துப் போராடக் கூடிய மருந்துகளைப் உட்கொள்வது நலம் என்றும் ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

English summary

Study suggests link between early hair loss and prostate cancer risk | இளம் வயதில் வழுக்கையா? புரஸ்டேட் புற்றுநோய் வருமாம்!

Men who start to lose their hair in their early 20s may be more likely to develop prostate cancer in later life, new research suggests. Scientists at the Paris Descartes University in France looked at 388 men who were being treated for prostate cancer, as well as a further 281 cancer-free men.
Story first published: Monday, August 6, 2012, 17:40 [IST]
Desktop Bottom Promotion