For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அழகான கட்டுடலுக்கு ஏற்ற உணவுகள்!!!

By Maha
|

Weight Loss
உடல் எடையை அதிகரித்துவிட்டு, அதை குறைக்க முடியாமல் ஜிம், தினமும் உடற்பயிற்சி, உணவில் கட்டுப்பாட்டுடன் இருப்பது போன்றவற்றை பின்பற்றி வருவோம். ஆனால் அவ்வாறு சரியாக உண்ணாமல் இருப்பதால் பல நோய்கள் வருகின்றன. ஏனெனில் தினமும் உடலில் இனிப்பு, உப்பு, புளிப்பு போன்றவற்றை சேர்க்க வேண்டும். மேலும் உடலில் எந்த பிரச்சனையும் வராமல் இருக்க, சரியாக உணவு உண்டு வந்தாலே அதிக உடல் எடையானது குறைந்துவிடுவதோடு, ஆரோக்கியமாக வாழலாம். அதற்கான சரியான உணவுகள் என்னென்னவென்று மருத்துவர்கள் பட்டியலிட்டுள்ளதை படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...

உடல் கொழுப்புகளை குறைக்கும் உணவுகள்...

மஞ்சள் : மஞ்சளானது ஒரு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த பொருள் என்பது அனைவருக்கும் தெரியும். அத்தகைய மஞ்சளை தினமும் உணவில் சேர்த்து வந்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து, அதிக இரத்த அழுத்தம் எற்படாமல், இரத்த சுழற்சியானது நன்கு நடைபெற்று, இதய நோய் ஏற்படாமலும் இருக்கும்.

ஏலக்காய் : இது ஒரு சிறந்த உணவுப் பொருள். அதை உண்டால் உடலில் உள்ள மெட்டபாலிசம் அதிகரிப்பதோடு, உடலில் உள்ள கொழுப்புகளை கரைத்துவிடும். மேலும் இது ஒரு சிறந்த செரிமானப் பொருள். ஆகவே எந்த உணவு உண்டாலும், அதை நன்றாக செரித்துவிடும். ஆகவே அதனை தினமும் உணவுப் பொருட்களில் சேர்த்தால், உடல் எடை குறையும்.

மிளகாய் : உணவில் சேர்க்கப்படும் மிளகாய் கூட கொழுப்புகளை கரைத்துவிடும் தன்மையுடையது. மேலும் இதில் உள்ள கேப்சைசின் (capsaicin) உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்யும். கேப்சைசின் என்பது வெப்பஊட்ட பொருள். அது இருக்கும் உணவுப்பொருளை உண்பதால், 20 நிமிடங்களில் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்துவிடும்.

கறிவேப்பிலை : அதை தினமும் உண்பதால் எடையானது எளிதாக குறையும். ஏனெனில் இந்த இலை உடலில் இருக்கும் கொழுப்பு மற்றும் டாக்ஸின் போன்றவற்றை உடலில் தங்கவிடாமல் வெளியேற்றும். மேலும் அதிக எடை இருப்பவர்கள், தினமும் 8 முதல் 10 கறிவேப்பிலையை வெறும் வாயில் உண்டால் நல்லது. இல்லையென்றால், அதனை அரைத்து தண்ணீரில் கரைத்து குடிக்க வேண்டும்.

பூண்டு : இது ஒரு சிறந்த கொழுப்பை கரைக்கும் பொருள். ஏனெனில் இதில் சல்பர் இருக்கிறது. இது கிருமிகளை அழிக்கும் பொருளான ஆன்டி-பாக்டீரியல் இருப்பதோடு, மேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடலை விரைவில் ஸ்லிம் ஆக மாற்றும்.

கடுகு எண்ணெய் : இதில் மற்ற எண்ணெயை விட குறைந்த அளவு கொழுப்புகள் உள்ளது. மேலும் இதில் ஃபேட்டி ஆசிட் (fatty acid), இரூசிக் ஆசிட் (erucic acid) மற்றும் லினோலிக் ஆசிட் (linoleic acid) போன்றவை இருக்கின்றன. இதுமட்டுமல்லாமல் ஆன்டி ஆக்ஸிடன்ட், தேவையான வைட்டமின் மற்றும் தேவையற்ற கொழுப்புகளை அகற்றும், அதனால் இதயமும் ஆரோக்கியமாக இருக்கும்.

முட்டைக்கோஸ் : அதனை சமைத்தும் உண்ணலாம் அல்லது பச்சையாகவே சாப்பிடலாம். அது உடலில் சேரும் கொழுப்புகளை வேறு விதமாக மாற்றி மற்ற உடலில் நடைபெறும் செயல்களுக்கு பயன்படுத்திக் கொள்ளும். இதனால் உடலானது பருமடையாமல் இருக்கும்.

தேன் : இது உடலைக் குறைக்க ஒரு சிறந்த வீட்டு மருந்து. இதனை உண்டால் உடலில் சேரும் கொழுப்புகளை சாதாரணமாக உடலில் நடைபெறும் செயல்களுக்கு பயன்படுத்திக் கொள்ளும். ஆகவே தினமும் ஒரு டேபிள் ஸ்பூன் தேனை சூடான தண்ணீரில் கலந்து, விடியற்காலையில் குடிக்க வேண்டும்.

மோர் : பால் பொருளில் கொழுப்புகள் அதிகமாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும், ஆனால் பாலில் 8.9 கிராம் கொழுப்பும், 157 கலோரியும் உள்ளது. ஆனால் அத்தகைய பால் பொருளில் ஆன மோரில் 2.2 கிராம் கொழுப்பும், 99 கலோரியும் மட்டுமே உள்ளது. ஆகவே அதனை உண்பதால் உடலுக்கு தேவையான அளவு ஊட்டசத்துக்கள் கிடைப்பதோடு, கொழுப்பு மற்றும் கலோரியானது அதிகமாக சேராமல் எடையும் சரியான அளவு இருக்கும்.

ஆகவே மேற்கூறிய இத்தகைய உணவுகளை உண்டாலே, உடலானது ஆரோக்கியமாக இருப்பதோடு, உடலிலும் எடை கூடாமல் அழகாக இருக்கலாம் என்று கூறுகின்றனர்.

English summary

Indian foods that cut fat | அழகான கட்டுடலுக்கு ஏற்ற உணவுகள்!!!

Ayurveda suggests you include all tastes — sweet, sour, salty, pungent, bitter and astringent — in at least one meal each day, to help balance unnatural cravings. Here are some foods that can help you lose weight and gain health:
Desktop Bottom Promotion