Latest Updates
-
200 கிராம் பன்னீர் இருந்தா இந்த தாபா ஸ்டைல் பன்னீர் புர்ஜி கிரேவியை செய்யுங்க - டக்கரா இருக்கும் -
1.11 லட்சத்திற்கு விற்கப்படும் இந்தியாவின் காஸ்ட்லியான தீபாவளி ஸ்வீட் - இதுல அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? -
தீபாவளிக்கு 15 நிமிடத்தில் அதிரசம் செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சிம்ம ராசியில் குரு-செவ்வாய் சேர்க்கை: மார்ச் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழ்வாங்க.. -
தீபாவளிக்கு இந்த அவல் முறுக்கை செஞ்சு பாருங்க - வாரக்கணக்கில் வைச்சு சூப்பரா சாப்பிடலாம் -
புதன்-சுக்கிரனால் உருவாக்கப்படும் லட்சுமி நாராயண யோகத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
எம தீபத்தை எப்போது ஏற்ற வேண்டும்? எந்த இடத்தில் மற்றும் திசையில் ஏற்றி வைக்க வேண்டும்? -
இந்தியாவின் 'ஐஸ்க்ரீம் தலைநகரம்' என்று அழைக்கப்படும் நகரம் எது தெரியுமா? இங்க தினமும் ஐஸ்க்ரீம் சாப்பிடணுமாம் -
தீபாவளி ஸ்பெஷல் பாய் வீட்டு ஆட்டுக்கால் பாயா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
தீபாவளி ஸ்பெஷல் காரசாரமான மட்டன் குழம்பு ரெசிபி - இந்த பக்குவத்தில் செஞ்சு பாருங்க - தீபாவளியே ஸ்பெஷலாகிரும்
உடற்பயிற்சி... சில தவறான நம்பிக்கைகளும் உண்மைகளும்!

நம்பிக்கை - 1
உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்கு, நாம் ரசித்துச் சாப்பிடும் அனைத்து உணவுகளையும் துறக்க வேண்டும்.
உண்மை : சரியான உணவுமுறை என்பது உடலை சிறப்பாக்கும். பிடித்த உணவை முற்றிலுமாக நிராகரிக்க வேண்டியதில்லை. உணவில் கட்டுப்பாடும், அளவும்தான் முக்கியம். முறையாகவும், மிதமாகவும் சாப்பிட்டால் எந்த உணவும், யாரையும் குண்டாக்காது. விருப்பமற்ற உணவை கட்டாயமாக சாப்பிட்டால் மன ஆரோக்கியம் குறையும்.
நம்பிக்கை - 2
அதிகாலையில் உடற்பயிற்சி செய்வதே நல்லது.
உண்மை: நேரத்தை விட பயிற்சிதான் முக்கியம். பகல் வேளையில் வசதியான எந்த நேரத்திலும் பயிற்சி செய்யலாம்.
நம்பிக்கை - 3
காலைச் சிற்றுண்டியைத் தியாகம் செய்யலாம். விரைவாக எடையைக் குறைக்க பட்டினி கிடப்பதே சிறந்த வழி.
உண்மை: தசைகளின் தினசரிப் பராமரிப்புக்கு ஊட்டச்சத்துகள் அவசியம். கலோரி நிறைந்த உணவுகளை சாப்பிடு கிறவர்கள்தான் அதிக எடை போடுகிறார்கள். அதனால் அவர்கள் ஆரோக்கியமும் குறையும்.
நம்பிக்கை - 4
எல்லா உடற்பயிற்சிக் கருவிகளும் நம் உடம்புக்கு ஏற்றவைதான்.
உண்மை: வீட்டில் வைத்து உபயோகப்படுத்தும் சில உடற்பயிற்சிக் கருவிகள் நன்றாக அமைக்கப்பட்டிருக்கவில்லை. அதில் பயிற்சி செய்யும் போது, உங்களுக்கு ஏற்கனவே உடல்ரீதியான பாதிப்புகள் இருந்தால் அவை மேலும் சேதத்தை ஏற்படுத்தக்கூடும். ஒரு குறிப்பிட்ட உடற்பயிற்சிக் கருவியில் பயிற்சி செய்யும்முன், உடற்பயிற்சி வல்லுநரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்வது சிறந்தது.
நம்பிக்கை - 5
உடல் நல்ல வடிவம் பெறுவதற்குச் சிறந்த வழி, ஓட்டம்.
உண்மை: ஓட்டமும், மெல்லோட்டமும் நல்ல உடற்பயிற்சிகள்தான். ஆனால் அவை கால் மூட்டுகளில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். ஒருவர் நீச்சல், நடை, சைக்கிளிங் போன்றவைகளில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யவேண்டும். அதன் மூலம், தான் சாப்பிட்டதை விட அதிக கலோரிகளை எரிக்க முடிந்தால் அது சிறந்த உடற்பயிற்சிதான்.
நம்பிக்கை - 6
வலியில்லாத உடற்பயிற்சிகளால் பெரிதாக நன்மை இல்லை.
உண்மை: ஜிம்" பயிற்சியின்போது தசைகளில் வலி எடுக்காவிட்டால் அதனால் பிரயோஜனமில்லை என்று பொதுவாகப் பலரும் கருதுகிறார்கள். தீவிர உடற்பயிற்சியின்போது சிறிது கஷ்டம் ஏற்படலாம். ஆனால் நல்ல உடற்பயிற்சிக்கு வலிதான் அடையாளம் என்பதில்லை. தசை சோர்வு அல்லது தசைநார் கிழிந்திருப்பதையும் வலி சுட்டிக்காட்டலாம்.
நம்பிக்கை - 7
உடம்பின் ஒரு பகுதிக்கு மட்டும் தொடர்ந்து பயிற்சி செய்தால் அந்த பகுதியில் வலிமை அதிகரிக்கும்.
உண்மை:
மனித மனதுக்கு ஓய்வும், சவாலும் தேவை. அதுபோல் உடற்பயிற்சியிலும் ஓய்வும் தேவை. தொடர்ச்சியான செயல்பாடும் தேவை.
நம்பிக்கை – 8
வயது முதிர்ந்தவர்களும், மிகவும் இள வயதினரும் உடற்பயிற்சி செய்யத் தேவையில்லை.
உண்மை : உடற்பயிற்சி செய்யும் முதியவர்களுக்கு ஆஸ்டியோஆர்த்ரைட்டிஸ்" அறிகுறி குறையும். மூட்டு நிலைத்தன்மை அதிகரிக்கும். தவறி விழுந்தால் எலும்பு முறிவைத் தடுக்கும் வகையில் எலும்பு அடர்த்தி பராமரிக்கப்படும். ஆனால் மிக இளவயதினருக்கு, உடற்பயிற்சி அவசியம். அது அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
நம்பிக்கை - 9
கனமான பொருட்களைத் தூக்குவது தசைகளை வலுப்படுத்தும். எனவே ஒரு பெண், பெண்மையுடன் திகழ எடை குறைந்த எடையுள்ள பொருட்களையே தூக்க வேண்டும்.
உண்மை : கனமான பொருட்களைத் தூக்குவது ஒரு பெண்ணை, தசைகள் திரண்ட அழகி ஆக்கிவிடாது. ஆரோக்கியமானவர்களாகவும், பலமானவர்களாகவும் மாற்றும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
