For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒல்லியாகனுமா? 9 முறை சாப்பிடுங்களேன்!

By Mayura Akilan
|

Healthy Diet
குண்டாக இருப்பவர்கள் உடல் இளைக்கவேண்டுமென்றால் ஒரு நாளைக்கு 9 முறை சாப்பிட வேண்டும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

லண்டன் இம்பீரியல் கல்லூரி விஞ்ஞானிகள் உடல்பருமனை குறைப்பதற்கான வழிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்விற்காக இங்கிலாந்து, ஜப்பான், சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்களுக்கு ஒரே கலோரி அளவுள்ள உணவு 6 முதல் 9 முறை கொடுக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டனர். இந்த ஆய்வு குறித்து வெளியிடப்பட்ட முடிவுகளில் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் இடம்பெற்றன.

உடலை குறைப்பதற்காக 3 வேளை உணவை 2 வேளையாக குறைப்பதாக கூறி அதிகமாக சாப்பிடுவது ஆபத்து.

அதே சமயம் உணவை கொஞ்சம் கொஞ்சமாக 9 முறை சாப்பிடுவதால் ரத்தக்கொதிப்பு, கொழுப்பு கட்டுப்படும். உடல் எடையும் சீராகும் என்கின்றனர் நிபுணர்கள்.

நாம் உண்ணும் குறைவாக, போதிய இடைவெளி விட்டு சாப்பிடவேண்டும். ஊட்டச்சத்துள்ள உணவாக இருக்க வேண்டும், இயற்கை உணவுகளை அதிகரித்து கொழுப்பு உணவை தவிர்ப்பது நல்லது. உணவு உண்பதோடு சரியான உடற்பயிற்சி மேற்கொண்டால் உடல் பருமன் குறையும் என்கின்றனர் நிபுணர்கள்.

English summary

Eating 9 meals per day may cut your cholesterol and help you stay slim | ஒல்லியாகனுமா? 9 முறை சாப்பிடுங்களேன்!

Suggesting that eating little and often is healthier for us, experts have said that we should eat as many as nine meals every day. They say this may help lower blood pressure and cholesterol, and even encourage weight loss, the Daily Mail reported.
Story first published: Tuesday, October 16, 2012, 10:14 [IST]
Desktop Bottom Promotion