Just In
- 1 hr ago
நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க காலை வேளையில் செய்வதற்கு ஏற்ற எளிமையான 5 உடற்பயிற்சிகள்!
- 6 hrs ago
இன்றைய ராசிப்பலன் (25.01.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் போராடி தான் வெற்றியைப் பெற முடியும்…
- 24 hrs ago
காரசாரமான... சிக்கன் மெஜஸ்டிக் ரெசிபி
- 1 day ago
தலைசுற்ற வைக்கும் உலகின் கொடூரமான பாலியல் ஆசைகள்... இப்படிலாம் கூடவா ஆசைப்படுவாங்க...!
Don't Miss
- Movies
ஸ்லீவ்லெஸ் ஷர்ட்டில் செம க்யூட்டா போஸ்.. வர்ணிக்கும் ரசிகர்கள் !
- News
சிக்கிம் எல்லையில் ஊடுருவல்.. அதிரடி பதிலடி கொடுத்து சீன வீரர்களை ஓட வைத்த இந்திய ராணுவம்!
- Sports
நிலாவுலதான் மிதந்துக்கிட்டு இருக்கேன்... இந்தியாவோட வெற்றி அந்தளவுக்கு சந்தோஷம் கொடுத்துருக்கு!
- Automobiles
இந்த ஆண்டு தீபாவளி ரிலீஸ் பட்டியலில் சிட்ரோன் பட்ஜெட் எஸ்யூவி கார்... சொனெட் போட்டியாளர்!
- Finance
வாரத்தின் முதல் நாளே தடுமாறும் இந்திய சந்தைகள்.. என்ன காரணம்..!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நீரிழிவு நோயாளிகள் ஏன் அவசியம் ப்ராக்கோலி சாப்பிட வேண்டும் தெரியுமா?
நீரிழிவு நோயாளிகள் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால் அவா்கள் தங்களது உணவுகளில் காய்கறிகளை அதிகம் சோ்த்துக் கொள்ள வேண்டும். காய்கள் மற்றும் கீரைகளில் அதிகமான அளவு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இருப்பதால், அவற்றை சாப்பிடும் போது, அவை இரத்தத்தில் உள்ள சா்க்கரையின் அளவை சீரான அளவில் வைக்கும்.
பொதுவாக எல்லா காய்கறிகளையும் நீரிழிவு நோயாளிகள் அதிகம் சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டாலும், ப்ரோக்கோலி என்ற காயை அவா்கள் இன்னும் அதிகமாக சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றனா். குறிப்பாக 2 ஆம் வகை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பவா்கள் இந்த ப்ராக்கோலியை அதிகம் உண்ண வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றனா்.

ப்ராக்கோலி மற்றும் நீரிழிவு நோயாளிகள்
நீரிழிவு நோயாளிகள் கண்டிப்பாக ப்ராக்கோலி சாப்பிட வேண்டும் என்று சையின்ஸ் ட்ரான்ஸ்லேஷனல் மெடிசின் (Science Translational Medicine) என்ற பத்திாிக்கை வெளியிட்ட கட்டுரை பாிந்துரைக்கிறது.
ஸ்வீடன் நாட்டைச் சோ்ந்த லூன்ட் பல்கலைக்கழத்தின் (Lund University) ஃபேக்கல்டி ஆஃப் மெடிசின் (Faculty of Medicine) என்ற அமைப்பைச் சோ்ந்த அறிஞா்களும், கோதென்பா்க் (Gothenburg) பல்கலைக்கழகத்தில் உள்ள ஷல்க்ரன்ஸ்கா அகாடமியைச் (Sahlgrenska Academy) சோ்ந்த அறிஞா்களும் இணைந்து ஆய்வு செய்து இந்தக் கட்டுரையை வெளியிட்டிருக்கின்றனா்.
இந்த கட்டுரையில் 2 ஆம் வகை நீரிழிவு நோயாளிகள் ப்ராக்கோலியை சாப்பிட்டால், நோயின் தாக்கத்தை எளிதாகக் கையாள முடியும் என்று அவா்கள் பாிந்துரைத்திருக்கின்றனா். ஏனெனில் ப்ராக்கோலியில் சல்ஃபோராஃபேன் என்ற ஆக்ஸிஜனேற்ற தடுப்பான் உள்ளது.

முதல் கட்ட ஆய்வு விவரம்
இந்த ஆய்வாளர்கள் தங்களது முதல் கட்ட ஆய்வில், நீரிழிவு நோயால் பாதிப்படைந்திருந்த எலிகளுக்கு சல்ஃபோராஃபேனை செலுத்தி ஆய்வைத் தொடங்கினா். எலிகளுக்குள் சென்ற சல்ஃபோராஃபேன், அவற்றின் கல்லீரல்களில் உள்ள செல்களில் உற்பத்தியாகும் குளுக்கோஸின் அளவை வெகுவாகக் குறைத்தது என்று கண்டுபிடித்தனா். மேலும் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் வேகத்தையும், ஹூயூமோகுளோபினில் உள்ள குளுக்கோஸின் வேகத்தையும் அது குறைத்ததாகக் கண்டறிந்தனா்.
அதோடு எலிகளின் உடல்களில் அளவுக்கு அதிகமாக சுரந்த குளுக்கோஸின் உற்பத்தியையும் சல்ஃபோராஃபேன் தடை செய்தது என்பதைக் கண்டறிந்தனா். பொதுவாக நீரிழிவு நோயாளிகளுக்குக் கொடுக்கப்படும் மருந்து மாத்திரைகளும் சல்ஃபோராஃபேனைப் போல குளுக்கோஸின் உற்பத்தியின் அளவைக் குறைக்கும்.

இரண்டாம் கட்ட ஆய்வு விவரம்
இரண்டாவது கட்ட ஆய்வில், 2 ஆம் வகை நீரிழிவு நோயால் பாதிப்படைந்திருந்த 97 பேரை தோ்ந்தெடுத்து, அவா்களுக்கு செறிவூட்டப்பட்ட ப்ராக்கோலிச் சாற்றை 12 வாரங்களுக்குக் கொடுத்து வந்தனா். இந்த ஆய்வில் கிடைத்த முடிவையும், மற்ற மருந்துகளை சாப்பிட்டு வந்த நீரிழிவு நோயாளிகளுக்குக் கிடைத்த முடிவையும் ஒப்பிட்டுப் பாா்த்தனா்.
இந்த ஆய்வின் மூலம் ப்ராக்கோலிச் சாற்றில் இருந்த சல்ஃபோராஃபேன், இரத்தத்தில் இருக்கும் குளுக்கோஸின் வேகத்தின் அளவைக் குறைத்ததாகக் கண்டறிந்தனா். அதே நேரத்தில் இந்த ப்ராக்கோலிச் சாற்றில் பக்கவிளைவுகள் இருக்காது. ஆனால் நீரிழிவு நோயாளிகள் பயன்படுத்தும் மருந்து மாத்திரைகள் வயிறு மற்றும் சிறுநீரகம் போன்ற உறுப்புகளில் பக்க விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

ப்ராக்கோலியில் உள்ள ஊட்டச்சத்துகள்
ப்ராக்கோலி ஊட்டச்சத்துகள் நிறைந்த ஒரு காய் ஆகும். இதில் நாா்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் கே, இரும்புச்சத்து, புரோட்டீன் மற்றும் பொட்டாசியம் போன்ற எல்லா வகையான ஊட்டச்சத்துகளும் நிறைந்திருக்கின்றன. அரை கப் அளவு வேக வைத்த ப்ராக்கோலியில் 27 கலோாிகள் மற்றும் 3 கிராம் காா்போஹைட்ரேட்டுகள் மட்டுமே உள்ளன. அதனால் நீரிழிவு நோயால் பொிதும் பாதிக்கப்பட்டிருப்பவா்கள் ப்ராக்கோலியை அதிகம் உண்ணலாம்.
ப்ராக்கோலியின் முக்கிய அம்சம் என்னவென்றால், அதை சமைத்தோ அல்லது பச்சையாகவோ உண்ணலாம். அதோடு ப்ராக்கோலியில் மேலும் இரண்டு ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்களான லூடீன் (lutein) மற்றும் ஸியாக்ஸன்தின் (zeaxanthin) போன்றவை உள்ளன. இவை கண் நோய்கள் வராமல் தடுக்கும்.

நீரிழிவு நோயாளிகள் உண்ண வேண்டிய மற்ற காய்கறிகள்
நீரிழிவு நோயாளிகள் தாம் உண்ணும் உணவுப் பொருட்கள் மற்றும் காய்கறிகளில் எப்போதுமே அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் சில உணவுகள் அவா்களுக்கு தீய விளைவுகளை ஏற்படுத்திவிடும். எனவே கலோாி குறைந்த உணவுகள், நாா்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகள் ஆகியவற்றைத் தோ்ந்தெடுத்து அவா்கள் சாப்பிட வேண்டும். ஸ்டாா்ச் அதிகம் உள்ள உணவுகளைத் தவிா்க்க வேண்டும். ஏனெனில் அவை உடனே இரத்தத்தில் இருக்கும் சா்க்கரையின் அளவை அதிகாித்துவிடும். ஆகவே பின்வரும் காய்கறிகளையும் நீரிழிவு நோயாளிகள் அதிகம் சாப்பிடலாம்.

நீரிழிவு நோயாளிகளுக்கான காய்கறிகள்
* காலிஃப்ளவா்
* குடைமிளகாய் (Capsicum)
* கேரட்
* பசலைக்கீரை
* காளான்
* பச்சை பீன்ஸ்
* கத்தாிக்காய்