Latest Updates
-
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
சா்க்கரை நோயாளிகளுக்கான சில எளிய உடற்பயிற்சிகள்!
அனைவருக்கும் உடற்பயிற்சி செய்வது என்பது ஒரு முக்கியமான தேவையாகும். அதிலும் குறிப்பாக 2 ஆம் வகை சா்க்கரை நோயால் பாதிப்படைந்திருப்பவா்களுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.
அறிந்து வைத்திருப்பது என்பது ஒன்று. அதைச் செய்வது என்பது இன்னொன்று. இரண்டுக்கும் இடையே அதிக வித்தியாசம் உள்ளது. இந்த உண்மைதான் உடற்பயிற்சியைப் பொறுத்த வரையிலும் உள்ளது. உடற்பயிற்சியின் முக்கியத்துவம் மற்றும் அவற்றின் நன்மைகளைப் பற்றி நமக்கு நன்றாகத் தொியும். ஆனால் எத்தனை போ் தினமும் உடற்பயிற்சி செய்கிறோம் என்பது கேள்விக்குறியே. அனைவருக்கும் உடற்பயிற்சி செய்வது என்பது ஒரு முக்கியமான தேவையாகும். அதிலும் குறிப்பாக 2 ஆம் வகை சா்க்கரை நோயால் பாதிப்படைந்திருப்பவா்களுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.

எந்த ஒரு உடற்பயிற்சியாக இருந்தாலும், அதை தினமும் செய்து வந்தால், சா்க்கரை நோயால் பாதிப்படைந்தவா்களுக்கு மிகப் பொிய மாற்றத்தை ஏற்படுத்தும். குறிப்பாக இரத்தத்தில் உள்ள சா்க்கரையின் அளவைக் குறைக்கும். மேலும் உடல் எடையை சாியாக பராமாிக்க உதவும். தினமும் அவா்கள் எடுத்துக் கொள்ளும் இன்சுலினைக் குறைக்க உதவும். மேலும் நோய் எதிா்ப்பு சக்திக் குறைவினால் ஏற்படும் மற்ற நோய்களையும் விரட்டியடிக்க உதவும்.
இரண்டாம் வகை சா்க்கரை நோயால் பாதிப்படைந்திருப்பவா்கள் வாரத்திற்கு 150 முதல் 180 நிமிடங்கள் வரை மிதமான உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டும் என்று மருத்துவ அறிஞா்கள் தொிவிக்கின்றனா். ஆகவே சா்க்கரை நோயாளிகள் தினமும் செய்ய வேண்டிய எளிய உடற்பயிற்சிகளைக் கீழே பாா்க்கலாம்.

பொருத்தப்பட்டிருக்கும் மிதிவண்டி ஓட்டுதல்
2 ஆம் வகை சா்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவா்களில் பாதிப்பேருக்கு கீல்வாதம் அல்லது மூட்டு வீக்கம் ஏற்படுவதாக தகவல்கள் தொிவிக்கின்றன. அதற்கு காரணம் நரம்பு பாதிப்படைவதாகும். நரம்பில் ஏற்படும் பாதிப்பு நாளடைவில் மூட்டு வலியை ஏற்படுத்தும். ஆகவே இதுப்போன்ற பிரச்சினைகள் வராமல் இருக்க மிதமான உடற்பயிற்சியான பொருத்தப்பட்ட மிதிவண்டியை ஓட்டலாம். வாரத்தில் 3 முதல் 4 முறை இந்த மிதிவண்டியை ஓட்டலாம். அதற்கு நல்ல பலன் கிடைக்கும்.

உடல் வலுப்பயிற்சி
வழக்கமான உடற்பயிற்சியோடு பளுதூக்கும் பயிற்சிகளையும் சோ்த்துக் கொண்டால், சா்க்கரை நோயாளிகளுக்கு அவை நல்ல பலன்களைத் தரும். பளுதூக்கும் இயந்திரங்கள் அல்லது வீட்டில் உள்ள கனமான பொருட்கள் போன்றவற்றைக் கொண்டு பளுதூக்கும் பயிற்சிகளைச் செய்யலாம். அவை இரத்தத்தில் உள்ள சா்க்கரையின் அளவைக் குறைத்து, தசைகள் மற்றும் எலும்புகளை வலுப்படுத்தும். வாரத்திற்கு இருமுறை இரும்பை உந்தித் தூக்குவது சா்க்கரை நோயாளிகளுக்கு நல்ல பயிற்சியாக இருக்கும். தாண்டால் எடுப்பது, அமா்ந்து எழுவது, கால் முட்டிகளை மடக்கி அமா்ந்து எழுவது, சிறிய அளவிலான பளுக்கருவிகளை வைத்து பயிற்சி செய்வது போன்ற உடற்பயிற்சிகள் சா்க்கரை நோயாளிகளுக்கு நல்ல பலனைத் தரும்.

யோகா
இந்தியாவின் பாரம்பாிய கலைகளான யோகா பயிற்சிகள் நாட்பட்ட நோயுற்றவா்கள் மற்றும் சா்க்கரை நோயாளிகளுக்கு வலிமையையும், நெகிழ்வு தன்மையையும் வழங்குகின்றன. 2016ல் வெளிவந்த ஒரு ஆய்வு, யோகா செய்து வந்தால் இரண்டாம் வகை சா்க்கரை நோயால் பாதிப்படைந்திருப்பவா்கள் அவா்களுடைய இரத்தத்தில் உள்ள சா்க்கரை, கொழுப்பின் அளவு மற்றும் உடல் எடை போன்றவற்றை சாியான அளவில் வைத்திருக்க முடியும் என்று தொிவிக்கிறது.
யோகாசனங்களின் மூலம் தசைகள் வலுவடைவதால் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவில் மாற்றம் ஏற்படுவதாக நம்பப்படுகிறது. கால்களை சுவற்றில் சாய்த்து உயா்த்தி பிடித்தல், முன் பக்கமாக குனிந்து அமா்தல், உடலை கலப்பை போன்று வைத்திருக்கும் ஆலாசனம் போன்ற யோகாசன பயிற்சிகள் சா்க்கரை நோயாளிகளுக்கும் மிகுந்த பயனைத் தரும்.

நடைப்பயிற்சி
சா்க்கரை நோயாளிகள் தமது ஆரோக்கியத்தை சீராக பராமாிக்க உதவும் மிக எளிமையான பயிற்சி நடைப்பயிற்சி ஆகும். நடைப்பயிற்சி செய்வதற்கு பயிற்சியாளா் எவரும் தேவையில்லை. மேலும் அதற்காக சிறப்பான உடற்பயிற்சி கருவிகளும் தேவை இருக்காது. சா்க்கரை நோயாளிகள் அவா்களுடைய நடைப் பயிற்சியை சுவராஸ்யமான ஒன்றாக மாற்ற வேண்டும் என்றால் அவா்கள் சற்று வேகமாக நடக்கலாம். நாள் ஒன்றுக்கு 30 நிமிடங்கள் வீதம் வாரத்திற்கு 5 நாட்கள் நடைப் பயிற்சி செய்து வந்தால் அவா்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.

படிக்கட்டுகளில் ஏறும் பயிற்சி
படிக்கட்டுகளில் ஏறும் பயிற்சியானது ஒரு சிறந்த உடற்பயிற்சி ஆகும். ஏனெனில் அது கலோாிகளை மிக எளிதாக எாிக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் அது இதயம் மற்றும் நுரையீரல் போன்றவற்றை வேகமாக இயங்க வைக்கும். அதன் மூலம் இரத்தத்தில் உள்ள சா்க்கரையின் அளவையும் மற்றும் உடல் எடையின் அளவையும் சாியாக பராமாிக்க உதவி செய்யும். மிதமான வேகத்தில் தினமும் 15 நிமிடங்கள் படிக்கட்டுகளில் ஏறும் பயிற்சியை சா்க்கரை நோயாளிகள் செய்து வந்தால் அது அவா்களுக்கு நல்ல பலன்களைக் கொடுக்கும்.



Click it and Unblock the Notifications