For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சுகர் ப்ரீ உணவுப் பொருட்களை சாப்பிடுவது உண்மையில் பாதுகாப்பானதா? இல்லையா?

|

தற்போதைய காலக்கட்டத்தில் சர்க்கரை நோய் என்பது எல்லோரிடத்திலும் பரவலாக காணப்படுகிறது. இதன் விளைவு மக்கள் சுகர் ப்ரீ உணவுப் பொருட்களை மட்டுமே நாடிச் செல்லத் தொடங்கியுள்ளனர். உண்மையில் இந்த சுகர் ப்ரீ உணவுப் பொருட்கள் பாதுகாப்பானதா இல்லையா என்பது கூட அவர்களுக்கு தெரிவதில்லை. அதிலும் சர்க்கரை நோயாளிகள் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். சாப்பிடும் பிஸ்கட்டிலிருந்து, காபி டீ என எல்லாவற்றிற்கும் சுகர் ப்ரீயைத் தான் பயன்படுத்துகிறார்கள்.

சர்க்கரை சத்து பொதுவாக மாவு போன்ற கார்போஹைட்ரேட் உணவுப் பொருட்களில் காணப்படுகிறது. ஆனால் மக்கள் முழுமையாக சர்க்கரையை தவிர்க்க வேண்டும் என்று செயற்கை சர்க்கரைகளை பயன்படுத்துகின்றனர். வெல்லம், தேன் போன்ற இயற்கை பண்டங்கள் நல்லது. 70-களில் நடத்திய ஆய்வின் படி செயற்கை இனிப்புகள் எலிகளின் சிறுநீர்ப்பை புற்றுநோய்க்கு காரணமாக அமைகிறது என கண்டறியப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சுகர் ப்ரீ என்றால் என்ன?

சுகர் ப்ரீ என்றால் என்ன?

சுகர் ப்ரீ என்பது சர்க்கரை இல்லாதது. இது உங்கள் உணவுக்கு இனிப்பு சுவை அளிப்பதோடு குறைந்த கலோரிகளைக் கொண்டது. சர்க்கரை நோயாளிகள் தாங்கள் எடுத்துக் கொள்ளும் சர்க்கரையின் அளவில் கட்டுப்பாடோடு இருக்க வேண்டியது அவசியமாகிறது . ஒரு 5 கிராம் சர்க்கரையில் 20-25 கலோரிகள் வரை இருக்கின்றன.

சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை பாதுகாப்பானதா?

சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை பாதுகாப்பானதா?

நிபுணர்களின் கூற்றுப்படி சுகர் ப்ரீயில் இயற்கையான பொருட்கள் இருந்தால் பாதுகாப்பானது. அதில் கெமிக்கல்கள் கலக்கும் போது மட்டுமே பாதிப்பு ஏற்படுகிறது. கெமிக்கல்கள் நிறைந்த சுகர் ப்ரீ எலும்புகளையும் பாதிக்க வல்லது. எனவே சுகர் ப்ரீயை வாங்குவதற்கு முன் அதில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்களின் பட்டியலை படித்துக் கொள்ளுங்கள். சுகர் ப்ரீயுடன் ஒப்பிடும் போது தாவரத்தில் இருந்து பெறப்படும் ஸ்டீவியா சிறந்ததாக கூறப்படுகிறது. ஹெல்த்லைன் படி, ஸ்டீவியா ஒன்றை வீட்டில் நடவு செய்து அதன் இலைகளை சுகர் ப்ரீ மாத்திரைகளாக பயன்படுத்துவது சிறந்தது. இந்த மாத்திரைகள் கடைகளிலும் கிடைக்கின்றன.

சுகர் ப்ரீ இனிப்புகளை சாப்பிடலாமா?

சுகர் ப்ரீ இனிப்புகளை சாப்பிடலாமா?

இந்த சுகர் ப்ரீயை நிறைய இனிப்பு வகைகளில் கூட தற்போது பயன்படுத்துகின்றனர். லட்டு, கேக் அல்லது புட்டிங் போன்ற நிறைய இனிப்பு வகைகளிலும் பயன்படுத்தி வருகிறார்கள். இது குறைந்த கலோரிகளைக் கொண்டது. ஆனால் இருப்பினும் இதில் சேர்க்கப்பட்டுள்ள நெய், க்ரீம் போன்றவை நீரிழிவு நோயாளிகளுக்கு உடல் பருமனை ஏற்படுத்துகிறது. அவர்களை ஆரோக்கியமற்றதாக மாற்றுகிறது. சுகர் ப்ரீ உணவாக இருப்பினும் கார்போஹைட்ரேட் அளவில் குறைவு இல்லை.

விளைவுகள்

விளைவுகள்

சிலருக்கு இரத்த சர்க்கரை அளவு தொடர்ச்சியாக அதிகமாகும் போது அவர்கள் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைக்கு பதிலாக சுகர் ப்ரீயை பயன்படுத்துகின்றனர். அதே நேரத்தில் மருத்துவர்கள் சுகர் ப்ரீயை கூட குறைந்த அளவில் பயன்படுத்த வலியுறுத்துகின்றனர்.

டாக்டர்களின் கூற்றுப்படி, அதிக எடை கொண்ட சர்க்கரை நோயாளிக்கு 1,800 கலோரி டயட் இருக்க வேண்டும். இதே மெலிந்த உடல் வாகு கொண்டவர்கள் 2000-2200 கலோரிகள் வரை பெறலாம். அதிகப்படியான உடல் பருமன் உடைய சர்க்கரை நோயாளிகள் ஒரு நாளைக்கு 1500 கலோரிகளுக்கு மேல் தாண்டக் கூடாது.

சர்க்கரையை தவிருங்கள்

சர்க்கரையை தவிருங்கள்

குழந்தைகளை சுகர் ப்ரீயை சாப்பிட அனுமதிக்காதீர்கள். ஹெல்த்லைன்.காம் படி, சில செயற்கை இனிப்புகள் மற்றும் சுகர் ப்ரீ போன்றவை நீரிழிவு நோயை ஏற்படுத்துகின்றன. அதே மாதிரி சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Do You Live On Sugar Free? Know These Factors Before Eating Anything That Is Sugar Free

Are sugar free food items that good for people with diabetes or others in general? Is switching over to sugar free over sugar a healthy choice? Read on to know more..
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more