For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்க்கரை நோயாளிகள் நட்ஸ் சாப்பிடலாமா? அதுவும் எந்த நட்ஸ்களை சாப்பிடலாம்?

சர்க்கரை நோய் உள்ள பலருக்கும் இருக்கும் ஓர் கேள்வி, சர்க்கரை நோயாளிகள் நட்ஸ் சாப்பிடலாமா என்பது தான். நிச்சயம் சர்க்கரை நோயாளிகள் நட்ஸ்களை சாப்பிடலாம்.

|

Diabetes And Nuts: ஒருவருக்கு சர்க்கரை நோய் வருவதற்கு முக்கிய காரணமாக இருப்பது வாழ்க்கை முறையும், உணவுப் பழக்கவழக்கங்களும் தான். சர்க்கரை நோய் என்பது இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் நிலையாகும். இன்று ஏராளமான மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்க்கரை நோய் உள்ளவர்கள் தங்கள் உணவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக சர்க்கரை குறைவான மற்றும் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். இத்துடன் உடற்பயிற்சிகளை தினமும் தவறாமல் மேற்கொள்ள வேண்டும்.

Diabetes And Nuts: Which Nuts Are Good For A Diabetic In Tamil

சர்க்கரை நோய் உள்ள பலருக்கும் இருக்கும் ஓர் கேள்வி, சர்க்கரை நோயாளிகள் நட்ஸ் சாப்பிடலாமா என்பது தான். நிச்சயம் சர்க்கரை நோயாளிகள் நட்ஸ்களை சாப்பிடலாம். நட்ஸ்களில் உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் வளமான அளவில் உள்ளன. குறிப்பாக நட்ஸ்களில் ஆரோக்கியமான கொழுப்புக்கள் அதிகளவில் உள்ளன. இந்த கொழுப்புக்கள் உடலில் உள்ள செல்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதோடு, இதயம் போன்ற முக்கியமான உறுப்புக்களை பாதுகாக்கின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நட்ஸ்களில் உள்ள சத்துக்கள்

நட்ஸ்களில் உள்ள சத்துக்கள்

நட்ஸ்களில் புரோட்டீனைத் தவிர, நார்ச்சத்து, வைட்டமின் ஈ, ஃபோலேட், தயமின், மக்னீசியம், பொட்டாசியம், கரோட்டினாய்டு, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பைட்டோ ஸ்டெரால்கள் போன்றவை நிறைந்துள்ளன. இருப்பினும் அனைத்து நட்ஸ்களுமே சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது அல்ல. குறிப்பாக உப்பு சேர்க்கப்பட்ட நட்ஸ்களை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடாது. ஏனெனில் உப்பானது நிலைமையை மோசமாக்கலாம். இப்போது சர்க்கரை நோயாளிகள் எந்த நட்ஸ்களை சாப்பிடலாம் என்பதைக் காண்போம்.

பாதாம்

பாதாம்

சர்க்கரை நோயாளிகளுக்கான நட்ஸ் என்று வரும் போது, அதில் பாதாம் முதன்மையான ஒன்றாகும். சர்க்கரை நோயின் ஆரம்ப கட்டத்தில் இருப்பவர்கள் மற்றும் உயர் இரத்த சர்க்கரையைக் கொண்டவர்களுக்கு பாதாம் மிகவும் அற்புதமான ஸ்நாக்ஸாக விளங்கும். ஏனெனில் இது இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதோடு, இதய நோயின் அபாயத்தையும் குறைக்கிறது. மேலும் பாதாமில் நார்ச்சத்து, வைட்டமின் ஈ, மக்னீசியம் மற்றும் வைட்டமின் பி12 போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன. எனவே இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஆரோக்கியமான ஸ்நாக்ஸாக இருக்கும்.

பிஸ்தா

பிஸ்தா

பிஸ்தாவில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவு. எனவே சக்கரை நோயாளிகள், குறிப்பாக டைப்-2 சர்க்கரை நோயாளிகள் பிஸ்தாவை ஸ்நாக்ஸ் நேரத்தில் சாப்பிடலாம். மேலும் பிஸ்தாவில் வளமான அளவில் நார்ச்சத்துக்களும், ஆரோக்கியமான கொழுப்புக்களும் உள்ளன. ஆய்வு ஒன்றில் கலந்து கொண்ட டைப்-2 சர்க்கரை நோயாளிகள் 4 வாரங்கள் தொடர்ந்து பிஸ்தாவை உட்கொண்டு வந்ததில், அவர்களின் உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களின் அளவு குறைந்து, நல்ல கொழுப்புக்களின் அளவு கணிசமாக உயர்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே சர்க்கரை நோயாளிகள் பிஸ்தாவை தினமும் சிறிது சாப்பிடலாம்.

வால்நட்ஸ்

வால்நட்ஸ்

ஒமேகா-3 அதிகம் நிறைந்த ஓர் அற்புதமான நட்ஸ் தான் வால்நட்ஸ். இந்த வால்நட்ஸில் புரோட்டீனை தவிர, பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்களும் உள்ளன. வால்நட்ஸில் உள்ள பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கை வகிக்கின்றன மற்றும் இது பசியுணர்வைக் கட்டுப்படுத்துகின்றன. எனவே இது சர்க்கரை நோயாளிகளுக்கான அற்புதமான ஸ்நாக்ஸாக இருக்கும்.

முந்திரி

முந்திரி

பெரும்பாலானோரின் விருப்பமான ஒரு நட்ஸ் தான் முந்திரி. இந்த முந்திரியானது சர்க்கரை நோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. என்ன தான் முந்திரியில் கொழுப்புக்கள் அதிகம் இருந்தாலும், அவை நல்ல கொழுப்புக்கள் என்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. தினமும் சிறிது முந்திரியை உட்கொண்டு வந்தால், அது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து, நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்து, இதய நோயின் அபாயத்தைக் குறைக்கும். முக்கியமாக முந்திரி இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது.

வேர்க்கடலை

வேர்க்கடலை

விலைக்குறைவில் கிடைக்கக்கூடிய ஒரு நட்ஸ் தான் வேர்க்கடலை. இந்த வேர்க்கடலையில் புரோட்டீன், கொழுப்புக்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதோடு, கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவு என்பதால், சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு அற்புதமான ஸ்நாக்ஸாக வேர்க்கடலை விளங்கும்.

குறிப்பு:

குறிப்பு:

நட்ஸ்கள் என்ன தான் உடலுக்கு நன்மை விளைவிக்கும் சத்துக்களைக் கொண்டுள்ள ஆரோக்கியமான உணவுப் பொருளாக இருந்தாலும், இதய நோய், கொலஸ்ட்ரால் பிரச்சனை மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளைக் கொண்டவர்கள், நட்ஸ்களை தினசரி உணவில் சேர்க்கும் முன் மருத்துவரிடம் கேட்டுக் கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி, எப்பேற்பட்ட ஆரோக்கியமான உணவுகளையும் அளவாக உட்கொண்டால் மட்டுமே அதன் நற்பலனைப் பெற முடியும். எனவே நட்ஸ்களையும் அளவாக சாப்பிட்டு, நற்பலனைப் பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Diabetes And Nuts: Which Nuts Are Good For A Diabetic In Tamil

Diabetes And Nuts: Nuts are good for people with diabetes. In this article, we shared some of the best nuts for diabetes. Read on to know more.
Story first published: Saturday, January 21, 2023, 11:35 [IST]
Desktop Bottom Promotion