For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்க்கரை நோயாளிகள் இந்த உணவுகளை காலையில் சாப்பிடவே கூடாதாம்.. இல்லன்னா உயிருக்கே ஆபத்து ஏற்படுமாம்... உஷார்..

தற்போது காலை உணவாக மக்களிடையே ஏராளமான உணவுகள் பிரபலமாகி வருகின்றன. சர்க்கரை நோயாளிகள் தங்களின் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த விரும்பினால், பின்வரும் 5 உணவுகளை காலை உணவாக உண்பதை அறவே தவிர்க்க வேண்டும்.

|

உலகில் சர்க்கரை நோயால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நாளுக்கு நாள் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் தங்களின் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பிடித்த உணவை சாப்பிடக்கூட ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும். ஏனெனில் சர்க்கரை நோயாளிகளில் உடலில் சர்க்கரை அளவு அதிகம் இருப்பதால், தவறான உணவுகளை உட்கொண்டால், அது இரத்த சர்க்கரை அளவை உயர்த்தி இதய நோய், சிறுநீரக நோய் மற்றும் பல கடுமையான நோய்களின் அபாயத்தை அதிகரித்து உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம்.

Avoid These Worst Breakfast Foods for Diabetics In Tamil

ஒரு நாளில் காலை உணவு மிகவும் இன்றியமையாதது. மேலும் காலையில் சாப்பிடும் உணவானது இரத்த சர்க்கரை அளவையும் பாதிக்கும். குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் காலையில் சாப்பிடும் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தற்போது காலை உணவாக மக்களிடையே ஏராளமான உணவுகள் பிரபலமாகி வருகின்றன. சர்க்கரை நோயாளிகள் தங்களின் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த விரும்பினால், பின்வரும் 5 உணவுகளை காலை உணவாக உண்பதை அறவே தவிர்க்க வேண்டும். அவை என்னவென்பதைக் காண்போம் வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 சர்க்கரை நிறைந்த செரில்கள்

சர்க்கரை நிறைந்த செரில்கள்

செரில்களை ஆரோக்கியமான காலை உணவாக நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால், அது தவறு. அதுவும் சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த செரில்கள் மிகவும் மோசமன உணவு. ஏனெனில் இந்த வகையான உணவுகளில் சர்க்ரை ஏராளமான அளவில் நிறைந்திருக்கும். மேலும் பெரும்பாலான செரில்களில் புரோட்டீன் குறைவாக இருக்கும். எனவே இந்த வகையான செரில்களை அறவே தவிர்ப்பதே நல்லது. வேண்டுமானால், செரில்களுக்கு பதிலாக ஓட்ஸை இரவு நேரத்தில் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அத்துடன் நட்ஸ், விதைகள் மற்றும் சில பழங்களை சேர்த்து சாப்பிடலாம்.

பழச்சாறுகள்

பழச்சாறுகள்

பழச்சாறுகளை பெரும்பாலான மக்கள் ஆரோக்கியமானதாக நினைக்கலாம். ஆனால் சர்க்கரை நோயாளிகளுக்கு பழச்சாறுகள் முற்றிலும் மோசமான பானம். ஏனெனில் பழச்சாறுகள் இரத்த சர்க்கரை அளவை சட்டென்று உயர்த்திவிடும். இதற்கு பழங்களில் இயற்கை சர்க்கரை அதிகளவிலும், நார்ச்த்து குறைவாகவும் இருப்பதே காரணம். எனவே பழச்சாறுகளை குடிப்பதற்கு பதிலாக, முழு பழங்களை சாப்பிடுங்கள். அதுவே நல்லது.

ஃப்ளேவர்டு யோகர்ட்

ஃப்ளேவர்டு யோகர்ட்

யோகர்ட் ஆரோக்கியமானது மற்றும் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. ஆனால் சுவையூட்டப்பட்ட மற்றும் ப்ளேவர்டு யோகர்ட்டுகள் சுவையானதாக இருக்கலாம். ஆனால் அவற்றில் சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட பொருட்கள் அதிகம் இருப்பதால், அவை இரத்த சர்க்கரை அளவை உயர்த்தும். எனவே சர்க்கரை நோயாளிகள் யோகர்ட் சாப்பிட விரும்பினால், வெறும் யோகர்ட்டில் சிறிது விருப்பமான பழங்களை சேர்த்து சாப்பிடுங்கள்.

பேன்கேக்குகள்

பேன்கேக்குகள்

பேன்கேக்குகளை பார்க்கும் போது நாவில் எச்சில் ஊறும். ஆனால் சர்க்கரை நோய் இருந்தால், காலை உணவாக இவற்றை சாப்பிடக்கூடாது. இவற்றில் உள்ள மைதா, மாப்பிள் சிரப், வெண்ணெய் போன்றவை நமது சுவைமொட்டுகளை திருப்திப்படுத்தலாம். ஆனால் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் மோசமான மற்றும் ஆபத்தை ஏற்படுத்தும் உணவுப் பொருள். ஏனெனில் இவற்றில் உள்ள சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் இரத்த சர்க்கரை அளவை சட்டென்று அதிகரிக்கும் மற்றும் இவற்றில் நார்ச்சத்து அல்லது புரோட்டீன் எதுவும் இல்லை. எனவே இந்த உணவை சர்க்கரை நோயாளிகள் அறவே தவிர்க்க வேண்டும்.

ஸ்மூத்தி

ஸ்மூத்தி

சர்க்கரை நோயாளிகள் காலை உணவாக சாப்பிடக்கூடாத மற்றொரு உணவுப் பொருள் தான் ஸ்மூத்திகள். இந்த ஸ்மூத்திகள் நமது வயிற்றை நிரப்பலாம். ஆனால் இந்த ஸ்மூத்திகளில் ஃப்ளேவர்டு யோகர்ட், பழங்கள் மற்றும் சர்க்கரை சேர்க்கப்பட்டிருப்பதால், இவை இரத்த சர்க்கரை அளவை சட்டென்று உயர்த்தும். மேலும் ஸ்மூத்திகளில் ஏராளமான கார்போஹைட்ரேட்டுகளும், குறைவான புரோட்டீன்களும் உள்ளன. எனவே ஸ்மூத்தியை நீங்கள் குடிப்பதற்கு பதிலாக, அவகேடோ, ஆப்பிள், பசலைக்கீரை போன்றவற்றைக் கொண்டு க்ரீன் ஜூஸ் தயாரித்து குடித்து, உங்களின் நாளை தொடங்குங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Worst Breakfast Food Choices to avoid for Diabetics In Tamil

Eating the wrong breakfast foods can have a major impact on your blood sugar levels. Learn which foods to avoid if you have diabetes to keep your blood sugar levels in check.
Desktop Bottom Promotion