சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்த மற்றும் தடுக்க வெந்தயத்தை சாப்பிடும் 5 அற்புத வழிகள்!

Written By:
Subscribe to Boldsky

சர்க்கரை வியாதியைப் பற்றி நிறைய கட்டுரைகள் போல்ட்ஸ்கையில் பாத்திருக்கிறோம். உலகளவில் அதிகமாக சர்க்கரை வியாதி பரவி வரும் நாடுகளில் இந்தியாதான் முதலிடம் வகிக்கின்றது.

அதிலும் 30-45 வயதிற்குள்ளானவர்கள் அதிக அளவு சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.

Benefits and using methods of Fenugreek seeds in Diabetes managments

சர்க்கரை வியாதிக்கு அலோபதி மருந்தை காட்டிலும் இயற்கையான மூலிகைகள் சிறந்த பலனை தரும், அதோடு நாமும் உணவுப்பழக்கங்களிலும், வாழ்க்கை முறையிலும் கட்டுப்பாடோடு வாழ வேண்டும்.

அந்த வகையில் வெந்தயம் சர்க்கரை வியாதிக்கு தரும் அற்புத பலன்களை தெரிந்து வைத்திருப்பீர்கள். ஆனால் அதனை எப்படி உபயோகித்தால் முழுமையான பலன் கிடைக்கும் என தெரியுமா?தொடந்து இந்த் கட்டுரையை படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வழி-1 :

வழி-1 :

வெந்தயத்தை நீரில் 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். . பின்னர் நீரை வடிகட்டி, அந்த நீரில் டீத்தூள் கலந்து தே நீர் தயாரியுங்கள். இதனை தினமும் குடித்தால் அற்புத பலன் கிடைக்கும்.

வழி - 2 :

வழி - 2 :

முதல் நாள் இரவில் வெந்தய்த்தை ஊற வைத்து மறு நாள் வெறும் வயிற்றில் ஊற வைத்த வெந்தயத்துடன் நீரையும் சேர்த்து பருக வேண்டும். ஊற வைக்காமல் வெந்தய்த்தை வெறுமனே சாப்பிடுதல் உடலுக்கு பாதிப்பை தரும்.

வழி- 3 :

வழி- 3 :

வெந்தயத்தை நீரில் ஊற வைத்து ஒரு ஜாரில் போட்டு ஒரு சுத்தமான துணியால் மூடி வைக்கவும், ஓரிரு நாட்களில் முளைகட்டிவிடும். இந்த முளைக்கட்டிய வெந்தயத்தை தினமும் சாப்பிடுவதால் அருமையான பலன்கள் கிடைக்கும்.

வழி -4 :

வழி -4 :

வெந்தய கீரையை பொடியாக நறுக்கி கோதுமை மாவில் பிசைந்து ரொட்டி, சப்பாத்தி அல்லது பராத்தாவாக சாப்பிடலாம்,. இட்லி மாவில் கலந்து வெந்தய இட்லி, வெந்தய தோசையாகவும் சாப்பிடுவதால் நல்ல மாற்றங்களை காண்பீர்கள்.

 வழி -5 :

வழி -5 :

குறைந்த தீயில் வெந்தயத்தை வறுத்து பொடி செய்து கொள்ளுங்கள். இதனை தினமும் 1 ஸ்பூன் பொரியல் மற்றும் சேலட்டின் மீது தூவி சாப்பிடவும்.

வெந்தயத்தின் நன்மைகள் :

வெந்தயத்தின் நன்மைகள் :

சர்க்கரை வியாதியை வராமல் தடுக்கச் செய்யும். கொழுப்பை கட்டுப்படுத்தும். உட்ல எடையை குறைக்கச் செய்யும்.

வெந்தயத்தின் நன்மைகள் :

வெந்தயத்தின் நன்மைகள் :

தாய்ப்பால் சுரக்க வைக்கும். புற்று நோயை தடுக்கும். உடல் சூட்டிய தணிக்கும். ரத்த சோகையை குணமாக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Benefits and using methods of Fenugreek seeds in Diabetes managments

Benefits and using methods of Fenugreek seeds in Diabetes managments
Subscribe Newsletter