For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களுடைய ரத்த தட்டுக்களை அதிகரிக்க நீங்க சாப்பிட வேண்டிய உணவுகள் இதுதான்...

உங்களுடைய ரத்த தட்டுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான உணவுகள் இங்கே பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன.

|

இரத்த தட்டுகளின் எண்ணிக்கை குறைந்து காணப்படுவதை த்ரோபோசிட்டோபெனியா என்று மருத்துவ மொழியில் கூறுகின்றனர். இந்த பிரச்சினையில் இயல்பாக இருக்கும் இரத்த தட்டுகளின் எண்ணிக்கையை விட குறைவாக இருக்கும்.

Home remedies to increase platelet count

ஒரு இரத்த தட்டணுக்களின் வாழ்நாள் வெறும் 5-9 நாட்கள் மட்டுமே ஆகும். இது நமது உடலில் ஏராளமான எண்ணிக்கையில் காணப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 இரத்த அணுக்கள்

இரத்த அணுக்கள்

இரத்த தட்டுகள் இரத்த செல்களில் மிகவும் சிறிய அணுக்களாகும். இது சிவப்பு மற்றும் வெள்ளை அணுக்களை விட சிறியது. காயங்கள் ஏற்படும் போது இரத்தம் அதிகமாக வெளியேறாமல் தடுக்கவும், இரத்தம் உறைதலுக்கும் இது பயன்படுகிறது. ஒரு இரத்த தட்டணுக்களின் வாழ்நாள் வெறும் 5-9 நாட்கள் மட்டுமே ஆகும். இது நமது உடலில் ஏராளமான எண்ணிக்கையில் காணப்படுகிறது.

 காரணங்கள்

காரணங்கள்

இரத்த தட்டுகளின் எண்ணிக்கை குறையும் போது நமது உடலில் அதிகளவு இரத்த இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த இரத்த தட்டுகள் குறைய ஒன்று இரத்த தட்டுகள் அழிந்து விடுதல் அல்லது இரத்த தட்டுகள் உருவாகாமல் இருத்தல் இந்த இரண்டு செயல்களால் இதன் எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கும். இந்த இரண்டு செயல்கள் ஏற்பட கீழ்க்கண்ட காரணங்கள் காரணமாக அமைகின்றன.

அனிமியா, வைரல் தொற்று, லுகோமியா, கீமோதெரபி, அதிகமான ஆல்கஹால் உட்கொள்ளுதல், விட்டமின் பி12 பற்றாக்குறை இதனால் இரத்த தட்டுகள் குறைந்து விடும். மண்ணீரலில் இரத்த தட்டுகள் காணப்படுவது தீவிர கல்லீரல் நோய் அல்லது புற்றுநோயை குறுக்கிறது. ஐடியோபாட்டிக் த்ரோபோசிட்டோபினிக் பார்பரா, த்ரோம்போடிக் த்ரோபோசிட்டோபினிக் பார்பரா, பாக்டீரியல் தொற்று, மருந்து விளைவுகள், ஆட்டோ இம்பினியூ டிஸீஸ் (நோயெதிர்ப்பு ஆற்றல் குறைதல்) போன்றவற்றால் இரத்த தட்டுகள் உடைய ஆரம்பித்து விடும்.

 அறிகுறிகள்

அறிகுறிகள்

இரத்த தட்டுகள் குறைவாக இருந்தால் சோர்வு, பலவீனம், வெட்டுக் காயங்களிலிருந்து நீடித்த இரத்த போக்கு, சரும வடுக்கள், சிறுநீர் மற்றும் மலம் வழியாக இரத்தம் வெளியேறுதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

கீழ்க்கண்ட சில வீட்டு வைத்தியங்கள் இரத்த தட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பயன்படுகிறது.

பப்பாளி மற்றும் பப்பாளி இலைகள்

பப்பாளி மற்றும் பப்பாளி இலைகள்

2009 ஆம் ஆண்டில் ஆசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆசிய நிறுவனத்தால் மலேசியாவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வுப் படி பப்பாளி மற்றும் அதன் இலைகள் இரத்த தட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பயன்படுகிறது. எனவே நீங்கள் தினமும் பழுத்த பப்பாளி பழம் மற்றும் அதன் இலைகளை ஜூஸ் எடுத்து குடித்து வந்தால் உங்கள் இரத்ல தட்டுகளின் அளவு இயல்பு நிலைக்கு வரும். அதே மாதிரி பப்பாளி ஜூஸ் மற்றும் லெமன் ஜூஸ் சேர்த்து குடித்து வாருங்கள். இயல்பு எண்ணிக்கைக்கு வரும் வரை குடியுங்கள்.

பூசணிக்காய் விதைகள்

பூசணிக்காய் விதைகள்

பூசணிக்காய் உடலுக்கு தேவையான புரோட்டீன்களை வழங்குகிறது. இது தான் இரத்த தட்டுகள் உருவாக்கத்திற்கு மிகவும் தேவை. மேலும் பூசணிக்காயில் உள்ள விட்டமின் ஏ இரத்த தட்டுகள் உற்பத்திக்கு உதவுகிறது. எனவே தினமும் பூசணிக்காய் மற்றும் பூசணி விதைகளை உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் இரத்த தட்டுகள் எண்ணிக்கை அதிகரிக்கும்.

லெமன் ஜூஸ்

லெமன் ஜூஸ்

லெமன் ஜூஸில் விட்டமின் சி உள்ளது. இந்த விட்டமின் சி இரத்த தட்டுகளின் உற்பத்திக்கு உதவுகிறது. மேலும் இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது. இதனால் இரத்த தட்டுகள் சீக்கிரம் அழிந்து போவதை தடுக்கிறது.

 நெல்லிக்காய்

நெல்லிக்காய்

நெல்லிக்காயிலும் லெமனில் இருப்பதை போன்று விட்டமின் சி உள்ளது. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இரத்த தட்டுகளின் எண்ணிக்கையை குறைக்கும் நோய்கள் வராமல் தடுக்கிறது.

 பீட்ரூட்

பீட்ரூட்

பீட்ரூட் இரத்த தட்டுகள் உடைவதை தடுத்து அதனள எண்ணிக்கையை உயர்த்துகிறது. எனவே தினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் குடித்தாலே போதும்.

கோதுமை புல்

கோதுமை புல்

யுனிவர்சல் மருந்தகம் மற்றும் உயிர் விஞ்ஞானங்களின் சர்வதேச பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் கோதுமை புல் இரத்த தட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பயன்படுகிறது என்று கூறியுள்ளது. இதற்கு காரணம் இதிலுள்ள குளோரோபைல் மூலக்கூறுகள் வடிவமைப்பு நமது உடலில் உள்ள ஹூமோகுளோபின் வடிவமைப்பை போன்று இருக்கிறது. எனவே தொடர்ந்து 1/2 கப் கோதுமை புல் ஜூஸ் உடன் லெமன் ஜூஸ் சேர்த்து குடித்து வாருங்கள்.

கற்றாழை ஜூஸ்

கற்றாழை ஜூஸ்

கற்றாழை இரத்தத்தை சுத்தப்படுத்தும் வேலையை செய்கிறது. மேலும் இது இரத்த தொற்றை தடுக்கிறது. எனவே கற்றாழை ஜூஸை எடுத்து வந்தால் தொற்றால் ஏற்படும் இரத்த தட்டுகள் குறைவை தடுக்கலாம்.

கீரைகள்

கீரைகள்

கீரைகளில் உள்ள விட்டமின் கே இரத்தம் உறைய பயன்படுகிறது. எனவே காயங்கள் மற்றும் விபத்தால் ஏற்படும் இரத்த இழப்பை தடுக்கிறது. எனவே தினசரி கீரைகளை உணவில் சேர்த்து வந்தால் இரத்த தட்டுகள் எண்ணிக்கை அதிகரிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Home remedies to increase platelet count

here we share food list for increasing blood platelet count level.
Desktop Bottom Promotion