பெண்களுக்கு உடல் எடை குறைய, உடற்பயிற்சி செய்யும் சரியான நேரம் எது தெரியுமா?

Posted By: Bala Karthik
Subscribe to Boldsky

வளர்சிதை மாற்றம் என்பது உண்ணும் உணவை ஆற்றலாய் மாற்றகூடிய ஒரு முறையே ஆகும். நீங்கள் தூங்கும் பொழுது...உங்களுடைய உடம்பில் இருக்கும் செல்களின் சீரமைப்பு பணிக்காகவும், அத்துடன் சுவாசிப்பதற்க்கும் ஆற்றல் என்பது அவசியமாகிறது.

நாம் செய்யகூடிய சில அடிப்படை செயல்களால், ஒரு குறிப்பிட்ட அளவிலான கலோரிகள் அதற்கு தேவைப்படுகிறது. அத்தகைய அடிப்படை செயல்பாடுகளை வளர்சிதை மாற்ற விகிதம் (RMR) என்றழைப்பர். இது எவற்றையும் பாதிக்க வல்லதாகவும், குறிப்பாக இடுப்பின் வரிகளில் தொடங்கி ஆற்றல் மட்டம் வரைக்கும் பாதிப்பினை ஏற்படுத்த கூடியதாகவும் இருக்கிறது.

Best Time Of The Day To Exercise For Women & Metabolism Secrets That Will Help You Blast Calories

ஒவ்வொரு முறை நீங்கள் உணவினை உட்கொள்ளும்போதும், உங்கள் உடம்பு செல்களில் இருக்கும் என்சைம்கள், உணவினை உடைத்து ஆற்றலாக மாற்றுகிறது. வேகமாக நடைபெறும் வளர்சிதை மாற்றத்தால், அதிக அளவில் கலோரிக்கள் எரிவது (Burining) வழக்கமாகிறது.

அவ்வாறு கலோரிகள் அதிகம் எரிவதனால், உங்களுடைய எடையை குறைப்பதும் எளிதாகிறது. உங்களுடைய வளர்சிதை மாற்றத்தினை அதிகரிக்க சில டிப்ஸ், உங்களுக்கு உதவ...அதன் மூலமாக நீங்கள் கடினமென நினைக்கும் எடைகுறைப்பினையும் எளிதாக சாத்தியாமக்க முடிகிறது.

இந்த ஆர்டிக்கலின் மூலமாக, நாம் வளர்சிதை மாற்றத்தின் சில சிறந்த ரகசிய குறிப்புகளை தெரிந்துகொண்டு, எடை குறைப்பது எப்படி? என பார்க்கலாம். இப்பொழுது, சில உயர்ந்த வழிகளை கொண்டு வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து எடையை குறைப்பதனை பற்றி கீழ்க்காணும் பத்தியின் மூலம் படித்து தெரிந்துகொள்ளலாம். அத்துடன், உடற்பயிற்சி செய்ய பெண்களுக்கு உகந்ததோர் நேரம் எது? என்பதனையும் நாம் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 உணவுமுறை பழக்கம்

உணவுமுறை பழக்கம்

நீங்கள் கலோரியை குறைக்க தொடங்கினால், வளர்சிதை மாற்றம் அதனால் மெதுவாக நடக்கிறது. அதனால் கடுமையான கலோரி உட்கொள்ளல் என்பது கண்டிப்பாக நமக்கு நல்லதல்ல. அத்துடன், முறையான உடற்பயிற்சியும் நல்லதோர் விளைவினை நமக்கு தருகிறது.

நாள்பட்ட மனஅழுத்தம்

நாள்பட்ட மனஅழுத்தம்

நீங்கள் அதிகளவில் மனஅழுத்தத்துடன் காணப்படுவீர்களாயின், அது உங்கள் வளர்சிதை மாற்ற முறையை கடை நிலைக்கு தள்ளிவிடும். ஏனென்றால், நாள்பட்ட மனஅழுத்தம் ஒருவருக்கு ஏற்பட, பீடாட்ரோபின் உருவாக்கத்தை அது தூண்டுகிறது. அதாவது புரத சத்தானது, என்சைமை தடுத்து கொழுப்பையும் குறைக்கிறது.

இடைவிடாது விரதம் இருப்பது உதவும்:

இடைவிடாது விரதம் இருப்பது உதவும்:

ஒரு நாள் விட்டு விரதம் இருப்பதை தான் இடைவிடாது விரதம் இருப்பது என அழைக்கபடுகிறது. இதனால் உங்களுடைய கலோரி குறைகிறது. எந்த ஒரு தங்குதடையுமின்றி ஒரு நாள் நாம் நன்றாக உண்ண, அதனால் மறு நாளில் நம் உடம்பில் 500 கலோரிகள்...உணவிலிருந்து இவை எடுத்துகொள்வது, நம்முடைய வளர்சிதை மாற்றத்துக்கு பெரும் துணைபுரிய வல்லதாகும்.

சரியான முறையில் எடைத்தூக்குதல்:

சரியான முறையில் எடைத்தூக்குதல்:

நீங்கள் எடையினை தூக்கும்பொழுது, அந்த எடையினை மெதுவாக மேலே கொண்டு செல்ல வேண்டியது அவசியமாகும்.

அதேபோல், ஒவ்வொரு செட்களின் இடையிலும் 2 லிருந்து 3 நிமிட ஓய்வு நமக்கு தேவைப்படுகிறது. அது உங்கள் தசை வளர்ச்சியினை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது. இது வளர்சிதை மாற்றத்தையும் வேகமாக்க உதவுகிறது.

புரதசத்து அவசியமாகும்:

புரதசத்து அவசியமாகும்:

உங்கள் உடம்பில் அதிகளவில் தசை இருக்குமாயின், கலோரிகளும் அதிகமாகவே எரிகிறது. தசை வளர்ச்சிக்கு புரதசத்து என்பது மிகவும் அவசியமாகும்.

இது உங்களுடைய தசை திசுக்கள் தடைபடுவதனை தடுத்து கலோரி குறைவதனையும் போக்குகிறது. மேலும் இதன்மூலமாக, எப்படி வளர்சிதை மாற்றமானது அதிகரித்து, உடை எடையை குறைக்க முடியும் என்பதனையும் நமக்கு உணர்த்துகிறது.

வேகமாக கலோரி எரிய :

வேகமாக கலோரி எரிய :

காலை 6 மணிக்கு உடற்பயிற்சி செய்வதன் மூலமாக 20 சதவிகித உடல் கொழுப்பு எரிகிறது. அதன் பிறகு, 7.30 மணிக்கு புரதசத்தும், காலை 11 மணிக்கு., நாம் 17அவுன்ஸ் தண்ணீரை குடிக்க, அது உங்கள் வளர்சிதை மாற்றத்தின் முறையை வேகமாக்க உதவுகிறது.

இந்த முறையை தினசரி நாம் செய்துவர...அது உங்கள் வளர்சிதை மாற்றத்தினை அதிகரிக்க செய்து ஆற்றலையும் அளிக்கிறது.

உடல் நலப்பிரச்சனைகளால் பாதிக்கப்படும் வளர்சிதை மாற்றம்:

உடல் நலப்பிரச்சனைகளால் பாதிக்கப்படும் வளர்சிதை மாற்றம்:

தைராய்டு கோளாறுகள், முன் நீரிழிவு பிரச்சனை (ப்ரீ டையாபிட்டிஸ்), கீல்வாதம், பாலிசிஸ்டிக் கருப்பை நோய்க்குறி ஆகிய உடல் நல பிரச்சனைகளால் வளர்சிதை மாற்றம் பாதிக்கப்படுகிறது.

‘க்ரீன் டீ’க்கு மாறுங்கள்:

‘க்ரீன் டீ’க்கு மாறுங்கள்:

இதில் காணப்படும் ‘கேட்டசின்கள்' எனப்படும் செயல்படும் மூலப்பொருள், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க பயன்படுகிறது. அதனால், நாம் க்ரீன் டீயை எடுத்துகொள்வதன் மூலம், உடை எடை குறைப்பினை சாத்தியமாக்க முடிகிறது. அத்துடன், தினசரி பானங்கள் அருந்துவதும் நன்மை பயக்கும்.

காலை உணவை மறக்காமல் தினமும் உண்ண வேண்டும்:

காலை உணவை மறக்காமல் தினமும் உண்ண வேண்டும்:

ஊட்டசத்து நிறைந்த காலை உணவை, தூங்கி எழுந்தவுடன் சரியாக எடுத்துகொள்வது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. உங்களுடைய உடலென்னும் இயந்திரம், எந்த வித பிரச்சனையுமின்றி சரியாக இயங்க, இந்த காலை உணவு நமக்கு உதவுகிறது.

 இப்பொழுது, உடற்பயிற்சி செய்ய உகந்ததோர் நேரம் எவை என்பதனை நாம் பார்க்கலாம்:

இப்பொழுது, உடற்பயிற்சி செய்ய உகந்ததோர் நேரம் எவை என்பதனை நாம் பார்க்கலாம்:

போலிக்குலர் கட்டத்தில் ஓடுவது பற்றி:

இந்த கட்டம், முடிவடையும் நாளில் தொடங்குகிறது. இந்த கட்டத்தில், ஓடுவது அல்லது நாளின் நடுவில் இதய பயிற்சி செய்வது நல்லதாகும்.

ஓவுலேட்டிங்கின் போது ஆரம்பகாலத்தில் உடற்பயிற்சி செய்தல்:

ஓவுலேட்டிங்கின் போது ஆரம்பகாலத்தில் உடற்பயிற்சி செய்தல்:

இந்த கட்டத்தின் போது அதிகளவில் நமக்கு ஆற்றல் இருக்கிறது. அதனால், இத்தகைய நிலையில் சீக்கிரமெழுந்து. காலை உடற்பயிற்சிகளை, அண்டவிடுப்பின் (ஓவுலேசன்) போது செய்வது அதிக ஆற்றலை நமக்கு அளித்து எளிதாக்குகிறது.

 பிலேட் உடற்பயிற்சி முறைகளை லூட்டல் கட்டத்தின்போது செய்வது:

பிலேட் உடற்பயிற்சி முறைகளை லூட்டல் கட்டத்தின்போது செய்வது:

இந்த கட்டத்தில், வீங்கியதோர் உணர்வினை நீங்கள் அடைவீர்கள். அதனால், பிலேட் பயிற்சி செய்வது அல்லது வலிமைக்கான பயிற்சியை செய்வது, இந்த கட்டத்தில் அவசியமாகிறது.

மாதவிடாய் பருவத்தின்போது நடந்து செல்வது நல்லதாகும்:

மாதவிடாய் பருவத்தின்போது நடந்து செல்வது நல்லதாகும்:

உங்கள் மாதவிடாய் பருவகாலத்தில், நீங்கள் நடப்பது போன்ற மிதமான உடற்பயிற்சியை செய்ய வேண்டியது அவசியமாகிறது. இந்த நேரத்தில் நம்மால் நடக்க எளிதாகவும் உணர்வதோடு...உங்களுடைய உடலும் உங்களுக்கு நன்றி சொல்லும் என்பதில் எத்தகைய சந்தேகமும் வேண்டாமே.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Best Time Of The Day To Exercise For Women & Metabolism Secrets That Will Help You Blast Calories

Best Time Of The Day To Exercise For Women & Metabolism Secrets That Will Help You Blast Calories
Story first published: Tuesday, June 13, 2017, 8:00 [IST]