For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஓணம் பண்டிகைக்கு கேரளா புடவை கட்ட ரெடி ஆகிட்டீங்களா? அப்போ இத படிங்க.

பெண்கள் ஓணம் சாரீயுடன் சில ட்ரெண்ட் ஆன விஷயங்களை சேர்த்து தங்களை அழகு படுத்த விரும்புகிறார்கள். எனவே இந்த நவநாகரீக பெண்களுக்கான சில ட்ரெண்டிங் டிப்ஸ். பாரம்பரிய கசாவ் தோற்றம் இது தான் ஓணம் பண்டிகையின

|

ஓணம் வந்து விட்டாலே அனைவர்க்கும் மகிழ்ச்சி தான். என்னதான் தமிழ்நாட்டில் ஓணம் பண்டிகை கொண்டாடவில்லை என்றாலும் கல்லூரிகளிலும் அலுவலங்களிலும் ஓணம் பண்டிகை அன்று பெண்கள் ஓணம் சாரீ அணிந்து மகிழ்ச்சியோடு செல்கிறார்கள். ஓணம் சாரீ என்றாலே எல்லா பெண்களுக்கும் இஷ்டம் தான். கேரளாவில் இந்த ஓணம் சாரீ பாரம்பரியமாக பின்பற்றி வரும் பழக்கமாகும்.

Dressing Tips for the Festival of Onam

என்னதான் பாரம்பரியமாக இருந்தாலும் பெண்கள் தற்போது ஓணம் சாரீயுடன் சில ட்ரெண்ட் ஆன விஷயங்களை சேர்த்து தங்களை அழகு படுத்த விரும்புகிறார்கள். எனவே இந்த நவநாகரீக பெண்களுக்கான சில ட்ரெண்டிங் டிப்ஸ் இதோட சேர்த்து உங்க ஓணம் பண்டிகையை கொண்டாடுங்க.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஓணம் புடவை

ஓணம் புடவை

ஓணம் புடவை பாரம்பரிய கசாவ் என்று அழைக்கப்படுகிறது. பாரம்பரிய கசாவ் தோற்றம் இது தான் ஓணம் பண்டிகையின் மிக எளிமையான ஒன்று. ஆனால் மிகவும் அழகானது. பெண்கள் ஓணம் சாரீ அணிந்தாலே அழகு தான். ஒரு வெண்மை நிற கேரள புடவை அதன் ஓரத்தில் தங்க ஜாரி கொண்டு அழகு படுத்தப்பட்டு இருக்கும். இந்த பாரம்பரிய புடவையை அணிந்து காசுமாலை அல்லது நாணய நெக்லஸ் அத்துடன் மின்னும் தங்க நிற காதணிகளுக்கு ஈடே இல்லை.

MOST READ: கருப்பு கலர் புடவை கட்டி விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய கஜோல்

முண்டு

முண்டு

முண்டு இது பாப் கசாவ் என்று அழைக்கப்படுகிறது. நீங்கள் ஓணம் புடவை அல்லது முண்டு எது வேண்டுமோ அணியலாம். முண்டுகளின் எல்லைகளில் ஒரு குறிப்பிட்ட நிறத்தால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும். அந்த நிறத்திற்கு ஈடாக ரவிக்கை தேர்வு செய்து அணிந்து கொள்ளுங்கள். இதற்கு தங்க நெக்லஸ், காதணிகள் மற்றும் வளையல்கள் போன்றவற்றை நீங்கள் அணியலாம். இது உங்களின் தோற்றத்தை மேம்ப்படுத்தும்.

நகைகள்

நகைகள்

உங்களுக்கு நகைகள் மீது ஈடுபாடு அதிகமென்றால் ஓணம் புடவையை அணிந்து நெக்லஸ், மரகதங்கள் அல்லது வண்ண கற்கள் நிறைந்த மாலைகள் அத்துடன் மேட்ச்சாக காதணிகள் மற்றும் மாணிக்கங்களினால் ஆன வளையல்கள் ஆகியவற்றால் உங்களை அலங்கரியுங்கள். எல்லார் கண்களையும் கவர்ந்து விடுவீர்கள்.

MOST READ: அனார்க்கலியில் அசத்திய நடிகை தமன்னா எங்க போனாங்க.

நவீன ஓணம்

நவீன ஓணம்

ஓணம் புடவையுடன் அதற்கு பொருந்துமாறு ஒரு கோல்டன் நிற ரவிக்கையை அணியுங்கள். இதற்கு ஈடு வேற எதுமே இல்லை. இப்போது ட்ரெண்டிங்கில் இருப்பதே கழுத்தில் எந்தவித அணிகலன்களும் அணியாமல் இருப்பதே ஆகும். எனவே நீங்கள் உங்கள் கழுத்தில் எந்த வித அணிகலனும் அணியாமல் தங்கம் மற்றும் வெள்ளை கற்கள் அல்லது முத்துகள் கொண்ட பெரிய காதணிகளை அணிந்து உங்கள் பேஷனை இந்த ஓணம் அன்று எல்லோருக்கும் வெளிப்படுத்துங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Dressing Tips for the Festival of Onam

The Kasavu Sarees are the must wear ethnic attires for the onam. Traditionally, women dress up with these sarees and cherish the moment. However, these days, women also tend to add some trendy twist to the ethnic ensemble. So if you are someone wishing to celebrate the harvest festival with style, here are some ideas for you.
Story first published: Friday, September 6, 2019, 17:59 [IST]
Desktop Bottom Promotion