நவராத்திரிக்கு அணிய வேண்டிய 5 ஜங்க் ஜூவல்லரி என்ன எனத் தெரியுமா ?

By: R. SUGANTHI Rajalingam
Subscribe to Boldsky

துர்கா பூஜையை விட்டா வேற எந்த கொண்டாட்டத்திற்கும் அந்த அளவுக்கு ஜூவல்லரி அணிந்து செல்வது மிகவும் அரிது. அதே நேரத்தில் அந்த ஜூவல்லரி ஸ்டைலிஸ்ஸாகவும் புதிய ட்ரெண்ட்டாக இருப்பதும் முக்கியம்.

குறிப்பாக பெங்காலி பெண்கள் மற்ற கொண்டாட்டத்தை விட இந்த துர்கா பூஜை கொண்டாட்டத்திற்கு தங்களது அழகுக்கு அதிகமாகவே முக்கியத்துவம் கொடுப்பர்.

உங்களுடைய ஆடைகளுக்கு தகுந்த மாதிரி ஜூவல்லரி அணிவதும் உங்கள் அழகில் மிகவும் முக்கியம்.

நம்முடைய பாரம்பரிய ஜூவல்லரியை காட்டிலும் ஜங்க் ஜூவல்லரி புதிய ட்ரெண்ட்டாக வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்த ஜூவல்லரி நிறைய நன்மைகளையும் கொண்டுள்ளது. இது மிகவும் லேசாக, எடுத்து செல்ல சுலபமாக, குறைந்த விலையுடனும் இருப்பதால் இது அதிகமாக திருடு போகவும் வாய்ப்பில்லை.

சரி வாங்க உங்கள் ஆடைகளுக்கு தகுந்த வெவ்வேறு வகையான ஜங்க் ஜூவல்லரி பற்றி பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆப்கானி ஜூவல்லரி

ஆப்கானி ஜூவல்லரி

ஆப்கானி ஜூவல்லரி தான் துர்கா பூஜைக்கான டாப் ஜூவல்லரியாக இருக்கிறது. இது வெறும் ட்ரெண்ட்டாக மட்டும் இல்லாமல் பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கும். கிளாசிக் லுக்குடன் லேசான கனத்துடனும் இருக்கும். இந்த துர்கா பூஜைக்கு இந்த ஜூவல்லரியை கண்டிப்பாக வாங்கிக் கொள்ளுங்கள்.

ட்ரைபல் ஜூவல்லரி

ட்ரைபல் ஜூவல்லரி

இந்த ஜூவல்லரி பெங்காலி பெண்களுக்கு மிகவும் பிடித்தமான நகை ஆகும். போகிமியான் ஸ்டைலான ஆடைகளுக்கு இந்த ஜூவல்லரி பொருத்தமாக இருக்கும். இது சான்தினிகீட்டான் ஸ்டைலில் அட்டகாசமான அழகை கொடுக்கும். இந்த ஸ்டைல் தான் பெரும்பாலான பெங்காலி பெண்கள் ஆசைப்படுவர். என்னங்க இந்த ட்ரைபல் ஜூவல்லரி இல்லாமல் துர்கா பூஜையில் கலந்து கொள்ளாதிங்க.

டெரஹோட்டா ஜூவல்லரி

டெரஹோட்டா ஜூவல்லரி

டெரஹோட்டா ஆர்ட் ஜூவல்லரி பெங்காலிகளின் பாரம்பரிய வடிவமைப்பு பெற்ற ஜூவல்லரி ஆகும். அதில் வடிவமைக்கப்பட்ட டிசைனால் பெங்காலி பெண்கள் அதை விரும்பி அணிகின்றனர். இது உங்கள் துர்கா பூஜைக்கான முதன்மையான ஜூவல்லரி ஆகும்.

போகிமியான் அல்லது உங்கள் பாரம்பரிய ஆடைகளுக்கு இந்த டெரஹோட்டா ஜூவல்லரி பொருத்தமாக இருக்கும். இதில் கலர்புல்லான ஜூவல்லரி என்றால் நீங்களும் கலர்புல்லாக மாறிவிடுவீர்கள்.

தோக்ரா ஜூவல்லரி

தோக்ரா ஜூவல்லரி

தோக்ரா ஜூவல்லரி என்பது ட்ரைபல் ஆர்ட் நிறைந்த மற்றொரு வடிவமைப்பு ஆகும். பெங்காலி பெண்களுக்கு இது மிகவும் ஸ்பெஷலான ஜூவல்லரி ஆகும். பெங்காலியுள்ள தோக்ரா டமார் பழங்குடியினர் பாரம்பரிய உலோகத்தை கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த ஜூவல்லரியை அணிகின்றனர்.

இந்த ஜூவல்லரி புடவை, சல்வார் மற்றும் ஸ்கேட்ஸ் போன்றவற்றிற்கு பொருத்தமாக இருக்கும். என்னங்க இந்த ஜூவல்லரி இல்லாமல் உங்கள் துர்கா பூஜை முடிவடையாது அல்லவா.

ஃவெதர்ஸ்

ஃவெதர்ஸ்

இந்த ஜூவல்லரி எல்லாருக்கும் பிடித்தமான ஒன்றாகும். ஏனெனில் லேசான கவனத்துடன் பார்ப்பதற்கும் அணிவதற்கும் கலர்புல்லான வண்ணங்களுடன் கிடைக்கிறது. இந்த ஜூவல்லரியை உங்கள் உடைக்கு தகுந்த மாதிரி கலர்புல்லாக அணிந்தால் தான் நன்றாக இருக்கும்.

இல்லையென்றால் ரெம்ப மங்கிய நிலையில் காணப்படும். இது உங்கள் வெஸ்டர்ன் மற்றும் பாரம்பரிய ஆடைகள் இரண்டுக்குமே பொருத்தமாக இருக்கும். எல்லா வயதினருக்கும் ஏற்றதாக இருக்கும். என்னங்க உங்கள் கலர்புல்லான ஜூவல்லரி கலெக்ஷனுக்கு ரெடியாயிட்டிங்களா.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

5 Types Of Junk Jewellery To Go For During Durga Puja 2017

5 Types Of Junk Jewellery To Go For During Durga Puja 2017
Story first published: Friday, September 15, 2017, 15:20 [IST]
Subscribe Newsletter