For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்க 'இந்த' உணவுகளை மட்டும் சாப்பிட்டீங்கனா... ஹீரோயின் மாதிரி ஜொலிக்கும் சருமத்தை பெறுவீங்களாம்!

ஆரோக்கியமான சிற்றுண்டி உள்ளிட்ட ஆரோக்கியமான வாழ்க்கை முறை, ஒருவரின் சரும ஆரோக்கியத்தை உயர்த்தும் என்ற கருத்தை வலுவாக ஏற்றுக்கொள்வதாக ஆய்வு முடிவுகள் கூறுகிறது.

|

பளபளப்பான மற்றும் பொலிவான சருமத்தை யார்தான் விரும்பமாட்டார்கள்? வளர்ந்து வரும் நவீன உலகில் தோல் ஆரோக்கியத்துடன் ஊட்டச்சத்து எவ்வாறு நெருக்கமாக தொடர்புடையது என்பதை நாடு முழுவதும் உள்ள பெண்கள் அறிந்திருக்கிறார்கள். நாம் உண்ணும் உணவு, நமது சருமத்திற்குப் பயன்படுத்தப்படும் பொருட்களைப் போலவே (அதிகமாக இல்லாவிட்டால்) முக்கியமானது. நீங்கள் சாப்பிடுவது உங்கள் சருமத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது உங்களுக்கு தெரியுமா? நீங்கள் சர்க்கரை மற்றும் வறுத்த உணவுகளை சாப்பிட்டால், சில நாட்களில் முகப்பருவை சந்திக்க நேரிடும். மறுபுறம், நீங்கள் சுத்தமான உணவு, பழங்கள், நட்ஸ்கள் சாப்பிட்டால், போதுமான தண்ணீர் குடித்தால், உங்கள் சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.

foods-to-better-skin-health-in-tamil

ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் தினசரி உணவுக்கான இயற்கையான மாற்று வழிகளில் நுகர்வோரின் விருப்பங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை சமீபத்திய ஆய்வில் தெரிந்துகொள்ளலாம். நீங்கள் உண்ணும் உணவு உங்கள் சருமத்தை பொலிவாக மாற்றுகிறது. சிறந்த சரும ஆரோக்கியத்தை பெறுவதற்கு இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள உணவை உண்ணுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆய்வின் விவரங்கள்

ஆய்வின் விவரங்கள்

டிசம்பர் 7ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை யூகோவ் என்ற ஆராய்ச்சி ஆலோசனை நிறுவனத்தால் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வின்படி, இந்தியாவில் 72% பெண்கள் ஆரோக்கியமான உணவுமுறை மாற்றங்களை அழகாக தோற்றமளிக்கும் தோலுக்கு முக்கியமான படியாகக் கருதுகின்றனர் என தெரிவிக்கிறது. யுகோ இன் அளவு ஆய்வு அழகுக்கும் சிற்றுண்டி உணவுக்கும் இடையே உள்ள தொடர்பை மதிப்பிடுவதையும், அழகு நலன்களுக்கான பெண்களின் சிற்றுண்டி முறைகளைப் புரிந்துகொள்வதையும் நோக்கமாகக் கொண்டது. டெல்லி, லக்னோ, லூதியானா, ஜெய்ப்பூர், இந்தூர், கொல்கத்தா, புவனேஷ்வர், மும்பை, அகமதாபாத், புனே, பெங்களூர், கோயம்புத்தூர், ஹைதராபாத் மற்றும் சென்னை போன்ற நகரங்களில் 3,959 பெண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

ஆய்வின் முடிவுகள்

ஆய்வின் முடிவுகள்

ஆய்வின் முடிவுகளின்படி, இந்தியாவில் உள்ள 80% பெண்கள், மேற்பூச்சு தோல் பராமரிப்புப் பொருட்களைப் பயன்படுத்துவதை விட ஆரோக்கியமாக இருப்பதன் மூலம் அழகு பிரகாசிக்கும் என்று கருதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பதிலளித்தவர்களில் பெரும்பாலோர் ஆரோக்கியமான உணவைக் கொண்டிருப்பதுடன், தேவைப்படும்போது ஓய்வெடுப்பது மற்றும் உடற்பயிற்சி செய்வது ஒரு சீரான வாழ்க்கை முறைக்கு முக்கியமாகும் என்று கருதுகின்றனர். இதன் மூலம் ஆரோக்கியமான சருமத்தை அடைய முடியும் என்று கூறுகிறார்கள்.

பழங்கள் மற்றும் பாதம்

பழங்கள் மற்றும் பாதம்

ஒட்டுமொத்தமாக, பெரும்பாலான பெண்கள் பாதாம் மற்றும் பழங்கள் போன்ற ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவு வகைகளை சிற்றுண்டியை விரும்புகிறார்கள் என்று ஆய்வு முடிவுகள் குறிப்பிடுகின்றன. ஏனெனில், குறிப்பாக பழங்கள் மற்றும் பாதாம்களில் உங்கள் சருமத்திற்கு நன்மைகளை அளிக்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவற்றை எடுத்துக்கொள்ளும்போது, உங்கள் சருமம் ஒளிர தொடங்குகிறது.

பாதாமின் நன்மைகள்

பாதாமின் நன்மைகள்

ஆரோக்கியமான உணவைப் பராமரிப்பதில், பெரும்பாலான பெண்கள் வீட்டு உணவுகள், நார்ச்சத்து நிறைந்த உணவு மற்றும் பாதாம் போன்ற பருப்புகளை சாப்பிடுவதன் மூலம் அழகான சருமத்தை அடைவதன் விளைவாக பலன்களைப் பார்க்கிறார்கள். சிறந்த தோல் ஆரோக்கியத்துடன் வைட்டமின் ஈயை இணைப்பதால், இந்தியப் பெண்களிடையே பாதாம் ஒரு சிறந்த தேர்வாக உருவெடுத்துள்ளது. பாதாம் வைட்டமின் ஈ நிறைந்த ஆதாரமாக உள்ளது. எனவே, பாதாம் அனைத்து பருப்புகளைவிட இந்த அம்சத்தில் மிக உயர்ந்த இடத்தில் உள்ளது. தவிர, 59% பெண்கள் தினமும் பாதாம் பருப்பை பெரும்பாலும் ஊறவைத்தோ அல்லது பச்சையாகவோ உட்கொள்கிறார்கள் என்பதை ஆய்வு எடுத்துக்காட்டுகிறது. இது பாதாமை மிகவும் வழக்கமாக உட்கொள்ளும் நட்ஸ் ஆக்குகிறது.

பெண்கள் மத்தியில் பிரபலமானது

பெண்கள் மத்தியில் பிரபலமானது

30-39 வயதிற்குட்பட்ட பெண்கள், சரும சுருக்கங்களைக் குறைத்தல், தோல் பளபளப்பு மற்றும் சருமப் பாதுகாப்பு போன்ற அம்சங்களில் பாதாம் பருப்பை அதிகம் மதிப்பிடுகின்றனர். அதேசமயம், ஜெனரல் எக்ஸ் பாதாம் பருப்புகளை சுருக்கங்களைக் குறைப்பதோடு மிகவும் தொடர்புபடுத்துகிறது. பாதாம் பருப்பைச் சாப்பிட்ட பிறகு தோலில் நேர்மறை விளைவுகள் கிடைப்பதாக கூறும் இந்த மதிப்பீடு அவர்களின் தனிப்பட்ட அனுபவத்தால் வலுப்படுத்தப்படுகிறது. உண்மையில், 6 மாதங்களுக்கும் மேலாக பாதாமை உட்கொள்பவர்கள், சமீபகாலமாக பாதாமை உட்கொள்ளத் தொடங்கியவர்களைக் காட்டிலும், சரும பளபளப்பு மற்றும் இளமையான சருமம் போன்ற நேர்மறையான தாக்கங்களைப் பெற்றதாக கூறுகிறார்கள்.

தோல் நிபுணர்கள் கூறுவது

தோல் நிபுணர்கள் கூறுவது

சரியான ஊட்டச்சத்து மற்றும் தோல் ஆரோக்கியம் ஆகியவற்றுக்கு இடையேயான உறவைப் பற்றி இந்தியப் பெண்களிடையே வளர்ந்து வரும் விழிப்புணர்வை இந்த ஆய்வு மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. தோல் பராமரிப்புப் பொருட்களின் மேற்பூச்சு பயன்பாட்டிற்கு கூடுதலாக ஆரோக்கியமான உணவுத் தேர்வுகளின் அவசியத்தை நிபுணர்கள் எப்போதும் வலியுறுத்திக்கிறார்கள். உதாரணமாக, ஒவ்வொரு நாளும் ஒரு கையளவு பாதாம் சாப்பிடுவது வைட்டமின் ஈ மற்றும் பிற ஆக்ஸிஜனேற்றங்களை அதிகரிக்கிறது. இது சரும செல்கள் உட்பட செல்களை ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது மற்றும் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது.

தினசரி உட்கொள்ள வேண்டும்

தினசரி உட்கொள்ள வேண்டும்

பாதாமில் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் மற்றும் பாலிபினால்கள் ஆகியவை சருமத்தில் வயதான விளைவுகளை எதிர்த்துப் போராட உதவும் என்று கருதப்படுகிறது. மாதவிடாய் நின்ற பெண்களின் முகச் சுருக்கங்கள் மற்றும் தோலின் தொனியை மேம்படுத்துவதற்கு வழக்கமான கலோரிக்கு ஏற்ற சிற்றுண்டிக்குப் பதிலாக தினமும் பாதாம் சாப்பிடுவது ஒரு சிறந்த வழியாகும் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சருமத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை ஆதரிக்க பெண்கள் சில பாதாம் பருப்புகளை தினசரி தோல் பராமரிப்பு வழக்கத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கும்

சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கும்

ஆரோக்கியமான சிற்றுண்டி உள்ளிட்ட ஆரோக்கியமான வாழ்க்கை முறை, ஒருவரின் சரும ஆரோக்கியத்தை உயர்த்தும் என்ற கருத்தை வலுவாக ஏற்றுக்கொள்வதாக ஆய்வு முடிவுகள் கூறுகிறது. பாதாம் ஆக்ஸிஜனேற்ற வைட்டமின் ஈ-இன் வளமான ஆதாரமாக அறியப்படுகிறது மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் மற்றும் பாலிபினால்களை வழங்குகின்றன. இது அவற்றை ஒரு சிறந்த தேர்வாக ஆக்குகிறது. பாதாம் முகச் சுருக்கங்கள் மற்றும் தோலின் தொனியை மேம்படுத்த உதவும் என்று சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

இறுதி குறிப்பு

இறுதி குறிப்பு

காலப்போக்கில், மக்கள் தங்கள் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து குறித்து அதிக விழிப்புணர்வு பெற்றுள்ளனர். இந்தியப் பெண்கள் தங்கள் தோற்றத்தைப் பற்றிக் கவலைப்படுவதாகவும், ஆரோக்கியமாக இருக்க என்ன சாப்பிடுகிறார்கள் என்பதில் கவனம் செலுத்துவதாக இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆய்வின் படி, ஆரோக்கியமான உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சி மற்றும் தூக்கம் ஆகியவை ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான சருமத்திற்கு சரியான செயல்முறையாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods to better skin health in tamil

Here we are talking about the Food for skin: Snack on this food for better skin health in tamil.
Desktop Bottom Promotion