For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கேரள பெண்கள் சும்மா கும்முன்னு வசீகரிக்கும் அழகுடன் இருக்க என்ன காரணம் தெரியுமா? அப்ப இத படிங்க...

கேரளா பெண்களுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. ஏனெனில் கேரள பெண்கள் கொழுகொழுவென்று, நீளமான கூந்தலுடனும், அழகிய பெரிய கண்களுடனும், மினுமினுக்கும் மென்மையான சருமத்துடன் பளிச்சென்று இருப்பார்கள்.

|

பச்சை பசேலென பசுமையான பகுதிகள், தோட்டங்கள், அட்டகாசமான நீர்வீழ்ச்சிகள், நீர்நிலைகள், அற்புதமான வனவிலங்குகள் மற்றும் கண்கவர் கடற்கரைகள் ஆகியவற்றால் ஆசீர்வதிக்கப்பட்ட இயற்கை வளங்கள் நிறைந்த இந்தியாவில் உள்ள மிகச்சிறந்த இடங்களுள் ஒன்று தான் கேரளா. பலருக்கும் கேரளா என்றதும் மேலே சொன்ன விஷயங்களுடன், மிகவும் அழகாக சிக்கென்ற உடலுடன் இருக்கும் பெண்களும் தான்.

Amazing Beauty Secrets Of Keralites Women In Tamil

சொல்லப்போனால் கேரளா பெண்களுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. ஏனெனில் கேரள பெண்கள் கொழுகொழுவென்று, நீளமான கூந்தலுடனும், அழகிய பெரிய கண்களுடனும், மினுமினுக்கும் மென்மையான சருமத்துடன் பளிச்சென்று இருப்பார்கள். சரி, கேரள பெண்கள் இவ்வளவு அழகாக இருப்பதற்கு பின் ஒருசில ரகசியங்கள் உள்ளன. அது என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? அது வேறொன்றும் இல்லை, இவர்களின் பாரம்பரிய பழக்கங்களும், அவர்கள் மேற்கொள்ளும் சில அழகு பராமரிப்புக்களும் தான். இப்போது அவை என்னவென்பதைக் காண்போம் வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாதாம் மற்றும் ஆலிவ் ஆயில்

பாதாம் மற்றும் ஆலிவ் ஆயில்

கேரளாவில் பெண்கள் ஆலிவ் ஆயில் மற்றும் பாதாம் ஆயிலை அன்றாடம் பயன்படுத்துவார்கள். இந்த எண்ணெயில் புரோட்டீன்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளன. இந்த எண்ணெய்கள் பல்வேறு சரும மற்றும் கூந்தல் பிரச்சனைகளைத் தடுக்க உதவுகின்றன. அதோடு இவை சரும நிறத்தை மேம்படுத்துவதுடன், சருமத்தை சுத்தமாகவும் பொலிவாகவும் வைத்துக் கொள்ள உதவுகின்றன. மேலும் இந்த எண்ணெய்கள் சரும சுருக்கங்கள் மற்றும் முகத்தில் இருக்கும் முதுமைக் கோடுகளைக் குறைக்கக்கூடியவை. அதற்கு தினமும் பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயிலை உடல் முழுவதும் தேய்த்து 30-40 நிமிடம் ஊற வைத்து, பின் குளிக்க வேண்டும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

கேரள பெண்களின் அடர்த்தியான நீளமான கூந்தலுக்கு முக்கிய காரணம் தேங்காய் எண்ணெய் அல்லது பிராமி எண்ணெய் தான். அதோடு அவர்கள் தேங்காய் எண்ணெயில் மருதாணி இலைகளைப் போட்டு கொதிக்க வைத்து, அந்த எண்ணெயை தினமும் தலைக்கு தடவுவார்கள். இந்த எண்ணெய் தலைமுடி நன்கு அடர்த்தியாக வளர உதவும். மேலும் தலைக்கு எண்ணெய் தடவிய பின், சிறிது நேரம் தலையில் மசாஜ் செய்வார்கள். இப்படி செய்வதால், தலையில் இரத்த ஓட்டம் அதிகரித்து முடி நன்கு வளர்வதோடு, மன அழுத்தமும் குறையும்.

நல்பமரடி எண்ணெய்

நல்பமரடி எண்ணெய்

நல்பமரடி எண்ணெய் என்பது நல்பமரத்தின் பட்டையுடன், நல்லெண்ணெய் மற்றும் சில மூலிகைகளின் சாறுகள் நிறைந்த எண்ணெயாகும். இது சருமத்தின் நிறத்தை மேம்படுத்துவதற்கும், சருமத்தை மென்மையாக்குவதற்கும், சருமம் வறட்சியடையாமல் இருப்பதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதற்கு இந்த எண்ணெயை சருமத்தில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் பாசிப்பயறு மாவு பயன்படுத்தி கழுவ வேண்டும். கேரள பெண்களின் அழகின் முக்கிய ரகசியங்களுள் இதுவும் ஒன்று.

கும்குமடி தைலம்

கும்குமடி தைலம்

கும்கமடி தைலம் என்பது டாஷ்மூலா, நல்லெண்ணெய் மற்றும் ஆட்டுப் பால் ஆகியவற்றை உள்ளடக்கிய மூலிகை குங்குமப்பூ எண்ணெய். இது கேரள பெண்களால் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் ஒரு எண்ணெய். இந்த எண்ணெயின் 3-5 துளிகளை முகத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, சுடுநீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி தினமும் 2-3 முறை என ஒரு வாரம் தொடர்ந்து பின்பற்றி வந்தால், முகத்தில் உள்ள பருக்கள், தழும்புகள், முகப்பரு பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுவதோடு, சரும நிறமும் பொலிவும் மேம்படும்.

உதடுகளுக்கு வெண்ணெய்

உதடுகளுக்கு வெண்ணெய்

குளிர்காலத்தில் பெரும்பாலானோர் உதடு வெடிப்புக்களை சந்திப்போம். ஆனால் கேரள பெண்கள் முகச்சருமத்தை விட உதடுகள் மிகவும் மென்மையானவை என்பதை நன்கு அறிந்தவர்கள். ஆகவே அவர்கள் தினமும் வெண்ணெயை தங்களின் உதடுகளில் தடவி வருவார்களாம். அதனால் தான் அவர்கள் உதடு ஒருவித அழகிய நிறத்தில் உள்ளது.

பாரம்பரிய கண் மை

பாரம்பரிய கண் மை

பெரும்பாலான கேரள பெண்கள் தங்கள் கண்களை அழகுப்படுத்த கன்மாஷி என்று அழைக்கப்படும் ஒரு பாரம்பரிய கண் மையைப் பயன்படுத்துகிறார்கள். அதுவும் வீட்டிலேயே கண் மை தயாரித்து கேரளவாசிகள் பயன்படுத்துவார்கள். அதற்கு ஒரு மண் விளக்கை எடுத்து, அதில் நெய் ஊற்றி காட்டன் திரியை வைத்து, விளக்கிற்கு இரண்டு பக்கத்திலும் டம்ளரை வைத்து, அதன் மேல் ஒரு சில்வர் தட்டை கவிழ்த்து ஒரு 20-30 நிமிடம் வைக்க வேண்டும். பின் அந்த தட்டை எடுத்து, அதில் உள்ள கருமையான திட்டுக்களை ஸ்பூன் கொண்டு எடுத்து, அதில் சிறிது நெய் சேர்த்து கண் மை பதத்தில் கலந்து கொள்ள வேண்டும். இந்த கண் மையைத் தான் கேரளாவில் அதிகம் பயன்படுத்துவார்களாம்.

சந்தன ஃபேஷியல்

சந்தன ஃபேஷியல்

கேரள பெண்களின் அழகு ரகசியங்களுள் ஒன்று அவர்கள் பயன்படுத்தும் ஃபேஷியல். அதற்கு சிவப்பு சந்தனம், லோத்ரி மரப் பட்டை மற்றும் மேடர் ரூட் ஆகிய மூன்றையும் சம அளவில் எடுத்து அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின், சுத்தமான துணியை நீரில் நனைத்து துடைத்து எடுக்க வேண்டும். இந்த ஃபேஷியல் முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி, முகத்திற்கு உடனடி பொலிவைக் கொடுப்பதுடன், சரும நிறத்தையும் அதிகரிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Amazing Beauty Secrets Of Keralites Women In Tamil

Here are some amazing beauty secrets of keralites women in tamil. Read on...
Desktop Bottom Promotion