For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெறும் உப்பு தண்ணிய வெச்சு இந்த தழும்புகளை எப்படி சரிசெய்யலாம்? இதோ பாருங்க

முகப்பருவால் உண்டான வடு மற்றும் முகப்பரு புள்ளிகளைப் போக்குவதற்கு உப்புநீர் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது பற்றி தான் இங்கு பார்க்கப் போகிறோம். அது பற்றிய தொகுப்பு தான் இது.

|

முகத்தில் பருக்கள் தோன்றுவதற்கு வயது வரம்பு எதுவும் இல்லை. 12 வயது பிள்ளைக்கும் பருக்கள் தோன்றலாம், 24 வயது வாலிபருக்கும் பருக்கள் தோன்றலாம். அமெரிக்கர்களில் 17% பேருக்கு பருக்கள் இருப்பதாக ஒரு நம்பகமான தகவல் கிடைத்துள்ளது.

Saltwater

அவர்களுக்கு உண்டான பருக்கள் மிதமானது வரை தீவிரமானது வரை இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் பருக்கள் தோன்றுவதற்கான சரியான காரணம் இது வரை அறியப்படவில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உப்புத் தண்ணீர்

உப்புத் தண்ணீர்

சருமத்தில் கிருமிகளின் ஒருங்கிணைப்பு காரணமாக பருக்கள் ஏற்படலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். அழகு பராமரிப்பை அதிகம் போற்றும் இந்த உலகத்தில் பருக்களைப் போக்க பல்வேறு சிகிச்சைகள் உள்ளன. ஆனால் மிக எளிய முறையில் பருக்களுக்கான சிகிச்சைப் பெற உப்பு நீரைப் பயன்படுத்தலாம்.

எல்லோர் வீடுகளிலும் இருக்கும் ஒரு பொதுவான மூலப்பொருள் உப்பு. பருக்களைப் போக்குவதில் உப்பு நீர் நேர்மறை விளைவுகளை ஏற்படுத்துகிறதா என்பதைத் தெரிந்து கொள்ள இந்த பதிவைத் தொடர்ந்து படித்திடுங்கள்.

MOST READ: உலகிலேயே மிகப்பெரிய ஆணுறுப்பை கொண்டவர் இவர்தானாம்... அதுபற்றி என்ன சொல்றார் பாருங்க

மருந்துகள் வேண்டாம்

மருந்துகள் வேண்டாம்

சரும சிகிச்சைக்கு மாத்திரை மருந்துகள் பயன்படுத்துவதை பலரும் விரும்புவதில்லை. இந்த வகை மக்கள், உப்பு நீரை ஒரு சிறந்த மாற்றாக பயன்படுத்தலாம். இருப்பினும், உப்பு நீரைப் பயன்படுத்தி பருக்களைப் போக்குவதில் பல வழிகள் உள்ளன. அதில் ஒரு பொதுவான வழிமுறை, வெதுவெதுப்பான நீரில் உப்பு நீர் சேர்த்து பயன்படுத்துவது. இப்படி உப்பு சேர்த்து தயாரித்த நீரில், பஞ்சை நனைத்து முகத்தில் தடவலாம்.

இந்த நீரை, ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி ஸ்ப்ரே செய்வது அல்லது முகத்தில் தெளித்துவிட்டு கழுவுவது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். இப்படி செய்வதால் கண்களில் உப்பு நீர் நுழைந்து எரிச்சல் ஏற்படலாம். உப்பு நீரின் சிறப்பு குறித்த அறிவியல் ஆதாரம் எதுவும் நம்மிடம் இல்லை என்றாலும், பலர் இந்த வழிமுறையைப் பின்பற்றி நன்மை அடைந்துள்ளனர்.

எவ்வாறு வேலை செய்கிறது?

எவ்வாறு வேலை செய்கிறது?

சருமத்திற்கு உப்பு எந்த வழிகளில் நன்மை புரிகிறது என்பதை நாம் கண்டறிந்துள்ளோம். அதனைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவைப் படியுங்கள்.

எண்ணெய்யை வறண்டு போக வைக்கிறது

எண்ணெய்யை வறண்டு போக வைக்கிறது

சருமத்தில் உள்ள ஈரப்பதத்தின் அளவை உப்பு எளிய முறையில் குறைக்கிறது என்பது உண்மை. பொதுவாக, சருமத்தில் உள்ள அளவுக்கதிகமான எண்ணெய் , சரும துளைகளை அடைக்கிறது. இதன் விளைவாக கிருமிகள் வளர்ச்சி அடைகின்றன. சருமத்தில் உள்ள எண்ணெய் பதத்தை உப்பு குறைக்க உதவுவதால், பருக்கள் தொடர்பான பிரச்சனை குறைய வாய்ப்பு உள்ளது.

MOST READ: தீபிகா படுகோன் உடம்பு பளபளனு இருக்க அவங்க பண்ற அந்த மசாஜ்தான் காரணமாம்... என்ன மசாஜ் அது?

கிருமிகளைக் கட்டுப்படுத்த

கிருமிகளைக் கட்டுப்படுத்த

நமது உணவில் தினமும் உப்பு சேர்த்து உட்கொள்கிறோம். உணவின் புத்துணர்வைத் தக்க வைக்க உப்ப உதவுகிறது. உணவில் உப்பு சேர்க்கப்படுவதால் , அதில் கிருமிகள் தங்குவதற்கான வாய்ப்பு இல்லை.

சரும துளைகளை மூடுகிறது

சரும துளைகளை மூடுகிறது

உப்பால் கிடைக்கும் மற்றொரு நன்மை இது. சரும துளைகளை மூடுவதற்கு உப்பு உதவுவதால், எண்ணெய் மற்றும் கிருமிகள் உள்ளே நுழைவதற்கான இடம் கிடைப்பதில்லை. சருமத்தைத் தளர்த்துவதில், உப்பு ஒரு சிறந்த மூலப் பொருளாக இருப்பதாக நம்பப்படுகிறது. இந்த நிலையில், உப்பு சேர்க்கப்பட்ட நீர் எந்த ஒரு சிறப்பான தீர்வையும் கொடுப்பதில்லை, காரணம், நீரில் உப்பு கரைந்து விடுகிறது. உப்பு சேர்க்கப்பட்ட க்ரீம் நல்ல பலன்.

எல்லா வகை உப்பும் சிறந்த தீர்வைத் தந்திடுமா?

எல்லா வகை உப்பும் சிறந்த தீர்வைத் தந்திடுமா?

உப்பு நீர் அல்லது ஒரு குறிப்பிட்ட வகை உப்பு, பருக்களுக்கான சிறந்த தீர்வைத் தருமா என்பது சரியாக விளங்கவில்லை. பொதுவாக தூள் உப்பு, சருமத்தில் மிகவும் கடினத்தன்மையுடன் இருக்கும். மேலும் இந்த வகை உப்பில் ஐயோடின் அதிகம் இருப்பதால் உடலின் எண்ணெய்த்தன்மை அதிகரிக்கும்.

சிறந்த தீர்வாக நாம் கல் உப்பை அங்கீகரிக்கலாம். இந்த வகை உப்பில் ஐயோடின் இல்லாவிட்டாலும், சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கும் பல்வேறு இதர கூறுகள் இதில் உள்ளன. கடல் நீரிலிருந்து நேரடியாக எடுக்கப்பட்ட உப்பு , இந்த பிரச்சனையைப் போக்க ஒரு சிறந்த தீர்வாக உள்ளது. குழாய் நீரைவிட இந்த நீரில் மினரல் அளவு அதிகம் உள்ளது. நீங்கள் கடலோரப் பகுதிகளில் வசிக்கவில்லை என்றால், நீங்கள் பயன்படுத்தும் வழக்கமான நீரில் கல் உப்பு சேர்த்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

சோடியம் சேர்க்கப்பட்ட உப்பை விட, மெக்னீசியம் அடிப்படையில் உள்ள எப்சம் உப்பைப் பயன்படுத்தலாம். பலர் தாங்கள் குளிக்கும் நீரில் இந்த உப்பைப் பயன்படுத்தி பருக்களை விரட்ட முயற்சிக்கின்றனர்.

MOST READ: இந்த மாதிரி வர்றது எதோட அறிகுறினு தெரியுமா? தெரிஞ்சிக்கங்க... இப்படி சரிபண்ணுங்க

முன்னெச்சரிக்கை

முன்னெச்சரிக்கை

நீங்கள் உப்பு நீர் பயன்படுத்தி பருக்களை போக்க எண்ணுகையில், அதனைக் கவனமாகப் பயன்படுத்த வேண்டும். பாதிக்கபட்ட இடத்தில் உப்புநீர் படும்போது, அதிக வலியை உண்டாக்கும். பாதிக்கப்பட்ட பகுதி மேலும் மோசமடையக் கூடும்.

உப்பு சருமத்தில் மேலும் வறட்சியை உண்டாக்குவதால், வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு உப்பு ஒரு ஏற்ற பொருள் அல்ல. சருமத்தின் ஈரப்பதம் குறையும் போது, சருமம் சிவந்து போகும் வாய்ப்பு உண்டு.

உங்கள் சருமத்தில் உப்பு அதிக அளவு சேர்வதால், குளிக்கும்போது நீங்கள் பயன்படுத்தும் சோப் எந்த ஒரு பலனையும் வெளிப்படுத்துவதில்லை. சோப் சருமத்தை சுத்தம் செய்ய முடியாத நிலை ஏற்படும்போது, பருக்கள் குறையும் வாய்ப்பும் ஏற்படுவதில்லை.

பருக்கள் மற்றும் உப்பு நீர் - இவை இரண்டிற்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உள்ளது. இதன் நன்மைகளை இன்று பலரும் அறிந்துள்ளனர்.

உப்பு நீருடன் தேன்

உப்பு நீருடன் தேன்

பருக்களைப் போக்க ஒரு சிறந்த தீர்வு, தேன். கல் உப்பு இரண்டு ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். இதனுடன் நான்கு ஸ்பூன் தேன் சேர்த்துக் கொள்ளவும். தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யபப்ட்ட சருமத்தில், இந்த கலவையைத் தடவவும். பதினைந்து நிமிடம் கழித்து, முகத்தை மென்மையாக மசாஜ் செய்து பின்பு தண்ணீரால் முகத்தைக் கழுவவும்.

தேங்காய் எண்ணெய் சேர்க்கவும்:

தேங்காய் எண்ணெய் சேர்க்கவும்:

தேங்காய் எண்ணெய் சருமத்திற்கு பல நன்மைகளைத் தருவதை நாம் அனைவரும் அறிவோம். ஆகவே, இந்த எண்ணெயுடன் உப்பை சேர்த்து ஒரு மாஸ்க் தயாரித்து பயன்படுத்துவதால், சருமத்திற்கு ஈரப்பதம் கிடைக்கிறது. இந்த மாஸ்க் கொண்டு சருமத்தை மசாஜ் செய்து, ஐந்து நிமிடங்கள் அப்படியே விடவும். பிறகு தண்ணீரால் முகத்தைக் கழுவவும். வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த சிகிச்சை முறையாகும். உப்பு சருமத்தின் வறட்சியை அதிகரிக்கும் அதே நேரம், எண்ணெய் ஈரப்பதம் தந்து சருமதிற்கு சமநிலைத் தருகிறது.

இப்படி, எல்லா வயதினரும், பருக்களுக்கான சிகிச்சையில் உப்பு நீரைப் பயன்படுத்தலாம். முகப்பருவிற்கு உப்பு நீரைப் பயன்படுத்துவது குறித்த விஞ்ஞான பூர்வ உண்மைகள் நமக்கு தெரியவில்லை என்றாலும், சரியான வழியில் முயற்சிக்கும்போது நிச்சயம் உப்பு நீர் நல்ல பலனைத் தருகிறது. தண்ணீரில் உள்ள அதிக அளவு உப்பு, சருமத்தில் உள்ள கிருமிகளை அழிக்க உதவுகிறது.

MOST READ: ஆஸ்துமா எவ்வளவு நாளில் மரணத்தை ஏற்படுத்தும்... எப்படி தடுக்கலாம்?

நன்மைகள்

நன்மைகள்

சருமத்திற்கு கல் உப்பு புத்துணர்ச்சியைத் தருகிறது. சரும துளைகளை அடைக்கும் எண்ணெய்களை கரைக்க உப்பு உதவுகிறது. அதே நேரம் அதிக அளவு உப்பைப் பயன்படுத்துவதால், சரும எரிச்சல் ஏற்படலாம். இதன் காரணமாக, சரியான அளவு உப்பு பயன்படுத்தப்பட வேண்டும்.

பருக்கள் மிக அதிக அளவு இருந்தால், தோல் சிகிச்சை நிபுணரைத் தொடர்பு கொள்ளுங்கள். முகத்தில் 20 கரும்புள்ளிகள் மற்றும் வெண்மையான புள்ளிகள் இருப்பது ஒரு மிதமான அளவைக் காட்டும்.

இந்த எண்ணிக்கையை விட அதிக அளவு அதாவது 40 பருக்கள் முகத்தில் இருந்தால் இதனைத் தீவிர நிலை என்று அறிந்து கொள்ள முடியும். மேலும் பருக்கள் அளவு பெரியதாக இருந்தால் தோல் சிகிச்சை நிபுணர் சரியான சிகிச்சை முறையை உங்களுக்கு பரிந்துரைப்பார். அதே நேரம் எளிமையான வீட்டுத் தீர்வுகளையும் நீங்கள் முயற்சிக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Use Saltwater For Acne Scars & Pimple Marks

Here we explaing how to use saltwater for acne scars & pimple marks.
Story first published: Friday, April 12, 2019, 11:19 [IST]
Desktop Bottom Promotion