For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்களே, முகம் முழுக்க பருக்கள் இருக்கிறதா..?இனி இதனை போக்க இதை செய்யுங்க போதும்..!

|

ஒவ்வொருவருக்கும் ஒரு தனி பிரச்சினை இருக்கத்தான் செய்யும். ஒருவருக்கு அலுவலக பிரச்சினை இருந்தால், வேறொருவருக்கு வீட்டில் பிரச்சினை இருக்கும். ஒருவருக்கு உடல் ரீதியாக பிரச்சினை இருந்தால், இன்னொருவருக்கு மன ரீதியாக கோளாறுகள் இருக்கும். அந்த வகையில் முகத்தில் உள்ள பிரச்சினைகளும் அடங்கும். ஒரு சிலருக்கு முகம் கருமையாக இருக்கிறதே என்கிற கவலை, வேறு சிலருக்கு முகம் ஒல்லியாக இருக்கிறதே என்கிற கவலை.

Tips To Prevent And Reduce Acne Breakouts In Men

ஆனால், பெரும்பாலானோருக்கு முகத்தில் இருக்க கூடிய பிரச்சினை முகப்பரு தான். முகத்தில் சிறிது கொப்புளம் போல வந்தாலும் நம்மால் இதை தாங்கி கொள்ள முடியாது. இந்த பதிவில் ஆண்களின் முகத்தில் வர கூடிய முகப்பருக்களை எவ்வாறு நீக்க வேண்டும் என்பதையும், இனி பருக்கள் வராமல் தடுப்பது எப்படி என்பதையும் அறிந்து நலம் பெறுவோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பருக்கள் ஏன் உருவாகிறது..?

பருக்கள் ஏன் உருவாகிறது..?

முகப்பருக்கள் முகத்தில் வருவதற்கு சில முக்கிய காரணிகளை கூறலாம். முகத்தில் பயன்படுத்தும் கிரீம்கள், ஹார்மோன்களின் மாற்றம், அதிகமான எண்ணெய் உணவுகள், சுற்றுசூழல் காரணத்தால், அதிக மன அழுத்தம்... இப்படி காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம். இதன் தாக்கத்தால் முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் அதிக படியான எண்ணெய் பசையை வெளியிட செய்து பருக்களை உருவாக்குகிறது.

சுத்தம் சோறு போடும்..!

சுத்தம் சோறு போடும்..!

நாம் எந்த அளவுக்கு சுத்தமாக இருக்கிறமோ, அதனை பொருத்தே பருக்கள் நம் முகத்தில் வருமா..? வராத..? என்பதை சொல்ல முடியும். ஒரு நாளைக்கு குறைந்தது 2 முறையாவது முகத்தை கழுவ வேண்டும். இல்லையேல் முகத்தில் அழுக்குகள், எண்ணெய் பசை அப்படியே சேர்ந்து பருவாக உருவாகி விடும்.

சுத்தம் செய்யலாமா..!

சுத்தம் செய்யலாமா..!

முகத்தை அசுத்தம் ஆக்குவதே இந்த தூசுகளும், காற்று மாசுக்களுமே. முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்க இந்த முறை நன்கு உதவும். இதனை பருக்கள் உள்ள இடத்தில தடவி வந்தாலே போதும்.

தேவையானவை :-

பேக்கிங் சோடா 1/2 ஸ்பூன்

எலுமிச்சை சாறு 1/2 ஸ்பூன்

தேன் 1 ஸ்பூன்

செய்முறை :-

செய்முறை :-

முதலில் ஒரு பாத்திரத்தில் பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும். பிறகு இவற்றுடன் சிறிது தேன் சேர்த்து நன்கு கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகத்தின் அழுக்குகள்,பருக்கள் எல்லாம் நீங்கி விடும்.

MOST READ: எமன் உங்களை நெருங்கிவிட்டார் என்பதை உணர்த்தும் அறிகுறிகள்

எண்ணெய் பசை நீக்கவும்...

எண்ணெய் பசை நீக்கவும்...

முகத்தில் பருக்களை உருவாக்கும் இந்த எண்ணெய் பசையை முதலில் நாம் நீக்க வேண்டும். அதற்கு இந்த குறிப்பு அருமையான தீர்வை தரும்.

தேவையனாவை :-

ஓட்ஸ் 1 ஸ்பூன்

பிரவுன் சுகர் 1 ஸ்பூன்

கடற் உப்பு 1/2 ஸ்பூன்

காஃபி தூள் 1 ஸ்பூன்

பாதாம் 2

செய்முறை :-

செய்முறை :-

முதலில் ஓட்ஸை நன்றாக அரைத்து கொள்ளவும். பிறகு அவற்றுடன் பாதாம், பிரவுன் சுகர், கடல் உப்பு, காபி தூள் சேர்த்து கொண்டு நன்றாக அரைத்து கொள்ளவும். தேவைக்கு சிறிது ரோஸ் நீர் சேர்த்தும் கொள்ளலாம். இந்த கலவையை முகத்தில் தடவி வந்தால் எண்ணெய் பசை நீங்கி, பருக்கள் உருவாவதை தடுக்கலாம்.

எளிய முறை வேண்டுமா..?

எளிய முறை வேண்டுமா..?

முகத்தின் பருக்களை காணாமல் போக செய்ய இந்த எளிமையான முறை உதவும். அதற்கு முதலில் ஆப்பிள் சிடர் வினிகர் 1 ஸ்பூன் எடுத்து கொண்டு, அதனை 2 ஸ்பூன் நீருடன் சேர்த்து கலந்து கொண்டு முகத்தில் தடவி வந்தால் பருக்கள் எல்லாம் மறைந்து போகும். மேலும், முகமும் சுத்தமாக மாறி பொலிவு தரும்.

வேறொரு வழி...

வேறொரு வழி...

பருக்களை ஒழிக்க இந்த வழியும் நன்றாக பயன்படும். இந்த முறையை வாரத்திற்கு 1 முறை செய்து வந்தாலே முகத்தில் பருக்கள் இல்லாமல் இளமையாக இருக்கலாம். இதனை அடைய இந்த குறிப்பு உதவும்.

தேவையானவை :-

முல்தானி மட்டி 1 டீஸ்பூன்

பாதாம் பவ்டர் 1 டீஸ்பூன்

ரோஸ் நீர்

MOST READ: ஜப்பானியர்கள் நீண்ட ஆயுளுடனும், கச்சிதமான எடையுடனும் இருக்க காரணம் என்னனு தெரியுமா..?

செய்முறை :-

செய்முறை :-

முதலில் பாதாமை காய வைத்து கொண்டு அவற்றை பொடி ஆக்கி கொள்ளவும். அடுத்து, இவற்றுடன் முல்தானி மட்டி சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு இந்த இரு பொடிகளுடன் சிறிது ரோஸ் நீர் சேர்த்து முகத்தில் பூசவும். இவ்வாறு வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், ஆண்களின் முகத்தில் உள்ள பருக்கள் மறைந்து போகும்.

சருமத்தில் பருக்களின் வடு மறைய...

சருமத்தில் பருக்களின் வடு மறைய...

முகத்தில் பருக்கள் வந்த பிறகு அந்த இடத்தில அவற்றின் வடுக்கள் அப்படியே இருக்கும். இதனை மறைய வைக்க ஒரு சிறந்த வழி இருக்கிறது. அதற்கு முதலில் ஓட்ஸை எடுத்து கொண்டு, நன்றாக அரைத்து கொள்ளவும். பிறகு அவற்றுடன் யோகர்ட் சேர்த்து முகத்தில் பூசி மசாஜ் செய்தல் பருக்கள் வந்த வடுக்கள் மறைய தொடங்கும்.

இது போன்ற பயனுள்ள புதிய தகவல்களை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் அழகிற்கும் உதவுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Tips To Prevent And Reduce Acne Breakouts In Men

Maintaining a healthy skincare routine can prevent acne breakouts.
Story first published: Tuesday, October 9, 2018, 17:33 [IST]
Desktop Bottom Promotion