For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முகப்பரு, கரும்புள்ளி, சரும கருமையைப் போக்க தக்காளியை எப்படி பயன்படுத்தணும் தெரியுமா?

|

ஒவ்வொரு பெண் மட்டுமின்றி ஆணும் சந்திக்கும் ஓர் சரும பிரச்சனை தான் முகப்பரு. இந்த முகப்பரு வந்தால், அது போகும் போது சருமத்தில் அசிங்கமான தழும்புகளை விட்டுச் செல்லும். இது முகத்தின் அழகையே பாழாக்கும் வகையில் இருக்கும். சிலருக்கு முகத்தில் பருக்கள் ஏராளமாக இருக்கும். இதனால் அத்தகையவர்கள் தங்கள் அழகை நினைத்து தன்னம்பிக்கை இழந்தவர்களாக இருப்பவர். சில சமயங்களில் பருக்கள் கடுமையான வலியை உண்டாக்கும். வலியுடனான பருக்கள் வந்தால், இன்னும் கவனமாக அதைப் போக்க முயல வேண்டும். இல்லாவிட்டால், அதில் உள்ள சீழ் முகம் முழுவதும் பருக்களைப் பரவச் செய்துவிடும்.

முகத்தில் வரும் பருக்களைப் போக்க பல்வேறு பொருட்கள் கடைகளில் விற்கப்படுகின்றன. அந்த அனைத்து பொருட்களுமே பருக்களைப் போக்குவதில்லை. ஆனால் இதற்கு ஓர் அற்புதமான இயற்கை தீர்வு உள்ளது. அதுவும் விலை மலிவான பொருள் நம் வீட்டுச் சமையலறையிலேயே உள்ளது. அது தான் தக்காளி. இது முகத்தில் உள்ள பருக்களை போக்கும். இதில் வைட்டமின் சி, ஃபோலிக் ஆசிட் மற்றும் கரோட்டினாய்டு போன்றவை அதிகம் நிறைந்துள்ளது. தக்காளியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், சருமத்தின் நிறத்தை மேம்படுத்தும். மேலும் இது சருமத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல், ஒரு நல்ல பாதுகாப்பை வழங்கும்.

how to use tomatoes to treat skin problems

தக்காளியில் இருக்கும் ஆன்டி-ஏஜிங் பொருள், முதுமைக் கோடுகள் மற்றும் சரும சுருக்கங்களைப் போக்க உதவியாக இருக்கும். அதோடு தக்காளியில் உள்ள உட்பொருட்கள், கருவளையங்கள், கரும்புள்ளிகள், வெயிலால் கருமையான சருமம் போன்றவற்றையும் சரிசெய்யும். பல காஸ்மெடிக் பொருட்களில் தக்காளி சேர்க்கப்படுவதற்கு காரணம், அதில் உள்ள சாலிசிலிக் அமிலம் தான். சரி, இப்போது தக்காளியை எப்படியெல்லாம் பயன்படுத்தினால் சரும பிரச்சனைகள் அகலும் என்று காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பருக்களைப் போக்கும் தக்காளி ஃபேஸ் பேக்

பருக்களைப் போக்கும் தக்காளி ஃபேஸ் பேக்

தேவையான பொருட்கள்:

* தக்காளி - 1

* ஜொஜோபா ஆயில் - 2-3 துளிகள்

* டீ-ட்ரீ ஆயில் - 3-5 துளிகள்

பயன்படுத்தும் முறை:

* ஒரு பௌலில் தக்காளியின் கூழை எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதில் எண்ணெய்களை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* பிறகு அந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியைச் சுற்றி தடவி காய வைக்க வேண்டும்.

* மாஸ்க் நன்கு காய்ந்த பின், குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

* இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 1-2 முறை பயன்படுத்த நல்ல பலன் கிடைக்கும்.

கரும்புள்ளிகளைப் போக்கும் தக்காளி ஸ்கரப்

கரும்புள்ளிகளைப் போக்கும் தக்காளி ஸ்கரப்

தேவையான பொருட்கள்:

* தக்காளி - 1

* தயிர் - 1 டீஸ்பூன்

* ஓட்ஸ் - 1 டேபிள் ஸ்பூன்

பயன்படுத்தும் முறை:

* தக்காளியை அரைத்து ஒரு பௌலில் எடுத்துக் கொள்ளவும்.

* பின் அத்துடன் தியிர் மற்றும் ஓட்ஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* பின்பு அந்த கலவையை வெதுவெதுப்பாக சூடேற்றி, வெதுவெதுப்பான நிலையில் முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி, நன்கு காய வைக்க வேண்டும்.

* 10-15 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரால் கழுவுங்கள். முக்கியமாக முகத்தைக் கழுவும் போது, முகத்தை மசாஜ் செய்தவாறு கழுவுங்கள்.

* இந்த ஃபேஸ் ஸ்கரப்பை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்துவது நல்லது.

கருமையான புள்ளிகளைப் போக்கும் தக்காளி ஃபேஸ் பேக்

கருமையான புள்ளிகளைப் போக்கும் தக்காளி ஃபேஸ் பேக்

தேவையான பொருட்கள்:

* தக்காளி கூழ் - 1 டேபிள் ஸ்பூன்

* எலுமிச்சை சாறு - 2-3 துளிகள்

பயன்படுத்தும் முறை:

* ஒரு பௌலில் தக்காளி கூழ் மற்றும் எலுமிச்சை சாற்றினை ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அந்த கலவையை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும்.

* 5-10 நிமிடம் கழித்து, நன்கு காய்ந்த பின், குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

* இறுதியில் துணியால் அப்பகுதியைத் துடைத்து, நல்ல தரமான மாய்ஸ்சுரைசர் எதையேனும் பயன்படுத்த வேண்டும்.

* இந்த ஃபேஸ் மாஸ்க்கை தினமும் பயன்படுத்தினால், ஒரு நல்ல மாற்றத்தை விரைவில் காணலாம்.

கருவளையங்களைப் போக்கும் தக்காளி ஃபேஸ் மாஸ்க்

கருவளையங்களைப் போக்கும் தக்காளி ஃபேஸ் மாஸ்க்

தேவையான பொருட்கள்:

* கற்றாழை ஜூஸ் - 1 டீஸ்பூன்

* தக்காளி கூழ் - 1 டீஸ்பூன்

பயன்படுத்தும் முறை:

* ஒரு பௌலில் கற்றாழை ஜூஸ் மற்றும் தக்காளி கூழை ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

* பின்பு அந்த கலவையை கண்களைச் சுற்றி கருவளையங்கள் உள்ள இடத்தில் தடவ வேண்டும்.

* 10 நிமிடம் கழித்த பின், நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

* இப்படி தினமும் செய்து வந்தால், கருவளையங்கள் வேகமாக மறைந்துவிடும்.

பொலிவான சருமத்திற்கான தக்காளி ஃபேஸ் மாஸ்க்

பொலிவான சருமத்திற்கான தக்காளி ஃபேஸ் மாஸ்க்

தேவையான பொருட்கள்:

* தக்காளி ஜூஸ் - 2 டேபிள் ஸ்பூன்

* தேன் - 2 டேபிள் ஸ்பூன்

பயன்படுத்தும் முறை:

* இந்த இரண்டு பொருட்களையும் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

* பிறகு அந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

* இந்த மாஸ்க்கை அடிக்கடிப் பயன்படுத்தினால், சரும பொலிவு மேம்பட்டு காணப்படும்.

சரும கருமையைப் போக்கும் தக்காளி ஃபேஸ் பேக்

சரும கருமையைப் போக்கும் தக்காளி ஃபேஸ் பேக்

தேவையான பொருட்கள்:

* நற்பதமான தக்காளி - 1

* தயிர் - 1/2 கப்

பயன்படுத்தும் முறை:

* மிக்ஸியில் தக்காளியைப் போட்டு நன்கு அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

* பின் அதில் தயிர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின்பு அந்த கலவையை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும்.

* 10-15 நிமிடம் நன்கு ஊற வைத்த பின், குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Use Tomatoes To Treat Skin Problems

Want to know how to use tomatoes to treat skin problems? Read on to know more...
Story first published: Tuesday, September 18, 2018, 17:42 [IST]
Desktop Bottom Promotion