For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இத மட்டும் செய்ங்க... எவ்வளவு கருப்பா இருந்தாலும் ஒரே வாரத்துல உங்கள கலராக்கிடும்...

கடுமையான வெயிலால் எல்லோருடைய சருமமும் பாதிக்கப்படுவது இயல்பு தான் என்று விட்டவிட முடியுமா என்ன... அத அப்படியே தொடர்ந்து நம்முடைய சருமத்தை பாழாக்கிவிடும். இதற்கு வேர்வையும் முக்கிய காரணம் தான். அதனால்

|

யாருக்குத்தான் வெள்ளையாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்காது. எல்லோருக்குமே தங்களைத் தாங்களே கண்ணாடி முன் நின்று ரசித்துக் கொள்ள மிகப் பிடிக்கும். அதேசமயம் கொஞ்சம் கருப்பாக இருந்துவிட்டால் போதும். நான் மட்டும் ஏன் இவ்வளவு கருப்பாக இருக்கிறேன் என்று புலம்ப ஆரம்பித்துவிடுவார்கள்.

 how to get glowing skin and get rid black skin tone in summer

அந்த புலம்பல் அதிகமானால் அதுவே தாழ்வு மனப்பான்மையாக மாறிவிடுகிறது. இதெல்லாற்றையும் தூக்கிப் போடுங்கள். அதேபோல வெட்டியாக பார்லருக்கு செலவிடுவதை விட, வீட்டில் ஓய்வாக இருக்கும்போது சில குட்டி குட்டி விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டாலே போதும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கொளுத்தும் வெயில்

கொளுத்தும் வெயில்

கோடை காலம் வேறு தொடங்கிவிட்டது. இப்போது வெயிலில் இருந்து சருமத்தை பாதுகாக்க வேண்டும் என்ற கவலை இன்னும் அதிகமாகியிருக்கும். கவலையே படாதீங்க... எவ்வளவு வெயில் அடிச்சா நமக்கென்ன... நம்ம சருமம் கருத்துப்போகாம எப்பவும் பப்பாளிப்பழம் மாதிரி பளபளன்னு இருக்க நம்மகிட்ட தான் நிறைய ஐடியா இருக்கே... அப்புறம் நம்ம ஏன் கவலைப்படணும்... கவலைப்படறத நிறுத்திட்டு கீழே சொல்றத செய்ங்க... தங்கம் மாதிரி மின்ன ஆரம்பிச்சுடுவீங்க...

பளபள சருமத்துக்கு

பளபள சருமத்துக்கு

தயிர் அரை ஸ்பூன், எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன், ஆரஞ்சு பழச்சாறு ஒரு ஸ்பூன் காரட்சாறு ஒரு ஸ்பூன், ரோஸ் வாட்டர் ஒருஸ்பூன், ஈஸ்ட் பவுடர் அரை ஸ்பூன், இவை எல்லாவற்றையும் குழைத்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வரை வைத்திருந்து, பின் கழுவி விடவும். முகம் உடனே பளப்பளப்பாக மாறிவிடும். எங்காவது பார்ட்டிக்கு போகும் முன் இப்படி செய்து பாருங்கள். நீங்களே அசந்து போயிடுவீங்க.

பாலாடை

பாலாடை

தயிர் ஏடு அல்லது பால் ஏடு சிறிதளவு எடுத்துக்கொண்டு கால் ஸ்பூன் மஞ்சள் தூளை அதனுடன் சேர்த்து நன்கு நைசாகக் கலந்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். அந்த கலவையை முகத்தில் பூசி பத்து நிமிடங்கள் வரை மசாஜ் செய்து, பின் 20 நிமிடங்கள் வரை முகத்தில் அப்படியே வைத்திருக்கவும். இதை தினமும் செய்து வந்தாலே போதும் எப்படிப்பட்ட கருமையும் நீங்கி விடும்.

 கரும்புள்ளி நீங்க

கரும்புள்ளி நீங்க

ரோஸ் வாட்டர் ஒரு ஸ்பூன், கிளிசரின் ஒரு ஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு ஒருஸ்பூன் தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் ஒருஸ்பூன் எல்லாவற்றையும் நன்றாகக் கலக்கி முகத்தில் பூசி, மசாஜ் செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், கரும்புள்ளிகளும் நீங்கி பளபளப்பாக இருக்கும்.

மிருதுவான சருமம்

மிருதுவான சருமம்

நல்ல பழுத்த வாழைப்பழத்தை நன்றாக மசித்து அதில் ரோஸ் வாட்டரைக் கலந்து நன்றாக முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். அதை அப்படியே ஒரு மணி நேரம் காயவிட்டு பின் தண்ணீர் தொட்டு 5 நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள். அதன்பின் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும். இது முகத்தில் இருக்கும் பருக்களை அகற்றி சருமத்தை மென்மையாக்கும்.

முக சுருக்கம்

முக சுருக்கம்

சிலருக்கு கண்ட கண்ட க்ரீம்களையும் போட்டு நெற்றி, கண்ணுக்கு கீழ்ப்பகுதி, தாடை, கன்னப்பகுதிகளில் தோல் சுருங்கியிருக்கும். சிலருக்கு இளம் வயதிலேயே முதிர்ந்த தோற்றம் உண்டாகியிருக்கும். அப்படி சுருக்கம் உள்ளவர்கள் கிளிசரினும், தேனும் கலந்து ரிங்கிள்ஸ் இருக்கும் இடத்தில் தடவி, கொஞ்ச நேரம் மசாஜ் செய்து இரவு முழுக்க விட்டு விட்டு காலையில் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவவும். முகம் இளமையும், வசீகரமும் பெறும்.

 சாத்துக்குடி சாறு

சாத்துக்குடி சாறு

சாத்துக்குடி சாறில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்திற்கு நல்ல திக் ஆக பூசி 20 நிமிடம் கழித்து அலம்பி விடவும். கொஞ்ச நாள் இப்படி செய்தால் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மறையும். முகம் பொலிவு பெறும். முகத்தில் பருக்கள் நிறைய இருந்தால் அந்த சாறுடன் சில துளிகள் தண்ணீர் விட்டு கலந்து கொள்ளுங்கள். முகத்தில் எரிச்சல் ஏற்படாமல் இருக்கும்.

பப்பாளி சாறு

பப்பாளி சாறு

பப்பாளிப்பழ சாறுடன் காய்ச்சாத பால் அல்லது தயிரின் மேல் இருக்கும் ஆடையை எடுத்து நன்றாக பேஸ்ட்போல் கலந்து முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மேல் போட்டு வந்தால் ஆரம்ப நிலையில் இருக்கும் சுருக்கங்கள் காணாமல் போய் விடும். மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புதுப் பொலிவடையும்.

எண்ணெய் சருமத்துக்கு

எண்ணெய் சருமத்துக்கு

வெள்ளரிக் காயையும், காரட்டையும் மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து பேஸ்ட் செய்து, அதை முகத்தில் பூசி வந்தால் முகம் எண்ணை வழியாமல் இருக்கும். இதை தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கரும் புள்ளிகள் கரும் மச்சங்கள் மறைய ஆரம்பிக்கும்.

ஆரஞ்சுப்பொடி

ஆரஞ்சுப்பொடி

பொதுவாக வெயில் காலத்தில் நாம் மிக அதிகமாகவே ஆரஞ்சுப்பழங்கள் சாப்பிடுவோம். சாப்பிட்டுவிட்டு தோலை தூக்கி எறிந்து விடுவோம். ஆனால் அப்படி செய்யாமல் அந்த தோலை நன்கு உலர்த்தி ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து பாலுடன் கலந்து சருமத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வந்தால், வெயிலில் ஏற்பட்ட கருமை மறையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

how to get glowing skin and get rid black skin tone in summer

The harsh weather makes the skin rough and dull, and causes the pores to be clogged with sweat dust and dirt. Special attention should be given to the skin to keep it healthy and glowing during summer.
Desktop Bottom Promotion