For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரே வாரத்தில் நீங்கள் இளமையாக மாறனுமா..? இதோ அதற்கு வழி கோல்டன் ஃபேஷியல்.."!

சரும பிரச்சனை நம்மில் பலருக்கு உள்ளது.அதை எளிமையாக சரி செய்ய வழிகள்.

|

முகம் அழகற்று உள்ளதா..? சருமம் சொர சொரப்பாக இருக்கிறதா..? இதோ உங்களுக்கான எளிய வழி "கோல்டன் ஃபேஷியல்".இந்த முறையை எளிதாக வீட்டில் இருந்தபடியே செய்யலாம். அதற்கான வழிமுறைகள் இதோ.."!
இதை பின்பற்றினால் எளிதில் முகம் மிக அழகுடன் இருக்கும்.

இன்றைய வாழ்க்கை முறையில் நமது முக ஆரோக்கியம் மிகவும் இன்றியமையாதது.
வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த வாழ்க்கை முறையில் நம்மில் பலர் நம் முக அழகை கண்டுகொள்ளாமலேயே விட்டுவிடுகின்றனர்.அஃது அவர்களின் மன திடத்தையும் ஒரு வகையில் பாதிக்க செய்கிறது. இந்த பிரச்சனையில் இருந்து விடுபட பல வழி முறைகள் உள்ளது.இருப்பினும் அதில் சிறந்த ஒன்று வீட்டிலேயே தயாரிக்கும் இந்த கோல்டன் ஃபேஷியல் தான்.

facial

கோல்டன் ஃபேஷியல் முறையை பயன்படுத்தி முகத்தை உடனே பொலிவுடனும், மிருதுவாகவும் இருக்க செய்யலாம்.இந்த கோல்டன் ஃபேஷியல் கிட்டை கடைகளிலும் பெற்று கொள்ளலாம். இருப்பினும் வீட்டிலேயே தயாரிப்பது என்பது மிகவும் எளிமையான மற்றும் சிறந்த வழி.

அதற்கு முதலில் சிலவற்றை எடுத்து கொள்ள வேண்டும்.

தேவையான பொருட்கள் :-

- ஆரஞ்ஜ்
- கற்றாழை
- முல்தானிமட்டி
- காட்டன் துணி
- தண்ணீர்

செய்முறை:-

முதலில் ஆரஞ்சை எடுத்துக்கொண்டு அதனை பாதியாக அறுத்துக்கொள்ளவும். பின்பு 1 கற்றாழையை எடுத்து அதனில் உள்ள ஜெல்லி போன்ற பகுதியை மட்டும் தனியாக எடுக்கவும். அதன்பிறகு இந்த 3 முறையை கடைபிடிக்கவும்.

(1)ஒத்தடம் :-

மிதமான சூட்டில் தண்ணீரை கொதிக்கவைத்து அதனை காட்டன் துணியில் ஒத்தி முகம் முழுக்க மசாஜ் செய்ய வேண்டும் . இதன்மூலம் முகத்தில் உள்ள சிறு சிறு துளைகள் விரிவடைந்து காற்றோட்டத்தை ஏற்படுத்தும். மற்றும் நாம் போடும் இந்த பேக் நன்கு முகத்தில் இறங்கும். அதனால் இந்த கோல்டன் ஃபேஷியல் அதிக பலனை தரும்.

(2)முகப்பூச்சு :-

அடுத்து முல்தானிமட்டியை ஆரஞ்சின் மேல் தடவி முகத்தில் பூசி கொள்ளவும்.
குறிப்பாக எண்ணெய் சருமம் உள்ளோர்க்கு முல்தானிமட்டி சிறந்த ஒன்று. மற்றும் வறண்ட சருமம் உள்ளவர்கள் கோதுமை மாவை பயன்படுத்தலாம். இதனை கண்கள், மூக்கு, நெத்தி, தாடை ஆகிய அனைத்து பகுதிகளிலும் நன்கு தடவி மசாஜ் செய்யவும்.பின்பு 5 நிமிடம் கழித்து முகத்தை உலர்த்த தண்ணீரில் கழுவி விடவும்.

(3) ஈரப்பதமாக்குதல்:-

அடுத்து கற்றாழை ஜெல்லை 1/4 டீஸ்பூன் எடுத்துக்கொண்டு, அத்தோடு ஆரஞ்ஜ் சாற்றை 5 முதல் 10 சொட்டு சேர்த்து நன்கு கலக்கவும். அதன்பிறகு அதனை முகத்தில் பூசி நன்றாக மசாஜ் பண்ணவும்.

பிறகு இதனை 10 நிமிடம் கழித்து மிதமான தண்ணீரில் கழுவி விடவும். கடைசியாக காட்டன் துணியில் துடைத்துவிடவும்.

இவ்வாறு வாரத்திற்கு 1 முறை செய்து வர சொர சொரப்பாக இருந்த முகம் மிகவும் பொலிவுடனும், அழகாகவும் மாறும்.

பயன்கள்:-

கோல்டன் ஃபேஷியல் பல பயன்களை கொண்டுள்ளது.இந்த வீட்டிலேயே தயாரிக்கும் கோல்டன் ஃபேஷியல் முற்றிலும் பக்கவிளைவு இல்லாதது.அதனால் இதனை வாரத்திற்கு 2 முறைகூட பயன்படுத்தலாம்.

ஆரஞ்சில் உள்ள வைட்டமின் சி மற்றும் சிட்ரிக் ஆசிட் முக அழகை மேலும் மெருகேற்றிக்கொடுக்கும்.இஃது முக பளபளப்பை அதிகரிக்கும்.

சருமம் மினுமினுப்பாக இருப்பதற்கு இந்த கோல்டன் ஃபேஷியல் முற்றிலும் ஏற்ற வழி.

முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் இந்த கோல்டன் ஃபேஷியல் மூலம் எளிதில் குறையும்.

இதனை பார்ட்டி போன்ற விழா நேரங்களின் போது 1 மணி நேரத்திற்கு முன்பே முகத்தில் பூசி மசாஜ் செய்தால் நீங்கள்தான் அழகோ அழகு.

வறட்சி சருமம் கூட உலர்ந்த சருமம் ஆக மாறக்கூடும்.

அதுமட்டும் இல்லாமல் இந்த கோல்டன் ஃபேஷியல் பயன்படுத்துவோர் மிக மிக இளமையாகவும், அழகு மேனியோடும் "என்றும் 16" போல் பார்ப்பதற்கு அட்டகாசமாக இருப்பீர்கள்.

Read more about: facial face beauty tips அழகு
English summary

Golden facial prepared by home methodology

Beauty is one of the vital factor in our life,easy to crack this by Golden facialFocus keywords: facial, beauty tips,beauty,face
Story first published: Tuesday, July 10, 2018, 16:15 [IST]
Desktop Bottom Promotion